பாறைகளை பார்த்தானொருவன்....
அம்மிகளும் ஆட்டுக்கற்களும் தெரிந்தன
- - கல்தச்சர்.
கிரானைட் தகடுகளும் கற்களும் தெரிந்தன
- - - பொறியாளர்
சிற்பங்களும் அழகு சிலைகளும் தெரிந்தன
--சிற்பி.
இளைஞர்களை பார்த்தானொருவன்...
வாக்காளர்கள் கண்ணுக்கு தெரிந்தனர்
- - அரசியல்வாதி..
அறிஞர்களும் அறிவியல் மேதைகளும் தெரிந்தனர்
--ஆசிரியர்.
No comments:
Post a Comment