சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 22 May 2025

பெண்ணைப் போற்றிடுவோம்...


விவாகரத்து செய்தாளை
வாழத்தெரியாதவளென்று வசைபாடிடுவார்...

குடும்பமாய் வாழ்வாளை கனவனை கைக்குள்போட்ட
கைகாரியென்பார்.... 

பலாத்காரம் செய்யப்பட்டாளை
அணிந்திருந்த
ஆடை எனனவென்பார்....

ஆண் பிள்ளை பெறாவிடில்
அதுவும் தவறு
அவளுடைய தென்பார்...

திருமணமின்றி
கருவுற்றால்
கெட்டுப்போனவளென்பார்..

 சுதந்திரமானவளென்றால்
அவள் ஒரு
விபச்சாரியென்றிடுவார்....

 கெட்ட குழந்தையென்றால்
சரியில்லாத வளர்ப்பு
தாயின் தவறென்பார்....

விளையாட்டில்
விருப்பமென்றால் நோக்கம் அதுவல்லவென்பார்...

இளவயதில் திருமணம்
செய்யாதவளை
பொறுப்பற்றவளென்பார்...

திருமணமானால் பெண்ணை   கணவனின் சொத்தென்பார்..

கைம்பெண் என்றாளோ
கணவனின்  சொத்துக்களை கவர்ந்தாளென்பார்....

நினைவு கூர்வாளை
மறைந்த கணவனைப்
போற்றிடவில்லையென்பார்...

தனிமையில் இருந்தாலோ,
சிடுமூஞ்சியென்றிடுவார்....
 மனம் திறந்து பேசுவாளை
ஓட்டை வாயென்பார்...

ஏமாந்ததவளென்றால்
தவறு அவளுடையதென்பார்,
ஏமாந்தது ஆணெனில்
சாகசக்காரியென்பார்...

அத்தனையும் நிகழ்ந்தது 
ஆணுக்கென்றால்
அதற்குமோர் நீதி சொல்வார். 
 
அனைவருக்குமான நீதி   
 அமைந்திடும் நன்னாளே அகிலத்துக்குபொன்னாள்... 

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...