சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Sunday, 4 May 2025

 


இன்று என் குடும்பத்தாருடன் மதுரை சென்று வாகனத்தில் இருந்து புதுக்கோட்டை திரும்பி வந்து கொண்டிருந்தேன். கடுமையான வெயில்... குளிர்சாதனம் பொருத்தப்பட்ட வண்டிக்குள்ளேயே அமர முடியவில்லை. ஓரிடத்தில் இரண்டு சிறு பையன்கள் ஒரு பெரியவருடன் சேர்ந்து நின்று  நுங்கு விற்றுக் கொண்டிருந்தார்கள் ஏதாவது வாகனங்கள் மெதுவாகச் செல்லும்போது நுங்கு விற்க முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். என் மகன் அதைப் பார்த்த உடனே வண்டியை நிறுத்தி நுங்கு வாங்க ஆரம்பித்தான்.

நான் மெல்ல அந்த பையன்களோடு பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன் என்று படித்துக் கொண்டிருக்கிறீர்கள் அப்பா அம்மா என்று சாதாரணமாக பேசுகிறார்கள் ஒரு பையன் ஆறாம் வகுப்பிலிருந்து ஏழாம் வகுப்பு செல்கிறான் இன்னொரு பையன் ஐந்திலிருந்து ஆறு செல்கிறான் அப்போது ஏழாம் வகுப்பு செல்லக்கூடிய அந்த பையனிடம் திருக்குறள் ஏதாவது சொல்லப்பா என்றேன்... லேசான தயக்கத்தோடு ஆரம்பித்தவன் கடகடவென்று 20 திருக்குறளுக்கு மேலாக ஒப்பித்தான்.

கடும் வெயிலிலும் கண்கள் பணித்தன... பட்டமங்கலம் என்னும் கிராமத்தில் அரசு பள்ளியில் படித்துக் கொண்டிருக்க கூடிய ஒரு எளிய குடும்பத்தைச் சேர்ந்த மாணவன் இவ்வளவு அழகாக சர்வ சாதாரணமாக திருக்குறள்களை ஒப்பித்தது மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருந்தது.படித்தவர்கள், நடுத்தர வர்க்கத்தினர் தாய்மொழியை புறந்தள்ளிவிட்டு தமிழ் மொழி அழிந்தாலும் பரவாயில்லை என்று ஆங்கில மோகம் கொண்டு அலையும் போது, எங்கிருந்தோ வந்த இந்தியை இங்கே திணித்தே தீருவோம் என்று கடும் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கக் கூடிய ஆதிக்க வெறிகொண்ட ஆட்களுக்கு மத்தியில் திருக்குறளை கிராமத்து மாணவன் அழகாக சொன்னது மகிழ்ச்சியாக இருந்தது.  நிச்சயமாக தமிழ் மொழியை காக்க நேசிக்க சுவாசிக்க அடுத்த தலைமுறை கட்டாயம் வரும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டது. 

2 comments:

  1. கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நம்மிடம் ஒற்றுமை இல்லை எனில் இந்தி வரும் சமஸ்கிருதம் வரும்

    ReplyDelete
  2. அருமை

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...