சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 10 May 2025

வரலாற்றில் இன்று.

 வரலாற்றில் இன்று.

10 மே 2025-சனி.


1497 : நாடுகாண் பயணி அமெரிகோ வெஸ்புச்சி தனது முதல் பயணத்தை ஆரம்பித்தார்.

1503 : கொலம்பஸ் கேமன் தீவுகளை அடைந்து அங்கிருந்த கடல் ஆமைகளை கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்டுகஸ் எனப் பெயரிட்டார்.

1655 : இங்கிலாந்து ஸ்பெயினிடம் இருந்து ஜமைக்காவை கைப்பற்றியது.

1768 : மூன்றாம் ஜார்ஜ் மன்னரை பெரிதும் விமர்சித்து எழுதிய

ஜான் வில்கேஸ் என்பவர் சிறை பிடிக்கப்பட்டார். 

இதையடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.

1774 : பதினாறாம் லூயி பிரான்ஸின் மன்னராக முடிசூடினார்.

1796 : பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கு எதிரான போரில் வெற்றி 

பெற்றார்.

2,000 ஆஸ்திரியர்கள் கொல்லப்பட்டனர்.

1824 : லண்டன் தேசிய அருங்காட்சியகம் பொதுமக்களுக்காக திறந்து விடப்பட்டது.

1849 : நியூயார்க்கில் நாடக அரங்கில் இரு நடிகர்களுக்கு இடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் கொல்லப்பட்டனர்.

1857 : உத்தரப் பிரதேசம், மீரட் நகரில் பிரிட்டிஷ் - கிழக்கிந்தியக் கம்பெனிக்கு எதிராக சிப்பாய்கள் கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள்.

இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.

1871 : பிரான்சுக்கும், புரூஷியாவுக்கும் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததை அடுத்து முடிவுக்கு வந்தது.

1877 : ருமேனியா, துருக்கியிடமிருந்து விடுதலையை அறிவித்தது.

1901 : லண்டனில் நூற்றுக்கணக்கான விஞ்ஞானிகள் முன்னிலையில் இந்திய அறிவியலார் ஜெகதீஸ் சந்திரபோஸ் தாவரங்களுக்கும் உணர்ச்சிகள் உள்ளன என்பதை நிரூபித்துக் காட்டினார்.

1908 : அன்னையர் தினம் முதன் முதல் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவில் கொண்டாடப்பட்டது.

1922 : கிங்மன் பாறையை அமெரிக்கா கைப்பற்றியது.

1940 : வின்ஸ்டன் சர்ச்சில் பிரிட்டிஷ் பிரதமர் ஆனார்.

இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனி தவறுதலாக ஜெர்மனி நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.

இரண்டாம் உலகப் போர் :- பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க், ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.

இரண்டாம் உலகப்போர் :- பிரிட்டன் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.

1941 : இரண்டாம் உலகப் போர் :- ஜெர்மனியின் வான்படைத் தாக்குதலில் லண்டனின் மக்களவை சேதத்துக்குள்ளாகியது.

1946 : அமெரிக்கா முதல் முறையாக வீ-2 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியது.

ஜவஹர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆனார்.

1975 : ஜப்பானில் சோனி நிறுவனம் பீட்டாமேக்ஸ் வீடியோ கேஸட் ரெக்கார்டரை அறிமுகப்படுத்தியது.

1976 : இந்திய - இலங்கை எல்லை ஒப்பந்தம் அமலுக்கு வந்தது.

1990 : ஆந்திராவில் வீசிய புயலில் 85 பேர் உயிரிழந்தனர்.

1993 : தாய்லாந்தில் பொம்மைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பெரும்பாலும் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

1994 : நெல்சன் மண்டேலா தென்னாப்ரிக்காவின் ஜனாதிபதியாக பதவியேற்றார்.

1996 : எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேற்ற வீரர்கள் உயிரிழந்தனர்.

1997 : ஈரானில் நிகழ்ந்த 7.3 ரிக்டர் நிலநடுக்கத்தில் 1,567 பேர் உயிரிழந்தனர்.

2,300 பேர் காயமடைந்தனர்.

2005 : ஜார்ஜியாவின் திபிலீசி நகரில் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் மக்கள் மத்தியில் உரையாற்றுகையில் அவர் மீது ஒரு கைக்குண்டு வீசப்பட்டது.

ஆனாலும் அது வெடிக்கவில்லை.

2013 : அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டிடம் மேற்கத்திய நாடுகளின் மிக உயர்ந்த கட்டிடம் ஆனது.


முதன்முதலாக சூரிய ஒளி மண்டலத்தில் காணப்படும் சூரியப்புள்ளிகளை

(Sunspots) சைனாவில் Han Dynasty காலத்திய வானியியலாளர்கள் கண்டுபிடித்ததாக

பதிவான தினம் இன்று.

10 மே கி.மு. 28.


பிரபல இத்தாலிய நாடுகாண் பயணி

Christopher Columbus,

தனது நாடுகாண் பயணத்தில் கரீபியன் கடல்பகுதி தீவுகளை அடைந்து அங்கு பெருவாரியான கடல் ஆமைகளை கண்டதால் அத்தீவிற்கு Las Tortugas (தற்போதைய பெயர் Cayman Islands) என்று பெயரிட்ட தினம் இன்று.

10 மே 1503.


காற்றாடியை பறக்கவிட்டு

சோதனை செய்தபோது மின்னலை கம்பிகளின் வழியே கடத்தமுடியும்,

மின்கலங்களில் சேமிக்க முடியும் என, Benjamin Franklin கண்டுபிடித்த தினம் இன்று.

10 மே 1752.

இதன்படி இவரே முதன்முதலாக மின்சாரத்தை அறிந்தவராக அறியப்படுகிறார். இச்சோதனையில் சுமார் 40 அடி கம்பியில் மின்னலைக் கடத்தி சோதனை செய்து காண்பித்தார்.


இங்கிலாந்தின் புகழ்பெற்ற லண்டன் தேசிய அருங்காட்சியகம்

The National Gallery

திறக்கப்பட்ட தினம் இன்று.

10 மே 1824.

தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை புகழ்பெற்ற இந்திய அறிவியலாளரும், கண்டுபிடிப்பாளருமான, 
மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த Sir Jagadish Chandra Bose சர்வதேச விஞ்ஞானிகளுக்கு முன் செயல்படுத்தி காட்டிய தினம் இன்று.
10 மே 1901.

ஜகதீஷ் சந்திரபோஸ் மிகச்சிறந்த இருநூல்களை இயற்றி உலகப்புகழ்பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒருநூல்.

தாவரங்களின் நரம்புச்செயலமைவு (The Nervous Mechanism of Plants) என்பது மற்றொருநூல். இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார். 

மேலும் பரிசோதனை ஒன்றையும் ஜகதீஷ் சந்திரபோஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide) என்ற நச்சுத்தனிமம் எலிக்கு ஊசிமூலம் செலுத்தப்பட்டது, தாவரம் ஒன்றுக்கும் ஊசிமூலம் செலுத்தப்பட்டது, எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக்கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது.

தென்னாப்பிரிக்காவின் முதலாவது கறுப்பின அதிபராக Nelson Mandela பதவியேற்ற தினம் இன்று.
10 மே 1994.

1994 மே 10 ம் தேதி இவர் தென்னாப்பிரிக்காவின் அதிபர் ஆனார். 
அதிபர் ஆனபின், 1998 ம் ஆண்டு முதல் தென்னாப்பிரிக்கப்பள்ளிகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை கற்றுக்கொடுக்க ஏற்பாடு செய்தார். 

1999 ல் பதவியைவிட்டு விலகினார். இவர்  2 வது முறை அதிபர் பதவிக்கு போட்டியிட மறுத்துவிட்டார். 

வரலாற்றில் இன்று மே 10.

@@@@@@@@@@@@@@@@

1908 - அன்னையர் நாள்...

முதன்முறையாக அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் கிராஃப்டன் என்ற இடத்திலுள்ள தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு, ஃபிலடெல்ஃபியாவில் உள்ள ஓர் அரங்கில் விழா ஆகியவற்றுடன் கடைப்பிடிக்கப்பட்ட நாள்

இந்த தேவாலயத்தில்தான் அன்னையர்நாள் உருவாகக் காரணமாக இருந்த அன்னா ஜார்விசின் தாயார், வேலைசெய்யும் குழந்தைகளுக்கான ஞாயிற்றுக்கிழமைப் பள்ளியில் கல்வி கற்பித்து வந்தார். உண்மையில் அன்னா ஜார்விஸ் திருமணமும் செய்துகொள்ளவில்லை, குழந்தையும் பெற்றுக்கொள்ளவில்லை. என்றாவது ஒரு நாள், யாராவது ஒருவர், தாய்மார்களின் பங்களிப்புக்காக, இருக்கிற, இறந்துவிட்ட அனைத்துத் தாய்களையும் கவுரவிக்க வேண்டும் என்று அவர் தாயார், சமூக சேவகரான ஆன் ஜார்விஸ் கூறிக்கொண்டேயிருந்தாராம். 1868இல் அன்னாவின் தாயாரும், 1872இல் ஜூலியா ஹோவி என்பவரும் அன்னையர்நாளுக்கான முயற்சிகளை மேற்கொண்டு தோற்றிருந்தனர். 1905 மே 9இல் தாயார் மறைந்துவிட, அவரது ஆசையை மறக்காத அன்னா, தேவாலயத்தில் அவர் நினைவு நாளில் மலர்களை வழங்குதில் தொடங்கி, அன்னையருக்கான நாள் ஒன்று கொண்டாடப்படவேண்டும் என்று அரசுக்குக் கடிதங்கள் எழுதி அதில் வெற்றியும் பெற்றார். 1910இல் வர்ஜீனியா மாநிலம் இதை ஏற்றது. தொடர்ந்து அமெரிக்காவின் பல மாநிலங்களும் கடைப்பிடிக்கத் தொடங்க, 1914இல் அமெரிக்க அரசு மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை தேசிய அன்னையர் நாளாக அறிவித்தது. பல்வேறு நிறுவனங்களும் வணிக நோக்கில் இதைப் பிரபலப்படுத்த, தற்போது உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. அதற்கும் முன்பே, 17,18 நூற்றாண்டுகளில் தாய்மை ஞாயிறு என்ற பெயரில் உயிர்ப்பு ஞாயிற்றுக்கு 40 நாட்கள் முன்பாகக் கடைப்பிடிக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதைத்தான் தற்போது இங்கிலாந்து போன்ற நாடுகள் பின்பற்றுகின்றன. கி.மு. 250 காலத்திலேயே ரோமானியர்கள், ஆண்டுதோறும் சிபிலி என்னும் தாய்மைக் கடவுளுக்கு எடுத்த விழா, அதற்கும் முன்பே, கிரேக்கர்கள் ரியா என்னும் தாய்மைக் கடவுளுக்கு எடுத்த விழா ஆகியவையும் அன்னையரைக் கொண்டாடும் விழாக்களாகவே குறிப்பிடப்படுகின்றன.

@@@@@@@@@@@@@@

வரலாற்றில் இன்று மே 10.

ஒளியின் அலைக் கோட்பாட்டை நிலைநிறுத்துவதில் குறிப்பிடத்தக்க பங்காற்றிய அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் பிறந்த தினம் இன்று (மே 10, 1788)...


அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல் (Augustin-Jean Fresnel) மே 10, 1788ல் நார்மண்டியின் ப்ரோக்லியில் பிறந்தார். இவருடைய தொடக்ககாலக் கல்வி மிக மந்தமாகவே இருந்தது. எட்டு வயதாக இருக்கும்போதுகூட இவருக்கு வாசிக்கத் தெரியாது. கட்டிடக் கலைஞர் ஜாக் ஃப்ரெஸ்னலின் நான்கு மகன்களில் இரண்டாவதாக இருந்தார். அவரது மனைவி அகஸ்டின், நீ மேரிமி. 1790 ஆம் ஆண்டில், புரட்சியைத் தொடர்ந்து, ப்ரோக்லி யூரின் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ஆனார். குடும்பம் இரண்டு முறை இல் செர்பர்க் மற்றும் ஜாக்ஸின் சொந்த ஊரான மாத்தியூவுக்குச் சென்றது. அங்கு மேடம் ஃப்ரெஸ்னல் ஒரு விதவையாக 25 ஆண்டுகள் கழித்தார். ஃப்ரெஸ்னல் சகோதரர்கள் ஆரம்பத்தில் தங்கள் தாயார் வீட்டுக்குச் செல்லப்பட்டனர். நோய்வாய்ப்பட்ட அகஸ்டின் மனப்பாடம் செய்ய விரும்பவில்லை. ஆனால் எட்டு வயது வரை அவர் படிக்கத் தொடங்கிய பிரபலமான கதை சர்ச்சைக்குரியது. ஒன்பது அல்லது பத்து வயதில் அவர் மரக் கிளைகளை பொம்மை வில்லாகவும் துப்பாக்கிகளாகவும் மாற்றும் திறனைத் தவிர்த்து வேறுபடவில்லை. அது மிகவும் சிறப்பாக செயல்பட்டது. 


1801 ஆம் ஆண்டில், அகஸ்டின் லூயிஸிற்கான நிறுவனமாக கெய்னில் உள்ள எக்கோல் சென்ட்ரலுக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அகஸ்டின் தனது செயல்திறனை உயர்த்தினார். 1804ன் பிற்பகுதியில் அவர் எக்கோல் பாலிடெக்னிக் நிறுவனத்தில் நுழைவுத் தேர்வில் 17 வது இடத்தைப் பிடித்து ஏற்றுக்கொள்ளப்பட்டார். 1808 ஆம் ஆண்டில் எகோல் பாலிடெக்னிக் அங்கு சிறிது நேரம் மோசமான உடல்நலம் இருந்தபோதிலும் வரைதல் மற்றும் வடிவவியலில் சிறந்து விளங்கினார்.  அவரது முதல் ஆண்டில் அட்ரியன்-மேரி லெஜென்ட்ரே முன்வைத்த வடிவியல் சிக்கலுக்கான தீர்வுக்காக அவர் ஒரு பரிசை எடுத்தார். 


இரண்டாம் நிலை அலைகளின் ஹ்யூஜென்ஸின் கொள்கையையும், அளவு அடிப்படையில் யங்கின் குறுக்கீட்டின் கொள்கையையும் வெளிப்படுத்துவதன் மூலமும், எளிய வண்ணங்கள் சைனூசாய்டல் அலைகளைக் கொண்டிருப்பதாகக் கருதுவதன் மூலமும், ஃப்ரெஸ்னல் நேராக விளிம்புகளால் மாறுபாட்டின் முதல் திருப்திகரமான விளக்கத்தை அளித்தார். இதில் செங்குத்து பரவலின் முதல் திருப்திகரமான அலை அடிப்படையிலான விளக்கம் உட்பட. பகுதி ஒரே அதிர்வெண் ஆனால் வெவ்வேறு கட்டங்களின் சைனூசாய்டல் செயல்பாடுகளைச் சேர்ப்பது வெவ்வேறு திசைகளைக் கொண்ட சக்திகளைச் சேர்ப்பதற்கு ஒப்பானது என்பதற்கு ஒரு சான்றாகும். ஒளி அலைகள் முற்றிலும் நேர்மாறானவை என்று மேலும் கருதுவதன் மூலம், துருவமயமாக்கலின் தன்மை, வண்ண துருவமுனைப்பின் வழிமுறை மற்றும் இரண்டு வெளிப்படையான ஐசோட்ரோபிக் ஊடகங்களுக்கு இடையிலான இடைமுகத்தில் பரிமாற்றம் மற்றும் பிரதிபலிப்பு குணகங்களை ஃப்ரெஸ்னல் விளக்கினார்.


கால்சைட்டுக்கான திசை-வேகம்-துருவமுனைப்பு உறவைப் பொதுமைப்படுத்துவதன் மூலம், பைஆக்சியல் வகுப்பின் இருமடங்கு-ஒளிவிலகல் படிகங்களில் (ஹ்யூஜென்ஸின் இரண்டாம் நிலை அலை முனைகள் அச்சு சமச்சீரற்றவை அல்ல) ஒளிவிலகல் கதிர்களின் திசைகளையும் துருவமுனைப்புகளையும் கணக்கிட்டார். அவரது தூய்மையான-குறுக்கு-அலை கருதுகோளின் முதல் வெளியீட்டிற்கும், பைஆக்சியல் பிரச்சினைக்கு அவரது முதல் சரியான தீர்வைச் சமர்ப்பிப்பதற்கும் இடையிலான காலம் ஒரு வருடத்திற்கும் குறைவாகவே இருந்தது. பின்னர், அவர் நேரியல் துருவமுனைப்பு, வட்ட துருவப்படுத்தல் மற்றும் நீள்வட்ட துருவப்படுத்தல் ஆகிய சொற்களை உருவாக்கினார். வட்ட துருவமுனைப்பின் இரு திசைகளுக்கான பரவல் வேகத்தில் உள்ள வித்தியாசமாக ஆப்டிகல் சுழற்சியை எவ்வாறு புரிந்து கொள்ள முடியும் என்பதை விளக்கினார். மேலும் பிரதிபலிப்பு குணகம் சிக்கலானதாக இருக்க அனுமதிப்பதன் மூலம் ஃப்ரெஸ்னல் ரோம்பில் சுரண்டப்பட்ட மொத்த உள் பிரதிபலிப்பு காரணமாக துருவமுனைப்பு மாற்றம், நிறுவப்பட்ட கார்பஸ்குலர் கோட்பாட்டின் பாதுகாவலர்கள் பல நிகழ்வுகளின் அவரது அளவு விளக்கங்களை மிகக் குறைவான அனுமானங்களுடன் பொருத்த முடியவில்லை.


1860 களில் மேக்ஸ்வெல்லின் மின்காந்தக் கோட்பாட்டின் மூலம் ஒளியின் அலைக் கோட்பாடு அடங்கிய பின்னர், ஃப்ரெஸ்னலின் பங்களிப்பின் அளவிலிருந்து சில கவனம் திசை திருப்பப்பட்டது. ஃப்ரெஸ்னலின் இயற்பியல் ஒளியியலை ஒன்றிணைப்பதற்கும் மேக்ஸ்வெல்லின் பரந்த ஒருங்கிணைப்புக்கும் இடையிலான காலகட்டத்தில், சமகால அதிகாரியான ஹம்ப்ரி லாயிட், ஃப்ரெஸ்னலின் குறுக்கு-அலை கோட்பாட்டை "இயற்பியல் அறிவியலின் களத்தை அலங்கரித்த மிகச் சிறந்த துணி" என்று விவரித்தார். ஒளியியலில் ஆராய்ச்சி ஒளியின் அலைக் கோட்பாட்டை ஏறக்குறைய ஒருமனதாக ஏற்றுக்கொள்ள  வழிவகுத்தது.

No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...