கிடைக்கும் வேலை நல்ல வேலையா, மோசமான வேலையா, சமூகத்திற்கு நன்மை அளிக்குமா அல்லது கெடுதல் அளிக்குமா என்று தீர்மானிக்கும் உரிமை , வேலையில்லாமல் அவதிப்படும் யாருக்கும் கிடைப்பதில்லை. மனைவி, குழந்தையுடன் வேலையில்லாமல், குடியிருக்கும் வீட்டிற்கு மூன்று மாதமாக வாடகைகூட கொடுக்க முடியாமல் அலைந்து கொண்டிருக்கும் ஃபர்ஹாத் கிடைக்கும் வேலை எதுவானாலும் பரவாயில்லை என்ற மனநிலைக்கு வந்து விடுகிறார்.
கதை கண்ணோட்டம்
இந்த படம் ஃபர்ஹாத்தை மையமாகக் கொண்டுள்ளது. சட்டம் பயின்ற மாணவரான ஃபர்ஹாத்திற்கு வேறு வேலை கிடைக்காததால் கள்ளத்தனமாக மது விற்கும் வேலையை மேற்கொள்கிறார். துளி கூட மது வாசனை பிடிக்காத அவர் வேறு வழியில்லாமல் அந்த தொழிலை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. தனது மாமனார், மனைவி எல்ஹாம் உட்பட யாருக்கும் தெரியாமல் உணவுப் பொருட்களை விநியோகிக்கும் தொழில் இருப்பதாக அவர்களை ஏமாற்றிவிட்டு, மது செய்கிறார். அவர் அமெரிக்க கிரீன் கார்டு பெற்று தனது மனைவி எல்ஹாம் மற்றும் மகன் நவிட்டுடன் தனது பன்முகத்தன்மை விசாவைப் பெறும் முயற்சியாக துருக்கிக்குச் சென்றார் செல்கிறார்.அவர் கடைசியாக ஒரு திருமண விருந்துக்கு சென்று சேர்ந்த மதுவின் விஷத்தன்மை காரணமாக பலர் இறக்கின்றனர். பலருக்கு கண் பார்வை பறிபோகின்றது. இந்த நிகழ்வு எதுவும் தெரியாமலேயே அவர் விசாரிக்கும் முயற்சியில் துருக்கிக்கு குடும்பத்தோடு சென்று விடுகிறார். துருக்கியில் இருக்கும்போது, தான் கொண்டு சேர்த்த மதுபானங்களின் விஷத்தை காரணமாக பலருக்கு மரணம் மற்றும் குருட்டுத்தன்மை ஏற்பட்டது.
ஃபர்ஹாத் குற்ற உணர்வு மற்றும் குழப்பத்தில் சிக்கித் தவிக்கிறார். மதுவிலக்கு போலீசார் கிடுக்கிப்பிடி போட்டு கள்ள மது தயாரித்தவரை கைது செய்கின்றனர். அவர் தப்பித்துக் கொள்வதற்காக ஃபர்ஹாத் மீது கைகாட்டி, திசைதிருப்பி விடுகிறார். மிகவும் நேர்மையான ஃபர்ஹாத்தின் மனைவியால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீண்டும் இரானுக்கு திரும்ப வலியுறுத்துகிறார்.
விஷம் பற்றிய செய்தி ஃபர்ஹாத்தை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. ஏனெனில் எதிர்பாராத சம்பவத்தால் அமெரிக்காவிற்கு குடிபெயரும் அவரது கனவுகள் அச்சுறுத்தலுக்கு ஆளாகின்றன. .
நேர்மையான மனிதரான ஃபர்ஹாத்திற்கு குற்ற உணர்ச்சி ஒரு புறம், வெளிநாடு செல்லும் கனவு சிதைவுறுவதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலை மறுபுறம், தன் மனைவி மாமனாரிடம் மறைந்து அதனால் ஏற்பட்ட சங்கடமான நிலை, பையன் மீதான பாசம் எல்லாம் சேர்ந்து அவரை ஆட்டி படைக்கிறது.
பொருளாதார நெருக்கடி, வேலை இல்லா திண்டாட்டம், மதுவினால் ஏற்படும் சமூக பிரச்சனை அனைத்தையும் பிரதிபலிக்கக்கூடிய மிக அற்புதமான சமூகம் உணர்வுள்ள திரைப்படம் ஆகும்.
ஃபர்ஹாத்தாக நடித்திருக்கும் பெட்ராம்ஷெரிஃபி மிக அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்.
எல்ஹாமாக நடித்த எல்ஹாம் நமு தனது கனவனோடு ஏற்பட்ட முரண்பாடுகள், மது விற்பனையில் கனவன் ஈடுபட்டதை அறிந்து படும் ஏமாற்றங்கள் அனைத்தையும் சிறப்பாக காட்டியிருக்கிறார்.
நவீட்டாக வரும் குழந்தை நட்சத்திரமாக சாம்வாலிபூர் நடித்துள்ளார்.
வெளியான ஆண்டு: 2018
இயக்குனர்: கோஸ்ரோ மசுமி
No comments:
Post a Comment