தென் மாவட்டங்களில் பிரசித்தி பெற்ற ஒரு தலைவர், தனது சாதி இன மக்களை பட்டியலினத்திலிருந்து எடுத்துவிட்டால், தீண்டாமைகளிலிருந்து தப்பித்து விடலாம் என்று நம்புகிறார்.. அல்லது தனது இன மக்களை நம்ப வைத்துக்கொண்டிருக்கிறார்....
இதுபோல இன்னும் ஏராளமான மக்கள் தங்களுடைய இனத்தை சற்று மேல உயர்த்தி விட்டால் சாதிய கொடுமைகள் நீங்கிவிடும் என்று நம்புகிறார்கள் இது உண்மையா?! ..
சாதிய அடுக்கு முறை உள்ளவரை தீண்டாமை என்பது பிற சாதியினரை தாழ்வாக நினைப்பதும் நடத்துவதும் நீங்காது..
என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம். எனது மனைவி ஒரு தொண்டு நிறுவனத்தின் வேலை செய்த போது, ஒரு கிராமத்தில் பள்ளர் குடியிருப்பில் குடியிருந்தேன். அந்த கிராமத்தில் உள்ளவர்கள் நீங்கள் இருந்து அங்கு குடியிருக்கலாமா, இங்கே வேறு வீடு தருகிறோம் என்றார்கள்.
நான் எல்லோரும் மனிதர்கள் தானே எங்கிருந்தால் என்று சிரித்துக் கொண்டே சென்று விட்டேன்.
ஒருமுறை ஒரு பறையர் குடியிருப்புக்கு சென்றபோது அவர்கள் வீட்டில் சாப்பிட்டு விட்டு வந்தேன். இதை கேள்விப்பட்டவுடன் பள்ளர் குடியிருப்பில் உள்ள தலைவர் கேட்டார்.
இருந்திருந்து பறையர் வீட்டில் சாப்பிடலாமா என்றார்.
நான் இந்த ஜாதிகளை குறிப்பிடுவது தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக மட்டும்தான். தாழ்த்தி அல்ல...
இவ்வாறு சாதியின் பெயரை குறிப்பிடுவதற்கே வருந்துகிறேன்..
ஆக எல்லோருக்குமே அடுத்த ஜாதியை பற்றி மட்டமான எண்ணம் தான்.உதாரணமாக முக்குலத்தோரை எடுத்துக் கொண்டால் அவர்களுக்குள்ளேயே உள்பிரிவுகளில் ஒருவரை ஒருவர் மட்டும் தட்டிக் கொண்டிருப்பார்கள்.
அனைத்து சாதியினருக்கும் இந்த உணர்வுகள் உண்டு. ஒருத்தர் பட்டியல் இனத்தில் இருப்பதாலோ, மிகவும் பிற்படுத்தப்பட்டவராக இருப்பதாலோ, பிற்படுத்தப்பட்டவராக இருப்பதாலோ, இடைநிலை சாதியாக இருப்பதாலோ, முற்பட்ட சாதி இருப்பதாலோ, எந்த வகையிலும் இவர் உயர்வானவர், இவர் தாழ்வானவர் என்று கருதுவரேயானால் அவர் மனித குலத்திற்கே விரோதி.
No comments:
Post a Comment