ஒரு காலத்தில் நன்கு படித்தவர்கள், அறிவாளிகள் மக்களை அரசியலுக்கு அழைத்தார்கள், சிந்திக்கச் சொன்னார்கள்.
நம்மை தான் அழைக்கிறார்கள் என்று நன்கு படித்தவர்கள், நல்லவர்கள், அரசியலுக்கு வந்தார்கள்.
அவர்களும் எவ்வளவோ கருத்துக்களை மக்களுக்கு எடுத்துரைத்தார்கள். முரண்பாடான கருத்துக்களை, மாறுபாடான கருத்துக்களை கூட கூறினார்களே தவிர கேனத்தனமாக உளறவில்லை.
இன்னாளில் எல்லாமே மாறிப்போனது . அரசியல் என்றாலே, சம்பாதிப்பது பணம் சேர்ப்பது, பொய் பேசுவது என்றாகி விட்டது. அது போகட்டும். நாம் அதைப்பற்றி அதிகமாக பேச போவதில்லை.
ஆனால் இந்நாளில் அரசியலில் உளறுகிறவர்களுக்கு பஞ்சமில்லை என்பதுதான் வேடிக்கையும் துயரமுமான விஷயம்.
படிக்கப் போகையிலேயே குடித்துவிட்டு போனதாக ஒரு தலைவர் உளறுகிறார் என்றால், கைதட்டி, விசிலடித்து மகிழ்வதற்கு தம்பிமார்கள் நிறைந்து விட்டார்கள்.
எந்த நூற்றாண்டிலோ இறந்து போன சிவாஜி இங்கு வந்து சாமி கும்பிட்டார் என்று ஒருவர் உளறினால் நம்புவதற்கு படித்த கூட்டம் உண்டு.
கம்பராமாயணத்தை இயற்றியது சேக்கிழார் என்று ஒரு உலக மகா மேதை உளறினால் அதையும் ரசிப்பதற்கு ஆட்கள் உண்டு.
1950 இல் செத்துப்போன வல்லபாய் பட்டேல், 1952 இல் பிரதமராக வராமல் தடுக்க நேரு சதி செய்தார் என்றால் அதையும் நம்புவதற்கு கூட்டம் உண்டு
1975 ல் காமராஜர் இறந்த போது 1968 லேயே காலமான அண்ணாதுரை கதறி கதறி அழுதார் என்று ஒருவர் சொன்னால் அதை உண்மை என்று நம்புவாரும் உண்டு.
1954 இல் காமராஜர் இலவச கல்வி மதிய உணவு வழங்கிய போது 23 வயதான கலாம் ஆரம்பப் பள்ளியில் படித்தார் என்று அளந்துவிட்டால் நம்புவதற்கு ஆளும் உண்டு...
1950 லே செத்துப்போன பட்டியல் வல்லபாய் பட்டேல் 1960 ல் சிந்து நதி ஒப்பந்தத்தை எதிர்த்தார் என்று நாடாளுமன்றத்திலேயே உளறினால் ஆமென்று அடித்துச்சொல்வோருமுண்டு...
அரசியலோ ஆன்மீகமோ.. ஆயிரம் கருத்து மாறுபாடுகள் வரும்... போகும்..
ஆனால் இங்கு சொல்லப்பட்டு இருப்பவை யாவும் உளறல்களை பற்றி மட்டுமே.தனி மனித விருப்பு வெறுப்பு சார்ந்ததல்ல.
No comments:
Post a Comment