சினிமா கழுதை (மெஷ்மேஷே)
ஈரான் (2019) தலைப்பை பார்த்தவுடன் சினிமாவை கழுதை என்று சொல்லுகிறோமோ என்று நினைத்து விட வேண்டாம். இந்த கதையின் கதாநாயகன் கழுதை அவ்வளவுதான். அக்ரஹாரத்தில் கழுதை என்ற ஒரு தமிழ் படம் வந்தது அல்லவா, அது போல சினிமாவில் வரும் கழுதையைப் பற்றிய இரானிய திரைப்படக் கதை.
சாதாரணமாக வீட்டில் நாய், கோழி, பூனை, குதிரை என்று பல விலங்குகளை வளர்ப்போம். அவை நன்கு பராமரிக்கவும் செய்வோம். ஆனால் கழுதையை வளர்ப்பவர்கள், அதனுடைய பயன்பாடு முடிந்த பிறகு அதை சுமையாக கருதுவார்கள். அப்படி ஒரு கழுதையை மிருக காட்சி சாலையில் விலங்குகளுக்கு உணவாக விற்க ஒரு பெரியவர் போகிறார். பேரன் தடுத்து அதைக் கொல்ல வேண்டாம் என்று காட்டிலேயே விட்டு விட்டு வந்து விடுகிறார்கள்.
ஒரு சிறிய படக்குழு, கிராமப்புற ஈரானில் குறைந்த பட்ஜெட்டில் மனிதகுலத்திற்கான செய்தியைக் கொண்ட, மனிதாபிமானத்தை போதிப்பதாய் திரைப்படம் ஒன்றினை தயாரிக்கிறது.
இதை முதல் முறையாக பெண் இயக்குனர் (சஹார் சப்பாக் செரஷ்ட்) வழிநடத்துகிறார். ஸ்கிரிப்டில் சில காட்சிகளுக்கு ஒரு தொழில்முறை கழுதை தேவை, பல கிராமப்புற மக்கள் வீட்டிற்கு ஒரு கழுதையாவது வைத்திருப்பதால் இது ஒரு பிரச்சினையாக உள்ளது இருக்காது என்று நினைத்தார்கள்,
ஆனால் உண்மையில் தயாரிப்பு மேலாளர் கவாரிக்கு (போரியா ஷகிபாய்) இது ஒரு பிரச்சனையாக இருக்கிறது. அவர்களால்
பட்ஜெட் மற்றும் நேர வரம்புகள், நடைமுறை சிக்கல்கள்ஆகியவை ஒரு தொழில்முறை கழுதைக் கண்டுபிடிப்பதை கடினமாக்குகின்றன.
தயாரிப்பு குழுவினர் எங்கு தேடினாலும் பயன்பாட்டில் வைத்திருப்பவர்கள் தங்கள் கழுதைகளை விற்பதற்கு தயாராக இல்லாத சூழலில், காட்டில் அலைந்து திரிந்து கைவிடப்பட்ட அந்த அவர்கள் நிற்பதைக் காண்கின்றனர். உரிமையாளர் ஜஹான் (ஹாசன் ரெசாய்) பார்த்துக் கொண்டிருப்பதை அறியாமல், அதைக்கொண்டு செல்ல முடிவு செய்கிறார்கள்.
அவர்கள் கழுதையுடன் படப்பிடிப்புத் தளத்திற்குத் திரும்புகிறார்கள். ஆனால் அதில் ஒரு சிக்கல் உள்ளது. அது கட்டளைப்படி செயல்படாது என்பது உண்மை. கவாரியின் மாமா தயாரிப்பாளராக இருப்பதால் இயக்குனரும் கவாரியும் ஒவ்வொரு விவரத்திற்கும் சண்டையிடுகிறார்கள், அதே நேரத்தில் ஒரு திரைக்குப் போகும் சூழ்நிலையும் பின்னால் உள்ள கேமராமேனால் படம்பிடிக்கப்படுகிறது.
அவர்கள் கழுதையை இழுத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு விரைந்து சென்று பெருமையுடன் இயக்குனரிடம் அதைக் காட்டுகிறார்கள். அதைக்கண்டவுடன் "நீங்க ஸ்கிரிப்டைப் படிச்சிருக்கீங்களா?" என்று அவள் கேட்கிறாள். ஏனெனில் கழுதை தனது படத்தின் செய்தியை நிறைவேற்ற ஒரு குறிப்பிட்ட குணத்தை, கருப்பு வண்ணத்தை கொண்டிருக்க வேண்டும், மேலும் இந்தக் கழுதை அந்த வரம்பை பூர்த்தி செய்யவில்லை. அவள் தன் கருத்தில் விடாப்பிடியாக இருக்கும்போது, அவளது ஆட்களும் தொடர்ந்து தீர்வுகளைக் கொண்டு வருகின்றன. அவர்கள் எல்லாவற்றையும் சமாளிக்க முடியும் என்று நம்புகிறார்கள்.
கவாரியும், தயாரிப்புகுழுவினரும் கழுதைக்கு சாயம் ஏற்றி வருகிறார்கள். அதை பார்த்தவுடன் இயக்குனர் நான் விரும்பும் கழுதை இதுதான் என்று ஏற்றுக்கொள்கிறார். திரைப்படம் தயாராகும் போது கழுதையின் உரிமையாளர் வந்து விடுகிறார்.
சாயம் ஏற்றி கழுதை திருடிய விவகாரத்தை சொல்லப் போவதாக மிரட்டும் அவரிடம் பணம் கொடுத்து அவரை பயிற்சியாளராக நடிக்க வேண்டினர். படம் தயாரிக்கப்படும் போது நடக்கும் கூத்துக்கள். படோபடங்கள் எல்லாம் பார்க்க வேடிக்கையாக உள்ளன. மனிதாபிமானத்தையும், இரக்க குணத்தையும் போதிக்கும் அருமையான நகைச்சுவை திரைப்படம்..
படப்பிடிப்பு நிறைவடைந்து குழுவினர் வெளியேறும் போது மீண்டும் கழுதை அனாதையாக விடப்படுகிறது. பெய்கின்ற மழையிலே வண்ணம் வெளுத்து நிற்கிறது....
திரைப்படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
திரைப்படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ஷாஹெட் அஹ்மத்லூ.
1 மணி 20 நி ஓடும் பாரசீக மொழியில் உருவான இரானிய நகைச்சுவை திரைப்படம் இது.


Very nice
ReplyDelete