உலகமெங்கும் வியாபித்து இருக்க கூடிய மோசமான, சமூகத்தை பாதிக்க கூடிய, கொடிய விஷயம் "போதை பொருள்".
சில நாடுகளில் பகிரங்கமாகவும், சில நாடுகளில் பகுதி அளவிலும்,போதைப்பொருள் வியாபாரம் செய்யப்படுகிறது. பல நாடுகளில் முற்றாகவே தடை செய்யப்பட்டுள்ள வியாபாரம் போதை பொருள் தான்.
போதை பொருளை ஒழிப்பதற்கு என்ன முயற்சி செய்தாலும், மக்களிடம் வியாபாரம் ஆகிக்கொண்டு தான் இருக்கிறது. அரசு கடுமையான முயற்சி என்று எடுத்து போதை வியாபாரம் செய்பவர்கள் கைது செய்கிறது. ஆனால் பெரும்பாலும் சிக்குபவர்கள் சில்லறை வேண்டிய வியாபாரிகளே. பெரும் திமிங்கலங்கள் எளிதில் தப்பிவிடுகிறார்கள்.
ஜஸ்ட் 6.5 ( மெட்ரி ஷேஷ்-ஓ நிம் , அதாவது: மீட்டருக்கு ஆறு மற்றும் அரை , டெஹ்ரான் சட்டம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது) என்பது 2019 ஆம் ஆண்டு சயீத் ரூஸ்டே எழுதி இயக்கியஈரானிய த்ரில்லர் நாடகத் திரைப்படமாகும்.
இது 76வது வெனிஸ் திரைப்பட விழாவில் விமர்சகர்களால் நல்ல வரவேற்பினை பெற்றதிரைப்படமாகும். மேலும் 37வது ஃபஜ்ர் திரைப்பட விழாவில் சிறந்த படத்திற்கான பார்வையாளர் தேர்வுக்கான கிரிஸ்டல் சிமோர்க் உட்பட பல விருதுகளை வென்றது .
சமத் என்ற ஒரு துணிச்சலான காவல்துறை அதிகாரி, ஒரு போதைப்பொருள் தலைவனைப் பிடிக்கத் துணிந்து செயல்படுகிறார், அவரது கைது நடிவடிக்கைகள் நகரத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பழக்கத்தைக் கட்டுப்படுத்த உதவும் என்று நம்புகிறார். இருப்பினும், அவரது தேடல் அவரை ஊழல் மற்றும் குற்றம் நிறைந்த பாதையில் அழைத்துச் செல்கிறது.
ஒரு நாள் ஒரு சோதனையில் ஒரு கீழ்நிலை வியாபாரி பிடிபடுகிறார். அவர்மூலமாக நிழல் போதைப்பொருள் மன்னன் நாசர் கக்சாத்தை பின்தொடர்கிறார் . இடையில் போதைப்பொருள் கடத்துபவர்களை பிடித்து, அவர்களது தகவல்களின்படி மோசமான போதைப்பொருள் தலைவனுடன் தொடர்புடையநாசர் கக்சாத்தை கைது செய்கிறார்.
வழக்கிலிருந்து தப்பிக்க என்ன விலை கொடுக்கவும் தயாராக இருக்கிறான் கடத்தல் மன்னன் நாசர். எந்த பேரத்திற்கும் மசியாமல் சட்டத்தின் முன் தண்டனை பற்றி தருகிறார் சமத்.
ஈரான் நாட்டு சேரிகளில் வாழும் கீழ் நிலையில் உள்ள மக்கள், போதை பழக்க வழக்கங்கள், சிறைச்சாலையில் அவதிப்படும் கைதிகள் என ஈரானிய சமூகத்தின் நிலை அலசி ஆராயப்படுகிறது.
ஐ ஃபார் பிலிம் என்ற வலைத்தளத்திற்காக எழுதுகையில் , அன்டன் பிடெல் என்ற பிரபல விமர்சகர் இந்தப் படத்தை ஈரானிய சமூகம் குறித்த "தேசத்தின் நிலை குறித்த கடுமையான வர்ணனை" என்று விமர்சித்துள்ளார்
போதை பொருள் தடுப்பு அதிகாரி சமத் ஆக பேமன் மாடி, நிழல் போதைப்பொருள் மன்னன் நாசர் காக்சாதாக நவித் முகமதுசாதே, நாசரின் காதலி எல்ஹாமாக பரினாஸ் இசாத்யார், நடுவராக ஃபர்ஹாத் அஸ்லானி, சக அதிகாரி ஹமீது வேடத்தில் ஹௌமன் கியாய், அமீர் அலியாக அபோல்பசல் ஹைதாரி, சில்லறை வியாபாரி ரேசா மொராடியாக அலி பகேரி, ரெசா மொராடியின் மனைவியாக மர்ஜன் கமாரி என பலரும் சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஜமால் சததியான் தயாரிப்பில், எழுதி, இயக்கியிருப்பவர் சயீத் ரூஸ்டே.
ஒளிப்பதிவு
ஹூமன் பெஹ்மானேஷ்
திருத்தியவர்
பஹ்ராம் டெஹ்கான்
இசையமைத்தவர்
பேமன் யஸ்தானிய
உலகமெங்கும் போதைப்பொருள்கள் ஆட்டிப்படைக்கும் இக்காலத்தில் அனைவரும் காணவேண்டிய திரைப்படம் இது.

No comments:
Post a Comment