கோல்செஹ்ரே - மலர்முகம்.
என்பது 2011 ஆம் ஆண்டு வாஹித் மௌசையன் இயக்கியஈரானிய நாடகத் திரைப்படமாகும் .
ஒரு நாடு மத அடிப்படை வாதிகள், பழமைவாதிகள், கையில் சிக்கினால், எப்படி சீரழிந்து, நாசமாகிவிடும் என்பதற்கு அருமையான உதாரணம் ஆப்கானிஸ்தானம் தான். பழமை வாதிகள் எப்போதும் வரலாற்றை பின்னோக்கி திருப்பத்தான் பார்ப்பார்கள், விஞ்ஞான முன்னேற்றம், நவீனம் சாதாரண மக்களுக்கு சென்றடையாமல் தடுக்க முயற்சிகள் செய்வார்கள் என்பதனை இத்திரைப்படம் மிக அற்புதமான வெளிப்படுத்துகிறது.
கோல்செஹ்ரே என்பது ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் பற்றிய உண்மைக் கதையை உருவாக்கியது, மேலும் அவர்களின் தேசிய திரைப்படம் காப்பகத்தை அழிக்கவும் திரையரங்குகளை மூடவும் முயன்றனர்.
அஷ்ரஃப் கான் மூன்று தலைமுறையாக மலர்முகம் என பொருள்படும் கோல்செஹ்ரே என்ற திரையரங்குனை நடத்தி வரும் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படங்கள் மீது உள்ள காதலால் திருமணம் செய்து கொள்ளாமல் திரையரங்குகள் கலை என்று காலத்தை கழித்துக் கொண்டிருப்பவர். ஆப்கானிஸ்தானில் அரசியல் களம் மாறிய சூழலில் எல்லாமே தலைகீழாய் போனது.. கம்யூனிச பூதத்தை காரணம் காட்டி அங்குள்ள நஜிபின் அரசை தூக்கி எறிந்தனர் இஸ்லாமிய மதஅடிப்படைவாதிகள். . அமெரிக்கா தூண்டி விட்ட பல்வேறு முஸ்லிம் குழுக்கள் ஆளுக்கு ஒரு பகுதியாய் பிடித்துக் கொண்டு ஆட்சி செய்து கொண்டிருந்தனர். மதவாதிகளின் கை மேலோங்கி மக்கள் உரிமைகள், பெண்கள் உரிமைகள், கல்வி, கலை எல்லாமே கடுமையாக பாதிப்புக்குள்ளாகி போனது.கல்விக்கூடங்கள், திரையரங்குகளெல்லாம் மூடப்பட்டு விட்டன. அடிக்கடி குண்டுவெடிப்பு தாக்குதல்களால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டு போனதில், அஷ்ரப் கானுடைய திரையரங்கமும் தாக்குதலுக்குள்ளாகி மூடப்பட்டது. அஷ்ரஃப் கான் கடும் முயற்சி செய்து மீண்டும் அத்திரையரங்கை துவங்குவதற்கு ஏற்பாடு செய்கிறார். அங்குள்ள ஆளுநரின் அனுமதி பெற்று அவரது நண்பர் சலர் மூலமாக ஈரானில் உள்ள மர்ஷத் நகரில் இருந்து திரைப்படத்துறையில் அனுபவம் மிகுந்த கௌடர்ஷை அழைத்து வருகிறார். கௌடார்ஷ் அஷ்ரஃப் கானின் பணியாளர் ஷிமோராத்தின் உதவியுடன் திரைப்படக்கருவியை புனரமைத்து திரையரங்கினை திறக்கும் நிலைக்கு கொண்டு வருகிறார்.மத அடிப்படை பழமைவாதிகளின் கையில் நாடு சென்றால் என்ன ஆகும் இத்திரைப்படம் அருமையாக விளக்குகிறது.. மதநல்லிணக்கம் விரும்பும் ஒவ்வொரு மனித நேயம் உள்ளவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் கோல்செஹ்ரே....
தயாரித்து எழுதி, இயக்கியவர்:வாஹித் மௌசையன்
நடிப்பு
ஒளிப்பதிவு
ஹூமன் பெஹ்மானேஷ்
திருத்தியவர்
நசானின் மொபகம்
இசையமைத்தவர்
ஃபெரிடுன் ஷபாஜியன்
வெளியீட்டு தேதி
2011
இயக்க நேரம்
105 நிமிடங்கள்
நாடு:ஈரான்
மொழி:பாரசீகம்
நடிகர்கள்
அஷ்ரஃப் கானாக மசூத் ராயேகன்
ரோக்சரேவாக லடன் மாஸ்டோஃபி
சலராக அஃப்ஷின் ஹஷேமி
கௌடர்ஸாக ஹேதயத் ஹஷேமி
ஹொசைன் மொஹெப் அஹாரி.
படத்தில் நடித்த அனைவருமே மிக சிறப்பாக நடித்துள்ளார்கள்.



No comments:
Post a Comment