நீங்கள் எவ்வளவு அதிகமாக அறிந்திருக்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களுக்குத் தெரியாது என்பதை நீங்கள் அறிவீர்கள்." — அரிஸ்டாட்டில்..
அறிவு வெறுமனே மனதை நிரப்பாது, ஆனால் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. உண்மையிலேயே கற்றறிந்தவர்கள் தங்கள் புரிதல் வளரும்போது கூட அவர்களின் அறியாமையின் பெருங்கடல் விரிவடைவதை உணர்கிறார்கள். அறிவுசார் பணிவு என்பது உண்மையான கல்வியின் அடையாளம்.
அறிதல் என்பது தன்னிலை அறிவது, உண்மை நிலை அறிதல், சுற்றி உள்ள உலகம் அறிதல், முன்னேற்றத்தை நோக்கி முன்னேறுதல்,என்பதே...
இதையே தான் ஔவை அறிதல் நிலை பற்றி தன் சிந்தனையை கூறுகிறார்.
வெறும்பந்த யங்கூற வேண்டாம் புலவீர்
எறும்புந்தன் கையாலெண் சாண்" - ஔவையார்.
இதுவரை கற்றது கையில் உள்ள மண் அளவு, கல்லாதது உலகம் அளவு பெரியது, உடைய கலைமகளான சரஸ்வதியும் படிக்கின்றாள்,
பெரிய வெறும் நான் பெரியவனா, நீ பெரியவனா என்று பந்தயம் கட்ட வேண்டாம் புலவர்களே... சின்ன எறும்பு கூட தன்னுடைய கையால் எட்டு சாண் அளவு உயரம் இருக்கும்..
ஒரு பக்கம் இறை நம்பிக்கையின் வெளிப்பாடாக தெரிந்தாலும், பொதுமைசிந்தனையாய் சிற்றெரும்புடன் ஒப்பிட்டு அவரவர் மட்டத்தையும் உயர்த்தி உரைக்கிறார்.
அதேபோல வள்ளுவர் அறிதலையும், அடக்கத்தையும் இணைத்தே உரைக்கிறார்.
செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து
ஆற்றின் அடங்கப் பெறின்.குறள் 123.
அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.
கற்றல் என்பது வெறுமனே அறிந்து கொள்ளுதல் மட்டும் அல்ல பகுத்தறிவுடன் சிந்தித்து செயல்படுவதே சமூக முன்னேற்றத்தை நோக்கி பயனிக்க உதவும்..

No comments:
Post a Comment