31/08/2025.ஞாயிறு..
மாலை 6.30 மணி...
நட்புத் தமிழ் வட்டம்
இணையவழி வாரம்
238.......................>>>
வெள்ளலூர் நாடான்
தன் பெயரோடு தன் தகப்பனார் சேர்த்து வைத்துக் கொண்ட
புதுக்கோட்டை
சீனி கார்த்திகேயன்
தமிழின் பெருமை பேசி இனிமையாக
இணைப்புகளை வழங்க களம் இளமையோடு
தொடங்கியது.
நட்புத் தமிழ் வட்டம் துணை தலைவர்
பாவலர் முருகானந்தம் வரவேற்புரை வழங்க
யோகா ஆசிரியர் சர்மிளா தமிழிசை பாடினார்.
நிறுவனத் தலைவர்
அய்யா அவர்கள் காலையில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டமைக்கு உன் உறுப்பினர்களுக்கு நன்றிகூறி , தமிழ் மொழி சிதைந்தால் இனம் அழியும் .தமிழை. பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கடத்துவது நட்பு தமிழ் வட்டத்தின் கடமை எனத் தலைமையுரை வழங்கினார்.
நட்பு தமிழ் வட்ட குழந்தைகள் திருக்குறள், பாரதியார் கவிதைகள், புரட்சி கவிஞர் பாடல்கள் என எண்ணற்ற தமிழ் இலக்கிய செழுமைகளை களத்தில் பதிவிட்டனர்.
வினிதாசிறீயின் மௌன விரதம்,
கோயிலின் "நோய் நாடி நோய் முதல் நாடி போன்றவை எளிமையின் செழுமை.
சிறப்பு உரைஞர் ஆசிரியர் ராசராசேச்வரி " உயர் தனிச் செம்மொழி "என்ற தலைப்பில் பலதரப்பட்ட தகவல்களுடன்..உலக மொழிகள் 6600,
அவற்றில் 2000 மொழிகளை 1000 மக்களுக்கு குறைவாகத்தான் பேசுகிறார்கள், இந்தியாவில் 1652 மொழிகள் உள்ளன. தமிழ் மொழியில் 14 வகை செவ்வியல் இலக்கணம் உண்டு எனக்கூறி தமிழின் பெருமை கூறி
கட்டுரையாக சமர்ப்பித்தார்.
அறிஞர் யாழ்க்கோ குழந்தை வினிதாசிறீயைப் பாராட்டி நட்பு தமிழ் வட்டத்தின் சேவையை உச்சி முகர்ந்தார்.
Rtn.தலைவர் ஜெயிலானி கூறுகையில் இனி தொடர்ச்சியாக இணைய வழியில் கலந்து கொள்ளவேன் என உறுதியளித்தார்.
அய்யா தமிழ் வானம்
ராசேந்திரன் உயர்வு, தனித்தன்மை, செம்மை இவற்றுக்கு சொந்தமானது தமிழ் மொழி எனக்கூறி தாம்பரம் சென்னை கிறித்துவக் கல்லூரியில் இரண்டாவது முதல்வர், 47 ஆண்டுகள் (1867-1909) அப்பணியில் இருந்த வில்லியம் மில்லர் என்ற ஸ்காட்லாந்து அறிஞன் தமிழுக்கு ஆற்றிய பணியை எடுத்துக் கூறி உயர்தனி செம்மொழி தமிழ் என புகழாரம் சூட்டினார். விருதைக்கவி இணைச் செயலாளர் சிறீராம் பேசும்போது
"உலக மொழிகளில் கிரேக்கம், லத்தின், சமஸ்கிருதம் போன்ற மொழிகள் அழிந்துவிட்டன.அந்த நிலை தமிழுக்கு வந்துவிடக்கூடாது என்ற ஆதங்கத்தை வெளிப்படித்தினார்.
கல்லூரிகளில் விண்ணப்ப படிவங்கள்களைக்கூட ஆங்கிலத்தில் பூர்த்தி செய்கிறார்கள் என்ற கவலையை தெரிவித்தார்.
அறிஞர் செந்தில்குமார். பொன் நா, ஆசைத்தம்பி போன்றோர்கள் தங்கள் கருத்தை பதிவிட்டனர்.
நிறைவாக இணைச் செயலர் சிறீராம் நன்றி கூற கூட்டம் மனநிறைவோடு ஒத்திவைக்கப்பட்டது.
- செயலர்.

No comments:
Post a Comment