சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 25 September 2025

தமுஎகசவின் 14 வது மாவட்ட மாநாடு

 




கலைக் கலைக்கே என்று கதைத்த ஜாம்பவான்கள் மத்தியில், கலை மக்களுக்கே, கலை சாமானிய மக்களுக்கு என கட்டியங்கூறி புறப்பட்ட கலை இலக்கிய அமைப்புதான். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம்.

அடிப்படை சனநாயக உரிமைகள் மறுக்கப்பட்ட, அவசரகால இருண்ட காலத்தில் இருள் கிழித்த  முழுநிலவாய் , மக்களுக்கான கலை அமைப்பாய் உருவானது தான் தமுஎகச. 

அதன் பின்னர் 50 ஆண்டு காலத்தில் மக்கள் பிரச்சனைகளுக்காக, மத வெறியாட்டத்திற்கு எதிராக, சாதி மத மோதல்களுக்கெதிராக, 
பெண்கள் முன்னேற்றத்திற்காக, 
ஆனவக்கொலைகளுக்கு எதிராக, இந்திமொழித்தினிப்பிற்கு எதிராக, தமிழ் மொழி காத்திட 
என முதன் முதலில் குரல் கொடுத்த இயக்கம் தமுஎகச.

புதுக்கோட்டையில் ஆரம்ப காலத்தில் பிதாமகனாக முத்து நிலவன் தோழர்களை இணைத்துக் கொண்டு கலை இலக்கியப் பணியில் முதல் மாநாட்டை துவக்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் முற்போக்கு இலக்கிய அமைப்பை உருவாக்கினார்.

பின்னர் "விதவிதமாய் மீசை வைத்தோம் வீரத்தை எங்கேயோ ஒளித்து வைத்தோம்" என்று முழங்கிய மீசை கவிஞர் கந்தர்வன் வந்தார்.அதன் பிறகு தமுஎகசவின் வீச்சு இன்னும் பலமானது.

ஏராளமான மாதாந்திர கூட்டங்கள், கிளை கூட்டங்கள், கலை நிகழ்ச்சிகள், மாநாடுகள், கலை இரவுகள் என நடத்தி ஏராளமான கலைஞர்களை உருவாக்கி மாபெரும் இயக்கமாக புதுக்கோட்டையில் மலர்ந்து மனம் வீசிப் பரப்பி வருகிறது தமஎகச.

ஜெயகாந்தன், சமுத்திரம், பொன்னீலன் என ஆரம்பித்து இன்று வரை ஏராளமான தமிழகமெங்கும் புகழ் பெற்ற எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் பங்கேற்க செய்து,உலக திரைப்பட உலக திரைப்பட விழா உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை புதுக்கோட்டை தமுஎகச நடத்தியுள்ளது.


ஏராளமான கவிஞர்களை கலைஞர்களையும் எழுத்தாளர்களையும் உருவாக்கி மக்கள் கலை இலக்கிய பணியில் முன்னணியில் நிற்கிறது தமுஎகச.

50 ஆண்டு வரலாற்று சாதனையோடு 
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் 14வது மாவட்ட மாநாடு வெற்றி பெற வாழ்த்துக்கள்... 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...