" எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்
கண்ணென்ப வாழும் உயிர்க்கு..
என உரைக்கிறது உலகப்பொதுமறையாம் திருக்குறள்...
எண் என்று சொல்லப்படுவன எழுத்து என்று சொல்லப்படுவன ஆகிய இரு வகைக் கலைகளையும் வாழும் மக்களுக்குக் கண்கள் என்று கூறுகிறார் திருவள்ளுவர்.
" அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,
ஆலயம் பதினாயிரம் நாட்டல்,
பின்னருள் தருமங்கள் யாவும்,
பெயர் விளங்கி ஒளிர நிறுத்தல்,
அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்'' என்ற பாரதியின் வரிகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாகும்.
தமிழ்கூறும் நல்லுலகு எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எல்லா காலத்திலும் உணர்த்தியே வந்துள்ளது.
இன்று உலகில் சுமார் 78 கோடி மக்கள் குறைந்தபட்ச எழுத்தறிவு திறன்களைக் கொண்டிருக்கவில்லை; ஐந்து பெரியவர்களில் ஒருவர் இன்னும் எழுத்தறிவு பெறவில்லை, அவர்களில் மூன்றில் இரண்டு பங்கு பெண்கள். 6 கோடி குழந்தைகள் பள்ளிக்குச் செல்லவில்லை, மேலும் பலர் ஒழுங்கற்ற முறையில் பள்ளிக்குச் செல்கிறார்கள் அல்லது பள்ளியை விட்டுச் செல்கிறார்கள் வெளியேறுகிறார்கள் என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
யுனெஸ்கோவின் " அனைவருக்கும் கல்வி குறித்த உலகளாவிய கண்காணிப்பு அறிக்கை (2006)" படி , தெற்காசியா மிகக் குறைந்த பிராந்திய வயதுவந்தோர் எழுத்தறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது (58.6%), அதைத் தொடர்ந்து துணை-சஹாரா ஆப்பிரிக்கா (59.7%). உலகில் மிகக் குறைந்த எழுத்தறிவு விகிதங்களைக் கொண்ட நாடுகள் புர்கினா பாசோ (12.8%), நைஜர் (14.4%) மற்றும் மாலி (19%). கல்வியறிவின்மைக்கும் தீவிர வறுமையில் உள்ள நாடுகளுக்கும் , கல்வியறிவின்மைக்கும் பெண்களுக்கு எதிரான பாரபட்சத்திற்கும் இடையிலான தெளிவான தொடர்பை அறிக்கை காட்டுகிறது .
சர்வதேச எழுத்தறிவு தினம் என்பது ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 ஆம் தேதி கொண்டாடப்படும் ஒரு சர்வதேச அனுசரிப்பு .
இது யுனெஸ்கோவால் 1966 ஆம் ஆண்டு அக்டோபர் 26 ஆம் தேதி யுனெஸ்கோவின் பொது மாநாட்டின் 14 ஆம் தேதி அமர்வில் அறிவிக்கப்பட்டு 1967 ஆம் ஆண்டு முதல் முறையாக கொண்டாடப்பட்டது.
தனிநபர்கள், சமூகங்கள் மற்றும் சமூகங்களுக்கு எழுத்தறிவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவது இந்த நாளின் நோக்கமாகும் . பல நாடுகளில் கொண்டாட்டங்கள் நடைபெறுகின்றன.
சமூக ஏற்றத் தாழ்வுகள், உள்நாட்டு கலவரங்கள் மற்றும் போர்கள் நிகழும் நாடுகளில் எழுத்தறிவு விகிதம் குறைந்து வருவது இயற்கை.
சமூக சிந்தனை அற்ற, வெறும் எண்ணறிவு, எழுத்தறிவு என்று, எழுத படிக்க தெரிந்த, அல்லது கல்வி கற்ற சமூக விலங்குகளை கொண்ட சமூகம் என்று வேண்டுமானால் இருக்கலாமே தவிர விழிப்புணர்வு கொண்ட சமூகம் எனக்கூறலாகாது.
உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம், சமூக பாதுகாப்பு இவற்றை உத்திரவாதம் செய்யாத எந்த சமூகமும் வளர்ச்சியற்ற சமூகமாக கருதப்படமாட்டாது.
சமூக சிந்தனையாளர், இடதுசாரி சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வந்த எல்லா இடங்களிலும் குறைந்தபட்ச கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்திருக்கிறார்கள்.
ஆனால் அதே நேரத்தில் மத அடிப்படை பழமைவாதிகள், சனாதன வாதிகள் பிற்போக்காளர்கள் பொறுப்புக்கு வந்தவுடன் முதலில் எழுத்தறிவுக்கு தான் வேட்டு வைத்திருக்கிறார்கள்.
சர்வதேச எழுத்தறிவு தினக் கொண்டாட்டங்கள், அனைவருக்கும் கல்வி என்ற இலக்குகள் மற்றும் ஐக்கிய நாடுகளின் எழுத்தறிவு பத்தாண்டு போன்ற பிற ஐக்கிய நாடுகள் நாடுகளின் திட்டங்களுக்கு ஏற்ப குறிப்பிட்ட கருப்பொருள்கள் உள்ளன .
"நம்பிக்கை நிறைந்த உலகத்தை நாம் மீண்டும் கண்டுபிடிக்க வேண்டிய நேரத்தில், எழுத்தறிவு எப்போதையும் விட முக்கியமானது. கல்வியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் தங்கள் முதலீடுகளை இரட்டிப்பாக்கி, பகிரப்பட்ட உலகத்தின் சேவையில் ஒவ்வொரு தனிநபரின் திறனும் வெளிக்கொணர தங்கள் அனைத்து வளங்களையும் திரட்டுமாறு நான் அழைக்கிறேன்." - சர்வதேச எழுத்தறிவு தினத்தை முன்னிட்டு யுனெஸ்கோ இயக்குநர் ஜெனரல் ஆட்ரி அசோலே
மக்கள் தங்கள் தாழ்வுக்கான காரணத்தை அறிந்து, அவற்றை அமைப்பு முறையில் தீர்த்தலும், தேசிய வளர்ச்சி திட்டங்களில் பங்கேற்பதுமே எழுத்தறிவின் நோக்கம்" என்பதே எழுத்தறிவு திட்டத்தின் நோக்கம் என்கிறது தேசிய எழுத்தறிவு இயக்கம்.
எல்லோருக்கும் கல்வி எல்லோருக்கும் வேலை எல்லோருக்கும் சுகாதாரம் என எல்லாம் பொதுமைப் படுத்தப்பட்ட சமுதாயம் அமைந்திட எழுத்தறிவு என்னும் சாதனத்தை உயர்த்தி பிடிப்போம்
...
No comments:
Post a Comment