சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 22 September 2025

பேயும் சினிமாக்களும்

 


வேப்பமர உச்சியில் நின்னு பேய் ஒன்னு ஆடுதுன்னு விளையாடும் போது சொல்லி வைப்பாங்க 

உந்தன் வீரத்தை கொழுந்திலையே கிள்ளி வைப்பாங்க 

வேலையற்ற வீரர்களின் மூளையற்ற வார்த்தைகளை வேடிக்கையாக கூட நம்பி விடாதே

 நீ வீட்டுக்குள்ளே பயந்து கிடந்து வெம்பி விடாதே

என்று மிக அருமையான ஒரு பாடலை பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் எழுத அரசிளங்குமரி படத்தில் எம்ஜிஆர் பாடுவதாக காட்சி அமைக்கப்பட்டு இருக்கும். 

சினிமாக்கள் எடுக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், பெரிய அளவிற்கு அறிவியல் விழிப்புணர்ச்சி இல்லாத காலம். 

பெரும்பாலும் புராணக் கதைகளும் மாயாஜால கதைகளும் தான் மக்களிடையே புழங்கி வந்த காலம். 

அதனால்  இலக்கியங்களோ அல்லது நாடகங்களோ அம்மாதிரியான விஷயங்களை நிறைய தொட்டிருப்பதால், ஆரம்ப கால படங்களில் பேய் பூதம் போன்ற புருடாக்கள் வந்ததில் ஆச்சரியமும் இல்லை. அதில் நாம் கோபப்படுவதற்கு ஒன்றும் இல்லை.

இதற்கு எந்த நாட்டு படங்களும் விதிவிலக்கல்ல, எந்த மொழி படங்களும் விதிவிலக்கல்ல ஆங்கிலத்தில் எக்ஸாஸ்ட், டிராகுலாவில் ஆரம்பித்து நம்மூரில் வந்த படங்கள் வரை நிறைய பேய் கதைகள் வந்தன. 

பேய்கள் எல்லாம் வெள்ளை உடை அல்லது கருப்பு உடை என்று சீருடை அணிந்து புகை மண்டலத்திற்கு இடையே வரும். எல்லா விதமான தடைகளையும் முயற்சிகளையும் உடைத்து எறிந்து அப்பேய்கள் தீங்கு விளைவிக்க முயற்சி செய்யும். ஆனால் தெய்வ சக்தி, தெய்வ சடங்குகள் மூலம் கதாநாயகன் அல்லது கதாநாயகி இறுதியில் அவற்றை வெற்றி கொள்வார்கள். இம்மாதிரி குப்பை படங்கள் தான் காலம் காலமாக வந்து கொண்டிருக்கின்றன. 

நான் சிறுவனாக இருந்த காலத்தில் யார் நீ என்று ஒரு திரைப்படம் வந்தது திரு ஜெய்சங்கர் ஜெயலலிதா போன்றோர் நடித்த படம் பேய் கதை என்று சொல்லப்பட்டாலும் உண்மை அல்லது பேய் கதை அல்ல பேய் பயத்தை அடிப்படையாக வைத்து கதாநாயகனிடம் இருந்து சொத்தை பறிப்பதற்காக நடத்தப்பட்ட நாடகமாக கதை அமைக்கப்பட்டு இருக்கும். இறுதியில் விஞ்ஞான பூர்வமாக அந்த சதி அருமையாக விளக்கப்பட்டு இருக்கும். அப்படி அறிவுபூர்வமாக விளக்கி மக்களை தெளிவு படுத்தினால் பரவாயில்லை ஆனால் மூடநம்பிக்கையில் படுமோசமாக அழுத்தக்கூடிய வேலையை திரைப்படங்கள் செய்தால் அது எந்த வகையில் நியாயம்.. 

நவீன தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் அம்மாதிரி படங்கள் வந்தால் கூட சகித்துக் கொள்ள முடிகிறது.. 

முழுக்க முழுக்க விஞ்ஞான தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இம்மாதிரி புருடாக்களை விடுவது, திட்டமிட்டு மக்களை முட்டாளாக வைக்க கூடிய செயலாக தான் தெரிகிறது. 


அரண்மனை, காஞ்சனா 1, 2, 3 என்று வரிசையாக வந்து கொண்டிருக்கிறது என்றால் அந்தப் படங்களுடைய வெற்றி தான் இவர்களுடைய அயோக்கியத்தனமான, ஆணவத்தனமான முயற்சிகளுக்கு அடிப்படையாக அமைகிறது. 

அறிவியல் இயக்கங்களும், ஆசிரியர் பேரினமும் மக்களிடையே இம்மாதிரி மூடநம்பிக்கைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை உண்டாக்குவது தான் இதற்கு சரியான பதிலடியாக இருக்க முடியும். 

இம்மாதிரி குப்பை படங்களை மக்கள் ஒதுக்கி, தோல்வி அடைய வைத்தால்தான் இம்முயற்சிகளில் இந்த அரைவேக்காடுகள் ஈடுபடாமல் இருப்பார்கள்..... 



2 comments:

  1. இந்த மாதிரி இந்த மாதிரி பேய் படங்கள் எடுப்பது மூடநம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒரு எழுத்து தான் அதை தமிழ்நாடு அளவிலே ஒரே ஒருவர் மட்டும் எழுதி 100 பேருக்கு அனுப்பினால் மட்டும் போதுமா என்று என்ன வேண்டி இருக்கிறது உங்களை போன்ற அனைவரும் இதை எழுத வேண்டும் அப்பொழுதுதான் அவர்கள் இதுபோன்று முட்டாள்தனமான படம் எடுப்பது நிறுத்துவார்கள் இருப்பினும் மக்களுடைய பொழுதுபோக்கு இப்படித்
    தான் போய்க்கொண்டிருக்கிறது அதையும் ரசிக்கிறார்கள் இறுதியில் உடல் பிரச்சினை மனப்பிரச்சனை பயம் சார்ந்த உளவியல் பிரச்சனை எல்லாம் மறைமுகமாக கொஞ்சம் கொஞ்சமாக ஏற்பட்டு பெரிய பிரச்சனைகள் கொண்டு போய் முடியும்

    ReplyDelete
    Replies
    1. இதை நிறைய பேர் பேச வேண்டும். பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதற்காக தான் எழுதுகிறேன். நன்றி.

      Delete

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...