One night in Tehran தெஹ்ரானில் ஒரு இரவு - இரானிய திரைப்படம்.
தெஹ்ரானில் ஒரு இரவு நேரத்தில் ஒரு மர்மமான பெண் திட்டமிடாத பயனமாக ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுக்கிறாள். பயணத்தில் ஏற்படும் நிகழ்வுகள் திருப்பங்கள் ஆகியவற்றை விவரிக்கும் திரைப்படம் இது. .
லைலா என்ற பெண்மணி ஒரு இரவில் டாக்ஸியை வாடகைக்கு எடுக்கிறாள் , டாக்ஸி ஓட்டும் ஓட்டுனர் அமீர் செல்லும் இடம் குறித்து கேட்கிறார். இது ஒரு திட்டமிடாத பயணம் சொல்லுகிற இடங்களுக்கு எல்லாம் செல்லுமாறும், வேண்டிய பணம் தருகிறேன் என்றும் லைலா கூறுகிறாள்.
அவர்கள் இருவரும் செல்லும் போது ஏற்படும் நிகழ்வுகள், அவர்களுக்கிடையே ஏற்படும் உரையாடல்கள் பல்வேறு புதிர்களை விடுவிக்கின்றன.
லைலா ஃபர்ஹாத் என்பவரை திருமணம் செய்து, அவள் விரும்புகிற வசதியான வாழ்க்கை கிடைக்காத காரணத்தால் அவனிடமிருந்து விவாகரத்து பெற்று விட்டாள். அவளுக்குப் புதிய வாழ்க்கை தந்த ஆண் நண்பர்கள் தவறான பாதையில் அழைத்துச் சென்று விடுகிறார்கள்.
அதில் மனம் உடைந்து போன லைலா, மிகவும் மென்மையான தன்னை மிகவும் நேசித்த முன்னாள் கணவன் ஃபர்ஹாதை நினைத்துப் பார்க்கிறாள். கடந்த கால கசப்பின் அடையாளங்களை துடைத்தெறிந்து விட்டு, ஃபர்ஹாத்திடம் தனது மன்னிப்பை கோரிவிட்டு தற்கொலை செய்து கொள்ள திட்டமிடுகிறாள்.
அப்போதுதான் அவனது கணவன் ஃபர்ஹாத்தை தவறாக வழி காட்டி, அவர்கள் பிரிவுக்கு காரணமான அவனது நண்பன் வாகன ஓட்டி அமிர் தான் என்று தெரிகிறது.
தன் தவறுக்கு வருந்தி அமீர் அவளை புரிய வைத்து ஃபர்ஹாத்துடன் சேர்த்து வைக்க முயற்சி செய்கிறான். இருவரும் சந்தித்தார்களா, இணைந்தார்களா என்பது தான் கதை.
சமூகத்தின் அதிகார இயக்கவியல், பாலின வன்முறை, குறுக்கு வழியில் முன்னேறுதல், மற்றும் தனிப்பட்ட வருத்தங்கள் வெளிப்படுத்தும் அருமையான பாரசீக மொழி திரைப்படம். 78 நிமிட நேரம் ஒடும் திரைப்படம்.
ஃபர்ஹாத் நஜாஃபி, ஹமீத் சலீமி இணைந்து எழுதிய திரைக்கதையை இயக்கியவர் ஃபர்ஹாத் நஜாஃபி.
தயாரித்தவர்
முகமது அஹ்மதி
நடிப்பு
லைலாவாக நடித்திருக்கும் மினா வஹித் மிகவும் சிறப்பாகவும், நுணுக்கமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
மென்மையான கனவன் ஃபர்ஹாத்தாக திர்தாத் கியாய், டாக்ஸி டிரைவர் அமீராக அலுஹோசைனி ஆகியோர் மிக சிறப்பாக நடித்துள்ளார்கள்.
ஒளிப்பதிவு-முகமது மெஹ்தி, ரூஸ்பே ரைகா
எடிட்டிங் -பெஹ்ராங் சஞ்சாபி
இசையமைத்தவர்-கரேன் ஹோமாயுன்ஃபார்
18 ஆகஸ்ட் 2019 அன்று திரைப்படம் வெளியாகி பல சர்வதேச விருதுகளைப்பெற்றது.

No comments:
Post a Comment