சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 1 September 2025

இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு குற்றம்.

 இந்தப் படத்தைப் பார்ப்பது ஒரு குற்றம்-இது ஒரு இரானிய திரைப்படம். இந்தப் படத்தைப் பார்ப்பது குற்றம். 


படத்தின் தலைப்பே இது தான். 

2019 ‧ த்ரில்லர்/நாடகம்.

அமீர் பாசிட்ஜின் இளம் உறுப்பினர், அவரது தந்தை போர் தியாகி. பாசிட்ஜு என்பது ஈரானியப் புரட்சியின் தலைவரான அயதுல்லா கோமெய்னியின் உத்தரவின் பேரில் 1979 ஆம் ஆண்டு ஈரானில் நிறுவப்பட்ட ஒரு துணை ராணுவம் தன்னார்வ போராளிக்குழு. இந்த அமைப்பில் முதலில் பொதுமக்கள் தன்னார்வலர்களாக இருந்தனர். செல்வாக்கு மிக்க பாசிட்ஜின் உறுப்பினரான அமீரின் கர்ப்பிணி மனைவி தெருவில் குடிபோதையில் இருந்து ஒரு அந்நியரால் தாக்கப்படுகிறார். தாக்கிய நபர் பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவர். வளம்மிக்க எண்ணெய் தொழிலில் முக்கிய புள்ளி. தூதரக செல்வாக்கு மிக்கவன். தாக்குதலுக்கு உள்ளான அமீரின் மனைவி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, வயிற்றில் இருக்கும் சிசு மரணம் அடைந்து விடுகிறது. அவளும் ஆபத்தான நிலைக்கு உள்ளாகிறாள். தாக்கிய பிரிட்டிஷ் குடிமகன் கைது செய்யப்பட்டாலும், நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குகிறது. 


பிரிட்டிஷ் அரசின் வற்புறுத்தலால் அரசு ராஜதந்திர முறையில் பிரச்சனையை தீர்த்து வைக்க முயற்சி செய்கிறது.  எண்ணெய் வர்த்தகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளும் வர்க்க பாசம், ஏற்கனவே ஈரான் அரசு சந்தித்து வரும் சர்வதேச பிரச்சனைகளில் இது ஒரு தடை கல்லாக ஆகி விடக்கூடாது என்று அரசு எப்படியாவது பிரிட்டிஷ் குடிமகனை விடுவிக்க முயற்சி செய்கிறது. 

அமீரும் தனது குழந்தையை இழந்து, மனைவி படும் அவஸ்தையை ஏற்றுக்கொள்ள முடியாமல் அவர் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி செய்கிறார்.

 அவனுக்கு அவனுடைய தோழர்கள் உதவி செய்கிறார்கள். ஏற்கனவே அவன் 14 வயது குர்திஷ் பெண்ணை காப்பாற்றிய வகையில் நற்பெயரை சம்பாதித்தவன். ஒரு பெண்மணிக்கு ஏற்படக்கூடிய அவமானம், நாட்டிற்கு அவமானமாக கருதி நியாயம் ஏற்படுவதற்காக போராடுகிறான். . 

அமீர் மற்றும் அவனது தோழர்களுடைய நடவடிக்கைகள் எதிர் புரட்சி நடவடிக்கைகளாக கருதப்பட்டு, நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் முயற்சி செய்கிறது. 

ஒரு கட்டத்தில் அமீர் இறங்கி வந்து குறைந்தது, அந்த பிரிட்டிஷ் குடிமகனை ஒரு அறையாவது கொடுக்க வேண்டும் என்று கேட்கிறார்.

 ஆனால் அரசு தரப்பில் பிரிட்டிஷ் குடிமகனை அவமதிக்க முடியாது என்று மறுத்து விடுகிறது. 

இந்த போராட்டத்தினுடைய முடிவில் வெற்றி பெறுவது யார் என்பது தான் கதை. 

ஒரு பெண்ணின் சுயமரியாதையும் நாட்டின் சுயமரியாதையையும் காப்பாற்ற போராடுபவனின் கதை இது. சட்டம் சாதாரண குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்கிறது, வசதியானவர்களிடம் வளைந்து கொடுத்துப் போகிறது என்பதை இத்திரைப்படம் மறைமுகமாக சுட்டிக் காட்டுகிறது. 

அமீராக நடித்தவர் மிகச் சிறப்பாக நடித்துள்ளார். 

எழுதி, இயக்கியிருப்பவர் 

ரெசா ஜெஹ்தாப்சியன்

நட்சத்திரங்கள்

மஹ்தி ஜமீன்பர்தாஸ்-அமீர் 

அமீர் ஆகீ- ஜெனரல் மோசவி

அகயிலிண்டா கியானி-ஹனீ. 

No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...