பச்சை குளத்தின் டிராகன்ஃபிளைகள். டிராகன்ஃபிளைஸ் ஆஃப் தி கிரீன் பாண்ட் (சஞ்சகாஹே பெர்கே சப்ஸ்) இரானிய திரைப்படம் 2011.
யாருமற்ற அனாதை குழந்தைகளுக்கும் கனவுகள் உண்டு. அவற்றை தேடி அலைவதும் உண்டு.
தெருவில் பூக்களை விற்று பச்சைக் குளத்தைப் பார்க்கப் பயணம் செய்யும் லத்தீஃப் என்ற சிறுவனைப் பற்றிய ஒரு குடும்பப் படம்,
இது 2011 இல் படமாக்கப்பட்டது, வெளியிடப்பட்டது.
தெருக்களில் பூ விற்று திரியும் யாருமற்ற அனாதை சிறுவர்களில் லத்தீஃபும் ஒருவன். எங்கோ வடக்கே தொலைவில் வசிக்கும் தனது பாட்டியிடம் சென்றடைந்து, அவர்களை நன்றாகப் பார்த்துக் கொள்ள ஆசைப்படும் சிறுவன்.
அவன் சந்திக்கும் ராகா என்ற யுவதி வாழ்வில் விரக்தி அடைந்து தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் இருந்தவள் சிறுவன் லத்தீஃபால் மனம் அடிக்கடி மாறி அவனுடன் அன்பாய் இருக்கிறாள்..
லத்தீஃப் தனது பாட்டியை தேடுவதை அறிந்து கொண்ட ராகா, அவனுடன் வடக்கு நோக்கி பயணிக்கிறாள்.
லத்தீப்பிற்கு தனது பாட்டியின் பெயரோ, முகவரியோ எதுவுமே தெரியாது. நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள காட்டின் ஓரத்தில் ஒரு பச்சை குளத்து அருகே உள்ள குடிசையில் அவள் வசிக்கிறாள். அங்கு ஏராளமான தட்டாம்பூச்சிகள் பறக்கும் என்று நம்பும் அவன், ராகாவுடன் காட்டிற்கு பயணம் ஆகிறான்.
முகவரியோ, வழியோ தெரியாத அவர்கள் காட்டுக்குள் சிக்கிக் கொள்கிறார்கள். இவர்கள் சந்திக்கும் மனிதர்களுக்கு அப்படி ஒரு பாட்டியை பற்றி எதுவுமே தெரியவில்லை. ஒரு கட்டத்தில் ராகா லத்தீஃபின் பாட்டியை பற்றி எப்படி தெரியும் என்று விசாரிக்கிறாள். தனது முன்னாள் முதலாளியின் மனைவி தான் பாட்டி வடக்கே உள்ள காட்டுக்குள் ஒரு அழகான குளத்தருகே குடிசையில் இருக்கிறாள். அங்குள்ள தட்டாம் பூச்சிகள் தீய மனிதர்களை சந்திக்காது. அங்கு சென்றால் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று கூறியதாக லத்தீஃப் சொல்கிறான்.
மேலும் தேடித் தெரியும் இருவர்களும் லத்தீஃபின் பாட்டியை சந்தித்தார்களா என்பது தான் கதை.
அனாதை சிறுவன் லத்தீஃப், வாழ்க்கையில் விரக்தி அடைந்த ராகா இவர்களுடைய மென்மையான உள்ளம், இவர்களின் தேடல் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. அருமையான இயற்கை காட்சிகள் கண்ணை கவர்கின்றன.
எழுதி, இயக்கி, தயாரித்தவர் அலி காவிடன்.
ஒளிப்பதிவு ஷஹாப் நோரூசியோன்.
இசை ஃபர்தின் கலத்பாரி.

No comments:
Post a Comment