ஒரு கலாச்சாரம் எவ்வளவு நாகரிகமானது என்பதை நீங்கள் அறிய விரும்பினால், அவர்கள் அதன் பெண்களை எவ்வாறு நடத்துகிறார்கள் என்பதைப் பாருங்கள்." — பச்சா கான்
தனியாக மகளிர் தினம் என்று ஒரு தினம் கொண்டாடப்பட வேண்டியது அவசியம் என்பதை அறிவுலகம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
ஆதியில் சிறு இனக் குழுக்களாக வாழ்ந்த மனிதர்கள் தங்களது சமூகத்தின் தலைமைப் பாத்திரத்தை பெண்கள் வசம் தான் ஒப்படைத்து வந்தனர். அதனால் தான் தாய் வழி சமூக அமைப்பு என்று அழைக்கப்பட்டது.
சொத்துடை சமுதாயமாக இவ்வுலகம் மாறிய பின் சிறு சிறு நாடுகள், அரசுகள், பேரரசுகள், மகா பேரரசுகள் என அரசியல் அமைப்பாக உருவான பின், பெண்களின் பாத்திரம் என்பது குறைந்து போனது மட்டுமல்ல, அவர்கள் இதர பொருள்களைப் போல உடைமை பொருள்களாகவே மாறிப் போனார்கள்.
அதற்கு கேடயமாக அமைந்தது மத தத்துவங்களும், அவை உருவாக்கிய புராண புருடா கதைகளும் தான் . இதற்கு உலகில் எந்த பகுதியும், எந்த மதமும் விதிவிலக்கு அல்ல என்பதை வரலாற்றுச் சான்றுகள் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
உதாரணமாக ஒரு சில விடயங்களை பார்த்தாலே நமக்கு புரியும்.
பாரம்பரிய ஏதென்ஸில், ஒரு பெண் சட்டப்பூர்வமாக தனியாக நிற்க அனுமதிக்கப்படவில்லை. அவளுடைய தந்தை, சகோதரர் அல்லது கணவராக இருக்கக்கூடிய ஒரு ஆண் பாதுகாவலரின் அதிகாரத்தின் கீழ் இருந்தாள். அவள் எவ்வளவு மரியாதைக்குரிய வீட்டில் பிறந்திருந்தாலும், சட்டம் அவளை ஒரு சுதந்திரமான குடிமகனாகப் பார்க்கவில்லை. அவளது பாலியல் தன்மை தனிப்பட்ட சுயாட்சியாக வடிவமைக்கப்படவில்லை. அந்த சொத்து, பரம்பரை மற்றும் மரியாதையாக குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமணத்திற்கு முன் கன்னித்தன்மை என்பது இன்று நாம் புரிந்துகொள்வது போல் காதல் அல்லது ஒழுக்கத்தைப் பற்றியது அல்ல. அது சட்டபூர்வமானது பற்றியது. திருமணமாகாத மகளின் உடல் குடும்பத்தின் எதிர்கால கூட்டணிகள் மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட திருமண ஏற்பாட்டிற்கு வெளியே அவள் கன்னித்தன்மையை இழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், சேதம் நிதி மற்றும் நற்பெயருக்குரியதாகக் கருதப்பட்டது. சில நேரங்களில், அவளுடைய விதி சட்டப்பூர்வமாக அவளை அடிமைத்தனத்திற்கு விற்கக்கூடும். சலுகையில் தொடங்கிய வாழ்க்கை ஒரே இரவில் சரிந்து போகக்கூடும்.
"மொய்ச்சியா" என்றழைக்கப்பட்ட விபச்சாரம் அல்லது முறையற்ற உறவு முதன்மையான பெண்ணுக்கு மட்டும் எதிரான குற்றமாக அல்ல, மாறாக ஆண் குடும்பம் தலைவருக்கு எதிரான குற்றமாகக் கருதப்பட்டது. இது பரம்பரை வரிகளை அச்சுறுத்தியது. இது சட்டபூர்வமான வாரிசுகள் பற்றிய சந்தேகத்தை அறிமுகப்படுத்தியது. விபச்சாரத்தைக் கண்டறிந்த ஒரு கணவன் தனது மனைவியை சட்டப்பூர்வமாக நிராகரிக்க முடியும். ஏதெனியன் சட்டத்தின் சில விளக்கங்களின் கீழ், அவளை அடிமைத்தனத்திற்கு விற்பது அனுமதிக்கப்பட்ட விளைவு. அவளுடைய அந்தஸ்து முற்றிலும் ஆண் அதிகாரத்தைச் சார்ந்தது.
அதிலிருந்து ஏற்றத்தாழ்வைக் கவனியுங்கள் ஒரு கணவரின் துரோகம் அதே பேரழிவு தரும் சட்ட விளைவுகளை ஏற்படுத்தவில்லை. ஆண்களின் பாலியல் நடத்தை பெரும்பாலும் பெண்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ளாத விதத்தில் சமூக ரீதியாக பொறுத்துக்கொள்ளப்படுகிறது. பெண்களின் கண்ணியத்தைப் பாதுகாக்க இந்த அமைப்பு வடிவமைக்கப்படவில்லை. இது ஆண் குடியுரிமை மற்றும் சொத்து பரிமாற்றத்தைப் பாதுகாக்கப்பட்டுள்ளது.
இதைப் படிக்கும் நவீன பெண்களுக்கு, பண்டைய ஏதென்ஸை தொலைதூரமாகவும் பழமையானதாகவும் பார்க்கத் தூண்டுகிறது. . ஒரு பெண்ணின் மதிப்பு பாலியல் கட்டுப்பாடு மற்றும் குடும்ப மரியாதையுடன் பிணைக்கப்பட்டுள்ளது என்ற அடிப்படைக் கருத்து பல நூற்றாண்டுகளாக எதிரொலித்துள்ளது. சட்டங்கள் மாறுகின்றன. கட்டமைப்புகள் உருவாகின்றன. ஆனால் கலாச்சார இரட்டைத் தரநிலைகள் நாம் ஒப்புக்கொள்ள விரும்புவதை விட நீண்ட காலம் நீடிக்கும்.
வரலாறு முழுவதும் பெண்களின் நிலை ஆணாதிக்கக் கட்டுப்பாடுகள், குடும்பப் பொறுப்புகள் மற்றும் சமூகத் தடைகளால் ஓரங்கட்டப்பட்டிருந்தாலும், போர், கல்வி, கலை மற்றும் தலைமைகளிலும் முக்கியப் பங்கெடுத்துள்ளனர். பண்டைய சமூகங்களில் உயர்வாக மதிக்கப்பட்ட பெண்கள், இடைக்காலத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு, நவீன காலத்தில் கல்வி, சட்டபூர்வ உரிமை மற்றும் பொருளாதாரம் சுதந்திரத்திற்காக போராடி முன்னேறி வருகின்றனர்.
பண்டைய கால சிந்து சமவெளி நாகரிகம் போன்ற காலங்களில் தாய் தெய்வ வழிபாடு பரவலாக இருந்தது, பெண்கள் மதிக்கப்பட்டனர். இருப்பினும், வேத காலத்திற்குப் பிறகு, பெண்களின் சுதந்திரம் படிப்படியாகக் குறைந்து ஆணாதிக்கக் கட்டுப்பாடுகள் அதிகரித்தன.
இடைக்காலத்தில் பெண்கள் குடும்பம், குழந்தைகள் வளர்ப்பு போன்ற வீட்டுப் பணியாளர்களாகக் கட்டுப்படுத்தப்பட்டனர். நிலப்பிரபுத்துவ சமூகங்களில் பெண்கள் சொத்துரிமை மற்றும் சமூக சுதந்திரத்தை இழந்தனர்.
உதாரணமாக இங்குள்ள மத இலக்கியங்களைப் பார்த்தாலே பெண் எந்த அளவிற்கு நடத்தப்பட்டாளென்ற உண்மையை உணர்ந்து கொள்ளலாம்.
இராமாயணத்தில் இராமன் தன் மனைவியை சந்தேகித்ததால் தீயில் . இறங்கி, தன் பத்தினி தனத்தை நிரூபிக்கிறார் எனினும் பின்னாளில் பிறர் சந்தேகப்பட்டார் என்பதற்காக கற்பினியான சீதையை காட்டிற்குள் விரட்டி விடுகிறார்.
நளாயினியின் கதையில் கிழட்டு கணவன் தாசி வீட்டிற்கு செல்ல விரும்பியதால் குஷ்டரோகியான அவனை கூடையில் சுமந்து சென்று, தாசிக்கு கூலியாக தாசியின் வீட்டை துப்புரவு செய்வது உள்ளிட்ட பணிகளை செய்கிறாள்.
இதுதான் வட மொழி மத இலக்கியங்களின் புராணக் கதைகள் கூறிய பெண்களுக்கான வாழ்க்கை நெறி...
ஆனாலும் தமிழ் கூறும் இலக்கியங்களோ பெண்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது எதிர்த்து போராடுவதையே இலக்கணமாக கூறியுள்ளனர்.
தன் கணவனை செய்யாத குற்றத்திற்காக கொலை செய்யப்பட்டதை எதிர்த்து, வாதாடி தவறான நீதி வழங்கிய மன்னனுக்கே மரணத்தை பரிசாக வழங்குகிறாள் கண்ணகி.
இது சிலப்பதிகார காட்சி.
மணிமேகலை எனும் பேரழகியின் அழகில் கவரப்பட்டு ஓர் இளவரசன் தன் காதலை அவளிடம் கூறுகிறான். அவள் சலனமற்று நடக்கிறாள். இளவரசனும் அவள் உணர்வுக்கு மதிப்பளித்து சென்று விடுகிறான்.
இது மணிமேகலை காப்பியக்காட்சி.
ஓர் அழகிய தமிழச்சியின் கணவன அவளை கொல்வதற்காக திட்டமிட்டு மலை உச்சிக்கு அழைத்துச் செல்கிறான். நம்பிச்சென்ற அவளுக்கு அவனது வஞ்சக எண்ணம் தெரிய வந்து இறுதியாசியாக அவனைச் சுற்றி வலம் வருவதாக வேண்டி வளம் வந்து மலையிலிருந்து கீழே தள்ளி கொன்று விடுகிறார் நாயகி
இது குண்டலகேசியின் காட்சி
இவை அனைத்தும் தமிழ் சமன இலக்கியங்கள்...
ஓர் ஆண் என்ன செய்தாலும் அவனுக்கு சேவகம் செய்வதொன்றே பெண்ணின் பணி என்பதனை சொன்னது தான் வடமொழி இலக்கியங்கள்.
அவன் ஆணோ, கணவனோ, அரசனோ, ஆண்டவனோ அநீதி என்றால், அவனை எதிர்த்து போராடு என்று போதிப்பதுதான் தமிழ் இலக்கியங்கள்.
உலக மொழிகளின் தாய் என்று கூறி கிரேக்கத்தில் கூட 7 பெண்கள் தான் இருந்தனர். தேவபாஷை என்று கூறி சமஸ்கிருதத்தில் ஒரு பெண் எழுத்தாளர் கூட கிடையாது. ஆனால் சங்ககாலத்திலேயே, 47 பெண் எழுத்தாளர்களைக் கொண்டது உலகிலேயே தமிழ் சமூகம் மட்டுமே.
தேவபாஷை என்று கூறி சம ஸ்கிருதத்தை வாசிக்கவோ, பேசவோ கூட பெண்களுக்கு உரிமை கிடையாது. அதேபோல பெண்ணுக்கு சொத்துரிமைகள் இருந்தும் எந்த உரிமைகளும் மறுக்கப்பட்டன பால்ய விவாகம் கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் என பல கொடுமைகள் இங்கு சனாதன மதத்தால் திணிக்கப்பட்ட.
.அவ்வாறு இருந்த தமிழகத்திலும் சனாதன கருத்துக்கள் புகுந்ததன் விளைவு இங்கும் பெண்ணடிமை தனமும் ஆணாதிக்கவும் தலைதூக்கி ஆடியது. மத வேறுபாடுகள் இன்றி அனேகமாக எல்லா மதங்களுமே பெண்களை அடிமைப்படுத்துவது தான் நடைபெறுகிறது. மத நம்பிக்கை உள்ளவர்களில் பெரும்பான்மையோர் பெண்களாக இருந்த போதிலும், மதசார்ந்த எந்த நிறுவனங்களிலும் அவர்களுக்கு தலைமை பொறுப்பு மட்டுமல்ல, எந்த விதமான பொறுப்புகளையும் வழங்க மறுத்தே வந்தன
அங்கிங்கெனாதபடி உலகம் முழுவதுமே பெண்களைக் காலுக்குக் கீழே வைத்திருந்த அவலம் தான் காலம் காலமாக நிலவியது.
உலகில் எந்திரப் புரட்சி ஏற்பட்ட பிறகு தொழிற்சாலைகள் பெருகி உழைப்பாளிகள் அதிகம் தேவைப்படும் போது பெண்கள் ஏராளமாக உடல் உழைப்பில் ஈடுபட ஆரம்பித்தனர். ஆயினும் அவர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோட்பாடு நடைமுறைப்படுத்தப்படாததால் கடுமையான இயக்கங்கள் தோன்றலாயின.
உலகமெங்கும் தொழில்மயமான பிறகு புதுப்பணக்காரர்களான முதலாளிகளால் மன்னராட்சி முறைக்கு ஆபத்து வந்தது. பணக்கார முதலாளிகள், வணிகர்கள், மக்களுடைய உரிமைக்கான எழும்பி உலகில் பல நாடுகளில் மன்னராட்சி முறை முழுமையாகவோ குரல்வோ ஒழிக்கப்பட்டு மக்கள் பங்கேற்புடன் ஜனநாயக தேர்தல் முறை வந்தது. எனினும் மக்கள் தொகையில் சரி பாதி எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்படவில்லை. பெண்கள் சம வேலைக்கு சம ஊதியம், வாக்குரிமை, பெண்ணடிமைத்தனம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை எதிர்த்து இயக்கம் தொடங்கியது. அதுதான் பெண்களுடைய விடுதலைக்கு முதல் ஆரம்ப புள்ளி என்றே சொல்லலாம்.
உலகளாவிய பெண் வாக்குரிமை இயக்கத்தால் தூண்டப்பட்ட சர்வதேச மகளிர் தினம் 20 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் தொழிலாளர் இயக்கங்களிலிருந்து உருவானது.
1909 ஆம் ஆண்டு பிப்ரவரி 28 ஆம் தேதி நியூயார்க் நகரில் அமெரிக்க சோசலிசக் கட்சி ஏற்பாடு செய்யப்பட்டது " மகளிர் தினம் " தான் முதன்முதலில் அறிவிக்கப்பட்டது . இந்த நாள் மார்ச் 8, 1857 அன்று நியூயார்க்கில் பெண் ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தின் நினைவுகூறும் வகையில் கொண்டாடப்பட்டதாகக் கூறுகள் உள்ளன, அவர்களுடன் ஒற்றுமையுடன், கம்யூனிஸ்ட் ஆர்வலரும் அரசியல்வாதியுமான கிளாரா ஜெட்கின், கோபன்ஹேகனில் 1910 ஆம் ஆண்டு சர்வதேச சோசலிச மகளிர் மாநாட்டில் அங்கீகரிக்கப்பட்ட "உழைக்கும் பெண்கள் தினம்" கொண்டாட முன்மொழிந்தார், .
(ஜனவரி 1910 இல் கிளாரா ஜெட்கின் (இடது) மற்றும் ரோசா லக்சம்பர்க் (வலது))
அடுத்த ஆண்டு ஐரோப்பா முழுவதும் சர்வதேச மகளிர் தினத்தின் முதல் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் நினைவுகூரல்கள் நடந்தன. 1917 ரஷ்யப் புரட்சியில் பெண்களின் பங்கைக் கௌரவிக்கும் வகையில் விளாடிமிர் லெனின் 1922 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதியை சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தார். பின்னர் அந்த சோசலிச இயக்கம் மற்றும் கம்யூனிச நாடுகளால் அந்த நாளில் கொண்டாடப்பட்டது.
முதலில் உழைக்கும் மகளிரின் கோரிக்கைகளுக்காக ஒன்று திரண்ட பெண்கள், பின்னர் வாக்குரிமை, பெண்கள் பாதுகாப்பு, பெண்கள் முன்னேற்றம் என படிப்படியாக முன்னேறி அவர்களுடைய கோரிக்கைகளுக்காக போராடிய மார்ச் 8 என்ற தினத்தையே ஐக்கிய நாடுகள் சபை 1977ல் சர்வதேச மகளிர் தினமாக அறிவித்தது. , இது பெண்கள் உரிமைகள் இயக்கத்துடன், சமத்துவம் மற்றும் விடுதலைக்கான பெண்களின் போராட்டம் நினைவுகூறும் தினமாகும்.
ஆரம்ப காலத்தில் பொதுவுடமைவாதிகளாலும், சோசலிச ஆதரவாளர்களும், பெண்ணியவாதிகளும் கொண்டாடி வந்த சர்வதேச மகளிர் தினம் இந்நாளில் அனைத்து சமூக இயக்கங்களால், அரசியல் கட்சிகளாலும், பல்வேறு அமைப்புகளாலும் கொண்டாடப்படக்கூடிய நிகழ்வாக வளர்ந்து விட்டது மகிழ்ச்சிக்குரியது. தற்போது சில பிற்போக்குவாதிகளும் கொண்டாடுவது தான் வேடிக்கை....
எல்லா காலங்களிலும் உலகமெங்கும் பெண்களின் பாதுகாப்புக்கு இடையூறாக இருப்பது மதங்களும், உள்நாட்டு வெளிநாட்டுப் போர்களும் தான் என்பதை அனுபவம் உரைக்கிறது.
(ஈரானிய பெண்கள் இஸ்லாமிய புரட்சிக்கு முன்பு)
(இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஆப்கானிய பெண்கள் நிலை.)
(இஸ்லாமிய அடிப்படைவாதிகள் ஆட்சிக்கு வந்த பின்பு தற்போது ஆப்கானிய பெண்கள் நிலை.)
இன்று சர்வதேச மகளிர் தினம் பாலின சமத்துவம் , இனப்பெருக்க உரிமைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகளுக்கு கவனம் செலுத்துகிறது .
2026 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மகளிர் தின குறிக்கோளாக "உரிமைகள். நீதி. செயல்." என அறிவிக்கப்பட்டுள்ளது வெறும் சொல்லளவில் உரிமைகள் என்று அறிவித்து விடாமல் அதை செயல்படுத்துகிற வகையிலே நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது மட்டுமே அதன் உண்மையான நீதி என்பது நடைமுறைக்கு வரும் அந்த லட்சியத்தை நோக்கி அனைவரும் ஒன்று சேர்வோம்.








Good
ReplyDeleteஅருமையான ஆழ்ந்த பதிவு.
ReplyDelete