முதுமையை தொடுகையில்
இளவயது நினைவுகள்.....
பால்குடி மறந்து
பள்ளிக்கு சென்ற கதை!
கற்பனைக்கெட்டாத அப்பா
சொன்ன கதை!
காசு பணம் இல்லாமல்
கற்பனையில் மிதந்த கதை!
பள்ளிக்கு கட்டடித்து
ஊர் சுற்றிய கதை!
வீட்டுப்பாடம் செய்யாமல்
வாத்தியிடம் மாட்டிய கதை!
மாலையில் ஓடி ஆடி
மண்ணில் புரண்ட கதை!
விளையாடித் தோற்றாலும்
வீம்புக்கு நின்ற கதை!
திருட்டு தம்மடித்து
திருந்திய கதை!
கன்னியர் கண்பட்டு
கற்பனையில் ஊறிய கதை!
வியர்வை சிந்தி உழைத்து
குடும்பம் காத்த கதை!
போராட்ட குணத்தோடு
போராடி நின்ற கதை!
தோல்விகள் கண்டபோதும்
துணிவோடு வென்ற கதை!
நரைமுடி கூடிடினும்
நெஞ்சம் இளமையான கதை!
வென்ற கதை
தோற்ற கதை
என எத்தனையோ
எழுதி தீர்த்த கதை!
எழுதிடவியலா மனதில்
புதைத்த கதை!
அத்தனையும்
அறுபதை தாண்டுகையில்
நிழலாய் வருகுதே!!!

வாழ்க்கையே தொடர்கதை; தொடரும்வரை தொடரட்டும்.
ReplyDelete