சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 9 November 2026

சொர்க்கத்தை விரும்பும் டிரம்ப்...


 எனது அப்பா நான் சிறுவனாக இருந்த காலத்தில் ஒரு வேடிக்கையான கதையை சொல்வார். 
 ஒரு ஊரில் ஒரு குருக்கள் இருந்தாராம், அதாவது அர்ச்சகர். அவரும் மிகவும் ஆச்சார  அனுஷ்டானங்களை கடைபிடிப்பவர் .கிட்டத்தட்ட நேரடியாகவே கடவுளிடம் பேசுவார் என்று மக்கள் நம்புவார்கள். அவர் வாயிலிருந்து வருவதெல்லாம் கட்டாயம் பலிக்கும் என்று எல்லோருக்கும் நம்பிக்கை இருந்தது .
அப்பேர்ப்பட்ட அவர் ஒரு ஊருக்கு புரோகிதம் செய்துவிட்டு திரும்பி வரும்போது ஒரு நாய் ஒன்று அவரை கடித்து விட்டதாம். ரத்தம் வேறு வந்து விட்டது . வலி தாங்க முடியவில்லை .
ஆத்திரத்துடன் அந்த நாயை நரகத்துக்கு போகும் என சபித்து விட்டார். இருந்தாலும் அவருக்கு நாய் கடித்த வலி தாங்க முடியவில்லை. பக்தர்களுக்கு அசாத்திய நம்பிக்கை  நிச்சயமாக அந்த நாய் நரகத்துக்கு தான் போகும் என்று... 

உடன் இருந்தவர் சொன்னார் "அட குருக்களை கடிச்ச நாய் சொர்க்கத்துக்கு போனா என்ன? நரகத்துக்கு போனா என்ன? அது வரைக்கும் குருக்கள் படுற பாடு பெரும்பாடு தானடா"என்றாராம் .

அது போகட்டும்... 
நம்ம காலத்து கதைக்கு வருவோம் .
தற்காலத்தில் ஆண்டு வரும் உலக மகா சக்கரவர்த்தி டிரம்பினை அந்த நாட்டில்   ஒரு தொலைக்காட்சியினர் ஒரு மணி நேரம் பேட்டி எடுத்திருக்கிறார்கள்.

 அப்போது அவரிடம் மிகவும் நெருக்கடியான?! வில்லங்கமான கேள்விகளை எல்லாம் கேட்டார்களாம். 
அப்படி என்ன வில்லங்கமான கேள்வி என்று கேட்கிறீர்களா?.. 

"நீங்கள் செத்துப் போனால் என்ன ஆகும்" என்று கேட்டார்களாம். 
"எல்லோரும் நினைவு கூறுவார்கள்" என்றாராம் ட்ரம்ப் .

குடும்பம் இல்லாதவன், பிச்சைக்காரனைத் தவிர யார் செத்தாலும் வேண்டியவர்களோ, வேண்டாதவர்களோ, தெரிந்தவர்கள் எல்லோருமே நினைவு கூறத் தான் செய்வார்கள். நல்லவர்கள் என்றால் நல்ல விதமாக நினைவு கூறுவார்கள். மோசமானவன் என்றால் சண்டாளப்பாவி என்ன பாடு படுத்தினான் என்று நினைவு கூறுவார்கள் .
திருவாளர் டிரம்ப்செத்துப் போனால் எந்த மாதிரி நினைவு கூறுவார்கள் என்று எல்லோருக்கும் தெரிந்தது தானே.

 அடுத்த கேள்வி கேட்டு இருக்கிறார் "நீங்கள் சொர்க்கத்திற்கு போவீர்களா ? நரகத்திற்கு போவீர்களா ?" என்று .

அவர் உறுதியாக சொல்லி இருக்கிறார் .
சொர்க்கத்திற்கு தான் போவேன் என்று. 
எந்த கொடும்பாவியாவது நான் நரகத்திற்கு போகிறேன், நான் செய்த பாவத்திற்கு அது தான் எனக்கு கிடைக்கும் என்று ஒருபோதும் சொல்லப்போவதில்லை .

நம்மைப் பொறுத்தமட்டிலும் ஒரே ஒரு பதில் தான்... 
அவர் சொர்க்கத்துக்கு போனால் என்ன? நரகத்திற்கு போனால் என்ன? அவரால் இந்த உலகம் படும் பாடு போதாதா.. 



60 மினிட்ஸ்' (60 Minutes) நிகழ்ச்சியில் மரணத்திற்குப் பிந்தைய வாழ்க்கை பற்றிய பேட்டி:
நவம்பர் 2026-ல், CBS தொலைக்காட்சியின் 60 Minutes நிகழ்ச்சியில் பத்திரிகையாளர் ராஸ் தௌதாட் (Ross Douthat) என்பவர் டொனால்ட் டிரம்பிடம், "நீங்கள் இறந்த பிறகு என்ன நடக்கும் என்று நினைக்கிறீர்கள்?" என்ற கேள்வியைக் கேட்டார். அதற்குப் பதிலளித்த டிரம்ப்:
• "நான் இறந்த பிறகு மக்கள் என்னை மிஸ் செய்வார்கள் என்று நம்புகிறேன்" என்றார்.
• மேலும், "நான் ஒரு ஆன்மீகவாதி (Religious person), எனவே கொள்கைப்படி நான் சொர்க்கத்திற்குத் தான் செல்வேன். நான் நரகத்திற்குச் செல்ல விரும்பவில்லை" என்று கூறினார். 

 

No comments:

Post a Comment

அறியாமையின் ஆபத்து

அறியாமையின் ஆபத்து: முட்டாள்களை அடையாளம் காண்பதும், விலகி நிற்பதும் ஏன் அவசியம்? " முட்டாள்களோடும் தற்குறிகளோடும் ஒருபோதும் விவாதத்தில்...