எட்டாத நீதி
************
புத்தகக் கோபுரத்தின் உச்சியில் நீதி,
பூமியின் தளத்தில் ஏழையின் கையேந்தல்;
எட்டாத உயரத்தில் விதிகளிருப்பின்,
எளியோர்க்கு எங்கு கிடைத்திடுமாம் நீதி?
மண்ணான மனிதநேயம்
*************************
மண்ணில் விழும் குண்டுகள்
மனிதத்தை உலுக்கிடவில்லை,
விண்ணை முட்டும் அழுகுரலும்
மனச்சான்றைத் திறந்திடவில்லை;
இடிபாடுகளின் நடுவே
இற்றுப்போனது மனிதநேயம்!
ஆசையெனும் தூண்டில்
********************
மீன்தனை பிடித்திட
வைத்திடுவார் புழுதனை...
மானிடரை பிடித்திட
தூண்டிடுவார் ஆசை தனை...
ஆசை தந்து, பின்
ஆட்டிப்படைப்பார் வாழ்வதனை!



No comments:
Post a Comment