ஏனென்று தெரியாமல் – இந்த வையகத்தில்
எல்லோரும் கொண்டாடும் இனிய திருவிழா!
அருகர் அமரத்துவம் அடைந்தாரென்று அமணர்களும்,
குரு கோவிந்தசிங் விடுதலை பெற்ற நாளென்று சீக்கியரும்,
நரகாசுரன் வதமடைந்த நன்னாளென்று வைதீகரும்,
வனம் வென்று ராமர் சீதை வந்த நாளென்று வடவரும்,
ஏனென்று தெரியாமலே – மன எழுச்சியோடு
எல்லோரும் கொண்டாடும் இனிய திருவிழா!
புத்தாடை பலகாரம் பட்டாசெனக் குழந்தைகளும்,
புதுச்சேலை பரிசெனப் பெண்டிரும் இன்பமுற,
வியாபாரம் நடப்பதாலே வணிகப் பெருமக்களும்,
தொழில்கள் பல சிறப்பதாலே தொழிலாளர் வர்க்கமும்,
அவரவர் தேவைக்காய்... தங்களின்
ஆசைக்காய் கொண்டாடும் அனைவரின் திருவிழா!
உண்மை உரைத்தார்..
ReplyDeleteஉண்மை உரைத்தீர்..
ஏனென்று தெரியாமலே எதுவும் புரியாமலே
பிழைப்பு நடக்குது
மகிழ்வும் கிடைத்தது
ஊர் கடந்தும்
மாவட்டம் கடந்தும்
மாநிலம் கடந்தும் பெற்றவர்களை தேடி
பெரியவர்களை தேடி
ஒடிவந்து ஆசிபெறும்
நாளிது நாளிது
எனவேமகிழ்ந்தார் பெரியோர்
காலத்தின் கூத்து இது
நாமும் போவோம்
கால ஓட்டத்தில்..
இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்