புத்தகம் சுமக்க வேண்டிய தோள்களிலே
புன்னகை மாறாக் குழந்தையவள்!
விளையாடித் திரிய வேண்டிய வயதினிலே
வீட்டுப் பொறுப்பைச் சுமந்தவள்!
அம்மா இல்லாத காரணத்தால் – அவள்
அக்கா என்ற நிலையைத் தாண்டிவிட்டாள்!
தன் மடியில் தங்கையைத் தூங்கவைத்து
தாயின் இடத்தை அடைந்துவிட்டாள்!
ஒரு கையில் பேனா பிடிந்திருக்க,
மறுகையால் பாசம் அணைத்திருக்க,
தேர்வும் எழுதுகிறாள் அச் சிறுமி – தன்
வாழ்வின் தேர்வையும் வெல்லுதற்காய்!
வகுப்பறைப் பலகைச் சாம்பலிலும்
வறுமையின் கறைகள் தெரிகிறதே!
பிள்ளைப் பருவம் தொலைந்தாலும்
பெண்ணின் பெருமை சொல்கிறதே!
இளம்வயதின் வறுமையின் கொடுமைகள்
இங்கு அனுபவித்தவருக்கே வலிபுரியும்!
சின்னஞ்சிறு வயதில் தாய்மை கொண்ட
சிங்கப் பெண்ணை உலகம் வணங்கிடும்!

No comments:
Post a Comment