நாவினிக்க மொழிந்திடுவார்
நல்ல தமிழ் விரும்பிடுவார்
நயமான வார்த்தை கூறி
நல்ல வழி காட்டிடுவார்
நட்பு தமிழ் வட்ட தலைவர்
நற்றமிழ் ஆசான் அய்யா
நாநாவுக்கு முதல் வணக்கம்...
எளியவனிவன் என்று பாடிடுவான்
என்றெண்ணி இகழந்தொதுக்காது
என்னையும் கவியென
ஏற்றுக்கொண்ட அவையாம்
ஏற்றமிகு நட்பு தமிழ் வட்டத்திற்கு
எளியேனின் வணக்கங்கள்...
அறம் பொருள் இன்பமென
அத்தனையும் கண்டதமிழ்,
அகம் புறம் என வாழ்வியல்
அற்புதம் கண்ட தமிழ்,
ஐவகை நிலம் கண்டு
ஆட்சி செய்த தமிழிருக்க
இந்தியை திணிக்கிறாரே... ..
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அங்காடிகள் வைத்து
அகிலமெலாம் வணிகத்தை
அறிமுகம் செய்த தமிழ்
அந்தோ வைக்கின்றாரே
அந்நிய மொழிகளில்
அங்காடிகளின் பெயர்தனை...
அழகழகாய் தமிழ் பெயர்
ஆயிரமாயிரம் இருக்க
அழகான குழந்தைகளுக்கு
அன்னிய மொழிதனிலே
அர்த்தமில்லா பெயர் சூட்டி
அசிங்கப்படுத்துகிறாரே
அறிவிலா மாந்தர்கள்....
கணவனின் சாவுக்கு நீதிகேட்க
கண்ணகி வழக்காடிய தமிழ்.,
காலம் காலமாய்
குறளும் நீதி போதனைகளை
கூறிய தமிழிருக்க
அன்னிய மொழியாம்
ஆங்கிலத்தில் வழக்காடல் முறையோ...
இலக்கிய நயமும்
இலக்கண முறை கண்டு
இனிதாய் வாழ்ந்திட
இலக்கியம் கோடி இருக்க
இலட்சியம் ஏதுமின்றி
இலக்கில்லா பயணம் செல்ல
இந்தியை திணிக்கிறாரே...
அகிலத்தை காக்க அவதரித்ததாய்
அடியார் நம்பும் ஆண்டவனுக்கு
ஆரிய மொழியில் அர்ச்சனையாம்
அருந்தமிழுக்கே அங்கிடமில்லையாம்
தாய்மொழி பயின்ற தகை
சான்றோர் பலர் இருக்க
அறிவியல் புலமையோடு
சாதனை பலர்படைக்க
செத்து சமாதி சென்ற
சனாதான மொழியாம்
சமஸ்கிருதம் தினிக்க முயல்கிறாரே..
சாக்கடை கருத்தாம்
சாதிபேதம் பெண்ணடிமை போதிக்கும்
சமஸ்கிருத மொழிதன்னை,
பத்து வீட்டுப்பிச்சை மொழி
அரைப்பிரசவத்தில் அவதரித்த
இந்தியைத் தினிக்க நினைப்போர்
அனைவரும் தீயினில் தூசாவார்!
(இன்று நட்பு தமிழ் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற கவி சங்கமத்தில் நான் பாடிய கவிதை)

Awesome,congrats.
ReplyDeleteமிகச்சிறப்பு
ReplyDeleteKanavan endra varthaikku irandusuli 'na, enbadhu sariyaga theriyavllai,,,
ReplyDeleteநன்றி அய்யா, திருத்திக் கொண்டேன்.
Delete