சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Tuesday, 18 November 2025

தேசிய மருந்தியல் வாரம் 2025

இந்தியாவில் வருடா வருடம் நவம்பர் மூன்றாவது வாரம் மருந்தியல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது

இந்தியாவில் மருந்தியல் வாரம் 2025 என்பது 64வது ஆண்டாக, நவம்பர் 16–22, 2025 வரை  இந்த ஆண்டின் குறிக்கோளாக தடுப்பூசியின் ஆதரவாளர்களாக மருந்தாளுநர்கள்" என்ற கருப்பொருளுடன் கொண்டாடப்படுகிறது. "

. இந்திய மருந்து சங்கம் (IPA) போன்ற அமைப்புகள் கொண்டாட்டங்களை வழிநடத்தும் தடுப்பூசி, நோயாளி பராமரிப்பு மற்றும் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதில் மருந்தாளுநரின் பங்கை மையமாகக் கொண்டு இந்த ஆண்டு கொண்டாடப்படுகிறது. 


தேசத்தைக் கட்டியெழுப்புதல், பொது சுகாதாரம் மற்றும் தடுப்பூசி ஆதரவில் மருந்தாளுநர்களின் பங்கை ஊக்குவித்தல் என்ற குறிக்கோளுடன் இந்த ஆண்டு மருந்தியல் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகளாவிய நோய் தடுப்பு திட்டம் என்ற புரட்சிகரமான திட்டம் 90களில் இந்தியா முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டது. அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கும் பனிக்கட்டியால் மூடப்பட்ட குளிர்சாதன பெட்டி (ஐஸ் லைன்ட் குளிர்சாதன பெட்டி) ஐ எல் ஆர், ஆழ் உறைப் பெட்டகம் டீப் ஃப்ரீசர் டி ஃப்ரீசர் வழங்கப்பட்டுள்ளது. 

ஐ எல் ஆர் இல் 2-8 டிகிரி செல்சியஸ் தட்பவெட்ப நிலையிலேயே மருந்துகள் பராமரிக்கப்பட்டு வரும். மின் தடை செய்யப்பட்டாலும் 24 மணி நேரத்திற்குள் அந்த தட்பவெட்பத்தில் மருந்துகளை பராமரிக்கும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். 

அதேபோல டீப் ஃப்ரீசரில் பிளாஸ்டிக் ஐஸ் குப்பிகள் மைனஸ் 20 டிகிரி செல்சியஸ்க்கு தயார் செய்யும் விதத்தில் கட்டமைக்கப்பட்டிருக்கும். ஒருவேளை மின்தடை ஏற்பட்டு நீண்ட நேரம் ஆகிவிட்டால், இந்த பிளாஸ்டிக் ஐஸ் குப்பிகளை பெரியதொரு பாதுகாப்பான பெட்டியில் வைத்து மருந்துகளை அதனுள் வைத்து வைத்து வைத்து கூடுதல் நேரம் தேவைப்படும் தட்பவெட்ப நிலையில் பராமரிக்க இயலும். 

தவிரவும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து வெக்சின் கேரியர் என்று அழைக்கப்படும் பெட்டிகளுக்குள் இந்த நான்கு ஐஸ் குப்பிகளை வைத்து மருந்துகள் அதனுள் வைத்து பயனாளர்களான தாய்மார்களுக்கு அந்த தடுப்பூசி இரண்டிலிருந்து எட்டு டிகிரி செல்சியஸ் தட்பவெட்ப நிலையில் கிடைக்குமாறு எடுத்துக் கொள்ளுங்கள் செல்ல இயலும். 

எனவே மருந்து தயாரிக்கப்படும் இடத்திலிருந்து மாநில சேமிப்பு மையம், மாவட்ட சேமிப்பு மையம், அதன் பின் ஆரம்ப சுகாதார நிலையம், இறுதியில் துணை சுகாதார மையம் வரை மருந்துகள் தேவைப்படும் 2-8 டிகிரி செல்சியஸ் தட்பவெப்ப நிலையில் சேர்க்கும் மாபெரும் புரட்சிகரமான செயல்பாட்டு திட்டம் இது. 

டெட்டனஸ், போலியோ தட்டம்மை, ரூபெல்லா, குழந்தைப் பருவ காசநோயின் கடுமையான வடிவம், ரோட்டாவைரஸ் வயிற்றுப்போக்கு, ஹெபடைடிஸ் பி, மூளைக்காய்ச்சல் நிமோனியா (ஹீமோபிலஸ்) இன்ஃப்ளூயன்ஸா வகை பி ஆல் ஏற்படுகிறது), நிமோகோகல் நோய்கள், ஜப்பானிய மூளைக்காய்ச்சல் போன்றவற்றுக்கான தடுப்பூசி மருந்துகள் திட்டத்தில் வழங்கப்படுகின்றன. 

இதன் விளைவாக பரவலான தடுப்பூசி காசநோய் , போலியோமைலிடிஸ் , தட்டம்மை , டிப்தீரியா , டெட்டனஸ் , பெர்டுசிஸ் , ஹெபடைடிஸ் பி , மஞ்சள் காய்ச்சல் , மூளைக்காய்ச்சல் ஏ மற்றும் பல நோய்களிலிருந்து வரும் நோயுற்ற தன்மை மற்றும் இறப்பு விகிதங்களை கணிசமாகக் குறைத்துள்ளது.

இதில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்தாளுநரின் பங்கு என்பது தேவையான தடுப்பூசி மருந்துகளை பெற்று அய் எல் ஆரில் வைத்து பணியாளர்களுக்கு வழங்குவது, தினசரி தட்பவெட்ப ப்ப அட்டவணை டெம்பரேச்சர் சார்ட் பராமரிப்பது, களப்பணியாளர்கள் பயன்படுத்திய காலி குப்பிகளை சேகரித்து அடுத்த வாரம் வரை அதை அய் எல் ஆரில் பராமரித்தல் போன்ற வேலைகளை செய்ய வேண்டும். டெம்பரேச்சர் சார்ட் பராமரிப்பின் நோக்கம் காலை மாலை இரண்டு வேளை இரண்டிலிருந்து எட்டு டிகிரி செல்சியசுக்குள் அந்த தடுப்பூசி மருந்துகள் பராமரிக்கப்பட்டு வருகிறது என்பதற்கான உறுதி ஏற்பாடாகும்.

இந்தியாவில் நடைபெறும் உலகளாவிய நோய்த்தடுப்பு திட்டத்தின் மூலம் பெருமளவு நோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அத்திட்டத்தில் மருந்தாளுனர்களுக்கு உயரிய பங்கு இருப்பதை எண்ணி பெருமிதம் கொள்வோம். 


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...