நான் வேலைக்கு சேர்ந்த புதிதில் எல்லோரும் கம்பவுண்டர் என்றுதான் சொல்லுவார்கள். ஆஸ்பத்திரியில் கட்டுகிறவரையும் கம்பவுண்டர் என்று தான் அழைப்பார்கள். ஏன் தண்ணீர் எடுத்து வைப்பவர்களை கூட கம்பவுண்டர் என்று தான் அழைப்பார்கள்.
எனக்கு கடுப்பா இருக்கும் வேலை மெனக்கெட்டு அவர்களிடம் மருந்தாளுநர் என்றால் என்ன என்று விளக்குவேன். ஒரு மரமண்டைக்கும் உறைக்காது. கம்பவுண்டர் என்று தான் சொல்வார்கள். தொலைந்து போகட்டும் என்று விட்டு விடுவேன்.
ரொம்ப நாள் கழித்து நான் ராணியார் மகப்பேறு மருத்துவமனையில் மருந்தாளுனராகப் பணிபுரிந்த போது அங்கு இருக்கும் மருத்துவ அலுவலர் ஏதோ ஒரு பிரச்சனைக்காக மருந்து கிடங்கு அலுவலரை கூப்பிட்டு அனுப்பினார். எவ்வாறு கூப்பிட்டார் என்பது தான் வேடிக்கை. கம்பவுண்டர் வெங்கடாஜலத்தை கூப்பிடுங்கள் என்று கத்தினார்கள். அவர் மருந்தாளுனராக பணிபுரிந்து, தலைமை மருந்தாளுநராகி, மருந்து கிடங்கு அலுவலராக பதவி உயர்வு பெற்று கெசட்டட் ஆபீஸராக பணிபுரிந்தால் போதும். கம்பவுண்டர் என்று தான் அந்த மருத்துவர் அழைத்தார். அவர்களே எவ்வாறு அழைக்கும் போது சாதாரண கிராமத்தாரை சொல்வதற்கு என்ன இருக்கிறது.
ஆதி காலத்தில் இருந்து வந்த எல்லா திரைப்படங்களிலும் மருத்துவருக்கு உதவியாக அல்லக்கை போல கம்பவுண்டர் என்று ஒரு ஆளை காட்டுவார்கள். பல படங்களில் அவ்வாறு பார்த்து சலித்துவிட்டேன். எல்லோரும் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். இதற்காக பல ஆய்வுகள் மேற்கொண்டேன். பழைய மெடிக்கல் கோடு புத்தகங்கள் எல்லாம் கம்பவுண்டர் கம்பவுண்டர் என்றே குறிக்கப்பட்டு இருந்தது. படிப்பு கூட டிப்ளமோ இன் கம்பவுண்டிங் டிப்ளமோ இன் கம்பவுண்டிங் என்றுதான் இருந்தது. பின்னாளில் மருந்தியல் சட்டம் 1948 வந்த பிறகு தகுதி வாய்ந்த நபர்கள் தகுதி வாய்ந்த நபர்கள் என்று வர டிப்ளமோ இன் பார்மசி டிப்ளமோ மருந்தகத்தில் உருவானது. 1954 இல் அரசு கம்பவுண்டர் என்ற பெயரை பார்மசிஸ்ட் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதன் பின் மருந்தாளுநர் என்பவர் பார்மசிஸ்டென அழைக்கப்பட்டார். இருந்தாலும் காலம் காலமாய் புழங்கி வந்த கம்பவுண்டர் என்ற பெயர் அவ்வளவு எளிதில் ஒழிவதாக இல்லை.16 வயதினிலே திரைப்படத்தில் ஸ்ரீதேவி கமலஹாசனை பார்த்து கேட்பார். எல்லோரும் உன்னை கோபாலகிருஷ்ணன் என்று தானே கூப்பிடுகிறார்கள். கமலஹாசன் சொல்வார் எவன் கூப்பிடுறான்..... எல்லோரும் சப்பானின்னு தான் கூப்பிடுறாங்க... அது போல தான் இதுவும்....
திருவள்ளுவர் கூட "உற்றவன் தீர்ப்பான் மருந்துழைச் செல்வான் என்று அப்பாற் நாற் கூற்றே மருந்து" என்று குறிப்பிட்டு இருப்பார்.
அதாவது நோயுற்றவன், மருத்துவன், உடனிருந்து மருந்தரைத்து கொடுப்பவன், மருந்து என நான்கு கூறுகளைக் கொண்டதாக குறிப்பிட்டு இருப்பார்.
அந்த காலத்தில் மருந்துகள் என்பது அரைத்து உடனுக்குடன் கொடுக்கப்பட்டது. பின்னாளில் அலோபதி மருந்துகள் கூட எலிக்சர்ஸ்எலிக்சர்ஸ், பவுடர்ஸ்போடர், டிகாக்ஷன் டிகாக்ஷன், மிக்சர் கலவை என்ற முறையில் தான் மருந்துகள் வழங்கப்பட்டன. நான் படித்த காலத்திலும் வேலைக்கு வந்த காலத்திலும் மிக்சசர் எனப்படும் கலவை மருந்து தயாரிக்கப்பட்டு வழங்கப்பட்டது.
நான் பயிற்சி எடுத்த எர்ஸ்கின்(ராஜாஜி .) மருத்துவமனையில் 15 நாள் பயிற்சியே மிக்சர் தயாரிப்பிலும் ஐயின்மென்ட் தயாரிப்பிலும் கழிந்தது. 10 வகை மிக்சர்கள் தயாரிக்கப்பட்டன. அதே போல Whitfield, Gentian Violet, Zinc cream என ஐந்தாறு வகை ஐயின்மென்ட்தயாரிக்கப்பட்டன.
அதேபோல கட்டு கட்டுவதற்கு போரக்ஸ் கிளிசரின் போன்றவையும் தயாரிக்கப்பட்டன. அதாவது நாமே கலவையை உருவாக்கி மக்களுக்கு வழங்கக்கூடிய மருந்தோடு நேரடி தொடர்புடைய பணியை செய்து வந்தோம். ரெடிமேடு ஆயின்மென்ட்கள் பின்னாளில் வந்த பிறகு நாம் தயாரிக்கும் வேலை நின்று போனது. அதேபோல மிக்சர் தயாரிப்பும் முழுமையாக நின்று போனது. மக்கள் வாங்க தயாராக இல்லையா? அல்லது அரசு வேண்டாம் என்று முடிவு எடுத்ததா, என்ன காரணம் என்று தெரியவில்லை. எனக்கு தெரிந்து மதுவிலக்கு இருந்த காலங்களிலேயே கார்பனேட்டிவ் மிக்சர் தயாரிக்க பயன்படுத்தப்படும் டின்சர் ஜிஞ்சர் தான் காரணமாக இருக்கும் என நினைக்கிறேன். ஏனென்றால் அலாதி போதை தரக்கூடிய மருந்து அதுதான்.
எப்படியோ மாத்திரை மருந்துகள் அதிகரித்த பிறகு, எல்லாம் ரெடிமேடு மருந்துகளானதால் எடுத்துக் கொடுக்கும் வேலை மட்டும் தான். தயாரிக்கும், கலவை செய்யும் வேலை என்பது இல்லாது போய்விட்டது.
அதற்கு முன்னால் மருந்தகம் என்றாலே மருந்து வாடை குபீர் என்று அடிக்கும். எல்லோருக்குமே தெரியும் இது தான் மருந்தகம் என்று.....
எல்லா கலவை மருந்துகளும் ready made மருந்துகளால் நீக்கப்பட்டது.இதுவே நம் பணிக்கு கிடைத்த முதல் அடி. .மருந்துகளை தயாரிக்கும் பணிக்கு படித்து விட்டு விநியோகம் செய்யும் பணியை செய்து வருவதால் தான் நமது படிப்பின் அருமை யாருக்கும் தெரியாமல் போய் விட்டதே.. நமது CP MSO பணியின் grade pay மும் மிகவும் குறைந்து விட்டது.
ReplyDelete