இன்று பெருமையாய் பீத்திக் கொண்டிருக்கும் சனாதன பெருமைகள் உருவாக்கி வைத்திருந்த சமூக அவலங்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது.
நான்கு வர்ணம் என்ற பெயரில் உருவாக்கிய ஜாதி பிரிவினைகள், தீண்டாமை, பெண் அடிமைத்தனம், பால்ய விவாகம், சதி போன்ற ஏராளமான அவலங்கள் இந்திய மக்களை நூற்றாண்டுகளாய் பாழ்படுத்தி வைத்திருந்தன.
இவை அத்தனையும் ஒரே நாளில், யாருடைய பெருந்தன்மையாளோ, சனாதனம் அதுவே தானே தவறு என்று திருத்திக் கொண்டதாலோ மாறிவிடவில்லை. அதற்கு கொடுத்த விலை மிக ஏராளம்...
சில சமூகங்களில், விதவைகள் தங்கள் கணவர்களின் இறுதிச் சடங்கில் தங்களைத் தாங்களே எரித்துக் கொள்வதன் மூலம் விசுவாசத்தை வெளிப்படுத்துவார்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டது. சில சனாதன பதிவுகள் தன்னார்வ செயல்களை விவரிக்கும் அதே நேரத்தில், பல வரலாற்றாசிரியர்கள் சமூக அழுத்தம், விதவையின் களங்கம் மற்றும் வற்புறுத்தல் நடைமுறையை நிலைநிறுத்துவதில் பங்கைக் குறிப்பிடுகின்றனர்.
18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும், வங்காளத்திலும் வட இந்தியாவின் சில பகுதிகளிலும் சதி இருந்தது. ராஜா ராம்மோகன் ராய் போன்ற சீர்திருத்தவாதிகள் அதைக் கண்டித்தனர். கொள்கைகளை மீறுவதாகவும் வாதிட்டனர்.
போர்த்துகீசியர்கள் கோவாவில் சதியை 1515-ல் தடை செய்தனர். பிரிட்டிஷ் அதிகாரியான வங்காள கவர்னர் வில்லியம் பென்டிங், பெண்களை உயிரோடு எரிக்கும் 'சதி'யை “சட்டவிரோதமென்றும் அதனை கடைபிடிப்பவர்கள் நீதிமன்றத்தின் வாயிலாக தண்டிக்கப்படுவார்கள்” என்ற சட்டத்தை டிசம்பர் 4, 1829-ம் ஆண்டு இயற்றினார்
இவ்வளவு ஏன் நமது காலத்திலேயே வட மாநிலத்தில் ரூப் கன்வர் என்னும் பெண்மணி உடன்கட்டை ஏறி மரணம் அடைந்ததை இந்துத்துவாவின் பெருமை பறைசாற்றுவதாக கூறிக்கொண்டு கோயில் எழுப்பியதும் கொண்டாட்டங்களில் ஈடுபட்டதும் மறக்க முடியாத நிகழ்வாகும்.
சனாதனமே சாலச் சிறந்தது மீண்டும் அதை கொண்டு வருவோம் என்று இன்று அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி, கொக்கரித்துக் கொண்டிருப்பவர் கையில் மொத்த அதிகாரமும் சேர்ந்தால் மீண்டும் எதை நோக்கிப் போகும் என்பதற்காக தான் நாம் கடந்த காலத்தை அசைபோட வேண்டி இருக்கிறது, எதிர்காலத்தின் மீது பயத்தால்.....






சரித்திரம் சனாதனத்தை உரித்திடும் .ஒரு சாட்டை. இது எழுத்தாளருக்கு நல்ல வேட்டை.. உள்ளத்தில் உள்ளது வேட்கை.
ReplyDeleteசரித்திர பாடத்தை பள்ளியில் படிக்கும் போது புறக்கணித்து வந்த எனக்கு அதில் ஆர்வத்தை தூண்டும் சகோதரருக்கு மிக்க நன்றி
ReplyDelete