படைத்த உயிர்களில் உயர்ந்தவர் நாமெனப்
பறைசாற்றித் திரிந்திடுவோம்!
பாவம் விலங்குகள் பிரச்சனை யானவை
என்றே உரைத்திடுவோம் — பூமிக்குப்
பாரம் நாமாய் இருந்துகொண்டே!
அழகிய நிலத்தினை அழிப்பவை அவையென
அநியாயம் பேசிடுவோம் — நிதம்
அழித்திடும் கரங்கள் நம்முடையதாயினும்!
அபாயம் விளைவிக்கும் மிருகங்கள் அவையென
அறிக்கை விடுத்திடுவோம் — பெரும்
அபாயத்தின் ஊற்றாய் நாமே இருந்தாலும்!
அடுத்தவர் உடைமையை அபகரிப் பவையென
அவதூறு சொல்லிடுவோம் — மண்ணை
அபகரித்து உண்டது நாமேயாயினும்!
அசுத்தத்தின் பிம்பம் அவையெனத் தூற்றுவோம்
அசுத்தத்தின் வடிவமாய் நாமே இருந்தபடி...
கொடிய கொலைகாரர் அவையெனச் சாற்றுவோம் —
யுத்தமும் சுரண்டலும் நடத்திப் புவியினைச்
சுடுகாடாய் மாற்றிவிட்டு!
ஊரைக் காட்டும் ஒற்றை விரலின்
உண்மை அறிந்திடாமல் — நம்மைச்
சுட்டும் மூன்று விரல்களை









விலங்கினை வாழவைத்து நாம் வாழ்வோம்.
ReplyDelete