அரிமா ஆட்டுடனே
அமைதியாய்
அன்போடு போஸ்
கொடுக்கிறது
அடிமையானவர்கள்
ஆண்டானின்
அன்போடு
இருக்கிறார்கள்..
வல்லூறுகளுடன்
வானில் புறாக்கள்
வாஞ்சையுடன்
பறக்கின்றன...
சாதி இந்துக்கள்
சக்கிலியரோடு
சரிசமமாய்
கதைக்கிறார்கள்
அந்தணர்கள்
அப்துல்லாவோடு
பகிரங்கமாய்
பிரியாணி ருசிக்கிறார்....
அமித்ஷா யோகியார்
இடித்த
மசூதிகளை
கட்டித்தருகிறார்கள்...
கனவுகள் சிதைந்து
கண்விழித்து பார்த்தால்
காண்பதெல்லாம்
கலவரம்தான்
வளமான கற்பனை
ReplyDeleteஉள்ளூரைப் பற்றி கனவுகள் ஏதும் இல்லையா பாஸ்?
ReplyDeleteஉள்ளூரும் சேர்த்து தானே
Delete