எட்டு மணி நேர வேலை.
எட்டு மணி நேர ஓய்வு..
எட்டு மணி நேர உறக்கம்...
எல்லோருக்கும் வேண்டும்
ஏராளமானோர் ரத்தம் சிந்தினர்....
உருவாகின தொழிற்சங்கங்கள்.
உரிமைப் போர் வெடித்தது வே..
உலகமெங்கும் சிவந்தது வே...
இறங்கி வந்தனரே முதலாளிகள்
உறுதியானது உழைப்பாளர் நலன்...
கூலி உயர்வு அற்ப சலுகைகள்.
அவை மட்டுமே போதாதென,
சுரண்டல் ஒழிந்திட வேண்டும்
வர்க்கங்கள் மறைந்திட வேண்டுமென
உருவாகின பொதுவுடமை இயக்கங்கள்..
உழைப்பாளரும் உழவர்களும்
ஒன்றிணைந்து போராடினரே.
உருவானதே சோசலிச அரசுகள்
உருஷ்யா சீனா கியூபாவென
உலகில் மூன்றிலொரு பகுதி சிவப்பாகினவே....
உருவான மக்கள அரசுகள்
உருவாக்கின உன்னத சட்டங்களே
அனைவருக்கும் கல்வி
வேலை வீடு வசதியென
அத்தனை நலத்திட்டங்களை...
தியாக வாழ்வறியா திருடர்களாலும்
கருத்து குருடர்களாலும்
காட்டி கொடுப்பவர்களாலும்
ஏகாதிபத்தியவாதிகள் சத்தியாலும்
சிதைந்ததுவே சோசலிச ஆட்சிகள் சில...
காட்டிக் கொடுப்பவர்களாலே
கழுத்தை அறுப்பவர்களாலே
சொந்த நலனுக்காய் ஊரை
கெடுத்தவர்களால் வந்தது
பின்னடைவு சில சிவப்பு நாடுகளில்....
பொதுவுடமைக் கட்சிகள் பலவானதாலே
தத்துவங்களெல்லாம் நீர்த்துப் போனதாலே
காலத்தைக் கேட்டதாய் மாறாததாலே
மண்ணுக்கேற்றதாய் மாற்றமின்றி
சீட்டுக்கள் சிலவுக்காய் கையேந்தி நிற்கின்றார்....
சொகுசு வாழ்க்கையாலும்
சீரழிந்த சிந்தனையாலும்
வந்தது பின்னடைவுகள்..
பறிபோயினவே பெற்ற
தொழிலாளர் நலன்களுமே..
போராடுபவர் பதைபதைக்க
தொழிலாளி திகைத்து நிற்க
நாதியற்றோர் நலிந்து நிற்க
பலமணி நேர வேலையாய்
பறை சாற்றுகின்றார் முதலாளிமார்...
கன்றிழந்த பசு நீதி கேட்க
ஆராய்ச்சி மணி அடித்த தேசத்தில்
சங்கம் அமைத்திடவும்
காரல் மார்க்ஸ் சிலை கேட்கும்
கெஞ்சுகின்றார் அரசிடமே
கழனியில் உழைப்போர்
கரத்தால் உழைப்போர்
கணினியில் உழைப்போர்
கருத்தாலுழைப்போரென
கரம் கோர்த்திடுவோம் அனைவருமே...
இழந்தவற்றை மீட்டெடுத்திட
இருக்கும் உரிமை காத்திட
இரண்டு வர்க்கமெனும்
இன்னல் என்றும் நீங்கிடவும்
தொழிலாளர் தினத்திலே சபதமேற்போம்.....

No comments:
Post a Comment