விண்வெளியை பற்றியும், பூமியை தாண்டி உள்ள நட்சத்திர மண்டலங்களையும் பற்றியும், ஏகப்பட்ட புராண புருடாக்களை உடைத்தெறிந்து முதன்முதலாக மனிதன் விண்வெளிக்கு பறந்த தினம் இன்று. 12.4.61.
மனித விண்வெளிப் பயணத்துக்கான சர்வதேச நாள் (International Day of Human Space Flight) ஆண்டுதோறும் ஏப்ரல் 12 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. விண்வெளிக்கு முதன் முதலில் பயணம் செய்த ருசியரான யூரி ககாரின் நினைவாக இந்நாளை சிறப்பு நாளாக உலகெங்கும் கொண்டாடுவதற்கு 2011 ஏப்ரல் 7 ஆம் நாள் கூடிய ஐக்கிய நாடுகள் பொதுச்சபை ஏகமனதாகத் தீர்மானித்தது.
சந்திரனை தொட்டதின்று
மனிதசக்தி
சரித்திரத்தை மீறியது
மனித சக்தி
இந்திரன்தான் விண்ணாட்டின்
அரசனென்ற
இலக்கணத்தை மாற்றியது
மனித சக்தி
இந்திரனும் முடியரசாய்
இருக்கொணாது
எனும்குறிப்பைக் காட்டியது
மனித சக்தி
மந்திரமா வெறுங்கதையா
இல்லை: இல்லை
மனித சக்தி; சோவியத்தின்
மனித சக்தி
[ 01-05-57 ]பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்.
No comments:
Post a Comment