சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 9 April 2025

மகாவீரர் ஜெயந்தி



ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறுகன்னத்தைக் காட்டு என்றார் .
கன்னம் பழுக்க அறை கிடைத்தது. 
 சமாதானம் கொடி காட்டி நின்றார்.
 சிலுவையில் அறைந்து கொன்றனர்.. 

பின்னர் வந்தவர்
தன்னை காத்திட
 ஆயுதம் ஏந்தினர். 
 கிறித்துவம் பிழைத்தது, 
 தத்துவம் இறந்தது...

அன்பு அகிம்சை
அதிகம் பேசினர்
புத்தரின் தத்துவம்
பரப்பின சீடர்கள் பலர்.. 
ஆயுதம் எடுத்த பின்னரே
அவரும் தப்பினர்...

அடிதடி, வன்முறை, 
வழிப்பறி, உயிர்க்கொலை
அரபியரின் அன்றாட வாழ்க்கை
அமைதி மார்க்கத்திற்கு
அழைத்தார் நபிகள் ..
அவரும் ஆயுதம் ஏந்தியபின்
அவனியிலே தப்பினார்.....

மகா அவதரித்தார் வீரர் 
அன்பு, கருணை, உயிர் நேசம்
அத்தனையும் போதித்தார். 
எறும்பு கூட வதைபடுமென, 
மயிற்தோகையால் கூட்டி
நடந்தனர் அவர் சீடர்.

ஆயினும் அமனர்
ஆயிரக்கணக்கில் கழுமரமேற்றிட
தன்னைக்காத்திட சமர் மறுத்ததால்
மரித்ததுவே அவருடன் தத்துவம்...

அன்பு , கருனை களவுநீங்கிட
அத்தனை மதங்கள் தத்துவம்
ஆயிரமாயிரம் போதித்திடுனும்
அவனியிலே மிஞ்சியது
சடங்குகள் சம்பிரதாயங்களே..
மரித்தது தத்துவங்களும்
போர்க்குணமிழந்த மதங்களுமே....


No comments:

Post a Comment

எச்சரிக்கை

 தேர்தல் முடிந்த பிறகு பல நண்பர்களோடு தேர்தல் பற்றி விவாதித்தேன். இதில் திமுக அதிமுக பொதுவுடமைக் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் அடங்கும். அ...