சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Wednesday, 2 April 2025

சுகமான கனவுகள்

 


அரிமா ஆட்டுடனே

அமைதியாய் 

அன்போடு போஸ்

 கொடுக்கிறது


அடிமையானவர்கள்

ஆண்டானின்  

அன்போடு

 இருக்கிறார்கள்.. 


வல்லூறுகளுடன்

வானில் புறாக்கள்  

வாஞ்சையுடன்

 பறக்கின்றன... 


சாதி இந்துக்கள் 

சக்கிலியரோடு

சரிசமமாய்

 கதைக்கிறார்கள் 


அந்தணர்கள் 

அப்துல்லாவோடு

 பகிரங்கமாய் 

பிரியாணி ருசிக்கிறார்....

 

அமித்ஷா யோகியார்

இடித்த 

மசூதிகளை 

கட்டித்தருகிறார்கள்... 


கனவுகள் சிதைந்து

கண்விழித்து பார்த்தால் 

காண்பதெல்லாம்

 கலவரம்தான்

3 comments:

  1. வளமான கற்பனை

    ReplyDelete
  2. உள்ளூரைப் பற்றி கனவுகள் ஏதும் இல்லையா பாஸ்?

    ReplyDelete
    Replies
    1. உள்ளூரும் சேர்த்து தானே

      Delete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...