ஈரானில் உள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமாக அங்கீகரிக்கப்பட்ட கோலெஸ்தான் அரண்மனை, பாரசீக கட்டிடக்கலை பாணியின் அற்புதமான அழகை வெளிப்படுத்துகிறது. முன்னர் அரச இல்லமாக இருந்த இது, சிக்கலான ஓடு வேலைப்பாடுகள், நேர்த்தியான ஓவியங்கள் மற்றும் பிராந்தியத்தின் ஆழமான கலாச்சார பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் துடிப்பான தோட்டங்களைக் கொண்டுள்ளது. இந்த அரண்மனை பாரம்பரிய பாரசீக வடிவமைப்பு மற்றும் நவீன கட்டிடக்கலை தாக்கங்களின் ஒரு குறிப்பிடத்தக்க கலவையாகும், இதன் விளைவாக உண்மையிலேயே மயக்கும் காட்சி காட்சி கிடைக்கிறது.
இது போலவே உலகமெங்கும் நூற்றுக்கணக்கான பேரரசுகள், ராஜாக்கள் மற்றும் ஆள்வோருக்கான அரண்மனைகள், வாழ்விடங்கள், செல்வக்குவியல்களாகவும், கலைக்களஞ்சியங்களாகவும் அமைந்துள்ளன.
இது ஆள்வோரது செல்வத்தையும், பராக்கிரமத்தையும் பறைசாற்றுவதாகவே அமைந்துள்ளன.
வாழ்வில் ஒரு முறையாவது இம்மாதிரி அரண்மனைகளை காண வேண்டும் என்று எண்ணம் எல்லோருக்கும் இயல்பு. இதை கண்டவுடன் ஏற்படும் பிரமிப்பானது அந்நாடு இவ்வளவு செல்வமிக்க வளமான நாடு என்ற எண்ணத்தை ஒவ்வொருவருக்கும் உருவாக்கும்.
ஆனால் அதே நேரம், அந்த நாட்டில் வாழும் அத்தனை மக்களும் இதுபோல செல்வமிக்க வளமிக்க மக்களாக வாழ்ந்து இருப்பார்களா என்று சிந்தித்துப் பார்த்தால் நிச்சயமாக மிகப்பெரிய கேள்வி குறி தான் மிஞ்சும்.
சாணக்கியன் என்ற ஒரு மந்திரி சொன்னதாக சொல்வார்கள்..
"மன்னன் ஆடம்பரத்திலும், செல்வத்திலும் திளைத்தால் மக்கள் வறுமையில் வாடுவார்கள். மன்னன் எளிமையும் அமைதியாக வாழ்ந்தால் மக்கள் வளமிக்கவர்களாக ஆனந்தமாக வாழ்வார்கள்...
இது உண்மையா பொய்யா என்று தெரியாது. ஆனால் இன்று வரை நாம் காணுகின்ற காட்சி அதுதான்.
மக்கள் வறுமையில் ஏழ்மையிலே வாழும்போது, இன்னமும் நல்ல உணவும்,ஊட்டச்சத்து குறைபாட்டுடன் வாழும்போது, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உணவு வகைகள், காளான்களும் விசேஷமான உணவுகளை உண்ணும் ஆட்சியாளர்களை கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.
நல்ல ஆடைகள் இன்றி பெரும் பகுதி மக்கள் அவதிப்படுகையிலே, லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள கோட் சூட்டுகளுடன், ஆடம்பர உடைகளுடன் ஆட்சியாளர்கள் பவனி வந்து கொண்டிருக்கிறார்கள்.
பள்ளிகளிலே சிறு குழந்தைகள் செய்யும் மாறுவேட போட்டி போல பேன்சி டிரஸ் அணிந்து கொண்டே விதவிதமாய் போஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
என்றைக்கு கடைக்கோடி குடிமகன் வரை உணவு, உடை, இருப்பிடம், சுகாதாரம் கிடைத்து அமைதியான வாழ்க்கை உத்திரவாதப்படுத்தப்படுகிறதோ அந்த நாடே வளமிக்க நாடாக கருதப்படும்.
It is true sir
ReplyDelete