மொழி உரிமை காத்திடுவோம்..
மானமுள்ளவன் மட்டுமே
தன் மொழி காக்க போரிடுவான் ...
ஈனர்கள் நக்கிப் பிழைப்பவர்
தம் மொழி தான் மறந்திடுவார்.. ...
தாய்மொழி மறந்திட்ட
பீகாரி குஜராத்தி
ராஜஸ்தானி போஜ்பூரி உள்ளிட்ட
பலரும் தம்மொழி இழந்திட்டார்..
மானமுள்ள தமிழன்
இந்திதனை தினிக்கையிலே
மறப்போர் புரிந்தார்
உயிர் துறந்தார்....
வேடிக்கை பார்த்திட்ட
கன்னடனும் மராத்தியனும்
விழித்தெழுந்து இன்று
வீதிக்கு வந்திட்டார்..
வீனர் சிலரிங்கு திராவிடத்தை
இழித்து பேசி தமிழரிடம்
ஒற்றுமை குலைத்து
ஊறு விளைவிக்கின்றாரே...
தேசத்தின் மொழிகளனைத்தும்
சேர்ந்திங்கு போரிட்டால்
இந்தித்தினிப்பு எங்குமே
இல்லாமல் மறைந்திடுமே...
No comments:
Post a Comment