டீசர், டிரெய்லர் என்றால் என் மனைவி கேட்டாள்.
இரண்டுமே ஒன்று தானே, விளம்பர உத்தி என்றேன்.
முன்பெல்லாம் டிரெய்லர் என்று தானே சொல்லுவார்கள். இப்போது டீசர் என்று சொல்லுகிறார்களே என்றாள்...
குழம்பி போனேன்...
எனக்கு சிறு வயதில் படித்த ஒரு துணுக்கு நினைவுக்கு வந்தது.
சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு இங்கு தாராசிங் என்ற ஒரு மல்யுத்த வீரர் இருந்தார். அவர் தனது துறையில் ஒரு புகழ்பெற்ற வீரராகவும், திரைப்பட நடிகராகவும் வலம் வந்தார்.
அதே நேரம் கிங்காங் என்று ஒரு ஹங்கேரிய வீரர் இந்தியாவிற்கு வருகை தந்தார்.
இருவருக்கும் இடையே மல்யுத்த போட்டி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. அது ஒரு வியாபார ரீதியிலான போட்டி என்பதால் விளம்பரங்கள் அதிகமாக செய்யப்பட்டன. ஒரு நாள் கிங்காங் ஒரு கடையில் கண்ணாடி சாமான்கள் வாங்குவதற்காக பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு எதார்த்தமாக?! வந்த தாராசிங் ஹங்கேரி பன்றியே, இங்கு தான் இருக்கிறாயா? நீ இருப்பதாக தெரிந்தால் நான் வந்திருக்கவே மாட்டேனே என்று கேவலமாக திட்டினார். அதற்கு கிங்காங் இந்திய குரங்கு வசமாக சிக்கினா உன்னை இங்கேயே கொன்று விடுகிறேன் பார் என்று பதிலுக்கு சத்தமாக கத்தி இருக்கிறார்.
இருவரும் கண்ணாடி பொருட்களை வீசி எறிந்து கடையில் பொருட்களை நாசம் ஆக்கினர்.
போலீசாரும் மக்களும் இருவரையும் பிரித்து அனுப்பினர்.
இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று விடுவதாக சவால் விட்டு சென்றனர்.
அடுத்த நாள் காலை செய்தித்தாள்கள் எல்லாம் இவர்கள் சண்டை பற்றி தான் விவரமாக வந்தது. ஊரெல்லாம் ஒரே பரபரப்பு. நடக்கப் போகிற சண்டையில் என்ன நடக்குமோ என்று ஆவலோடு மக்கள் காத்திருந்தனர்.
கடுமையான கூட்டம் கூடி ஏராளமான பணம் வசூலானது. ஆனால் அது ஒரு செட்டப் என்பது யாருக்கும் தெரியாது.
இப்படி ஒரு விளம்பர உத்தியை விளம்பர ஏற்பாட்டாளர் சின்ன அண்ணாமலை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தினார் என்று படித்திருக்கிறேன்.
அந்த காலத்தில் திரைப்படங்களாகட்டும், அல்லது மக்கள் பயன்படுத்தும் சாதனங்களாகட்டும், அவற்றைப் பற்றியெல்லாம் சிறு குறும்படங்கள் விளம்பரத்திற்காக தயாரிக்கப்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் துவங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் வெளியிடுவார்கள். அவற்றை டிரெய்லர் என்று சொல்வார்கள். அந்த அப்பொருள்களை பற்றிய சுருக்கமான விபரங்களை மக்களை கவரும் வண்ணமாக காட்சியாக்கி இருப்பார்கள்.
அப்போதெல்லாம் லிரில் சோப், வாஷிங் பவுடர் நிர்மா, விக்கோ வச்சிரதந்தி கிரீம், டூத் பேஸ்ட் போன்ற விளம்பரங்கள் மிக அதிகமாக மக்களை சென்றடைந்தது டிரெய்லர் காட்சிகள் மூலமாகத்தான்.
தொலைக்காட்சிகள் வந்த பிறகு டிரெய்லர்கள் பிரசித்தி பெற்ற மக்களுடைய வாங்கும் பொருள் எதுவென்று தீர்மானிக்கும் திறனை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.
அதன் பிறகு சமீப காலங்களில் திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்ததில் இருந்து, வெளிவரும் வரை டீசர்கள் என்ற பெயரில் இந்த திரைப்படங்களைப் பற்றியது துணுக்குகள், காட்சிகள், பாடல்கள் மிக பிரம்மாண்டமாக வெளிவர ஆரம்பித்தன. டீசர்கள் வெளியிடுவதையே பெரிய விழாக்கள் போல நடத்த ஆரம்பித்தனர்.
தொடர்ச்சியாக பிரபலமான, பெரிய நடிகர்களின் படங்களைப் பற்றிய டீசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிவரலாயின.
இதில் பிரச்சினைக்குரிய விளம்பரங்களும் உண்டு. டீசரில் வரும் பாடலும், காட்சிகளும் திரைப்படத்தில் வராமல் போவதுமுண்டு..
அதை தி யூ டியூப் களிலும் சமூக ஊடகங்களிலும் ரசிகர்கள் வரவேற்றனர், கிண்டலடித்தும், வார்த்தைப் போர்களில் பங்கு பெற்றனர். இவ்வாறு அனைவரையும் டீஸ் செய்வதனாலோ என்னவோ டீசர் என்ற பெயர் வந்திருக்கும் என நினைக்கிறேன். எது சரி என்று சமூகம் தான் முடிவு செய்ய வேண்டும்....
No comments:
Post a Comment