சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 14 July 2025

கர்மவீரர் காமராஜர் புகழ் பாடுவோம்

 


ஆச்சாரியரின் அரசாட்சியில்

அனைவருக்கும் வேலை ..

அப்பன் பார்த்த தொழிலை

அவனவன் செய்து வர ஆணை..


அம்பட்டன் மகனுக்கு சவரக்கத்தி

கொல்லன்மகனுக்கோ உலைக் கருவி

குயவன் மகனுக்கு மண்ணிலே

சக்கிலியன் செருப்பு தைத்திடும் வேலை


வண்ணானுக்கு ஊர்த்துனி துவத்திட

பள்ளன் பறையனுக்கு கழனியிலே வேலை

அய்யர் மகனுக்கோ புரோகிதம்

மேனா மினிக்கி சொகுசு வேலை


சனாதனம் சொல்லி வந்ததை

கச்சிதமாய் செய்ய வந்தார்....

குலக்கல்வி எனு‌ம் பெயரால்

குழிதோண்டும் வேலைசெய்தார்....


சுயமரியாதை இயக்க வீரராம்

பெரியாரும் திராவிட இயக்கத்தாரும்

சமதர்ம வாதிகளும் வீதிக்கு வந்தனர்

கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்கு வந்தார்


குலத்தொழில் திட்டத்தை

குப்பையிலே போட்டு விடு

அனைவரும் கல்வி கற்று

ஆனந்தமாய் வாழ்ந்திடென்றார்..


ஆயிரக்கணக்கில் பள்ளிகள்

அநேக அணைக் கட்டுகள்

புதிய புதிய தொழிற்சாலைகள்

புதிய புதிய திட்டங்களென


தமிழகத்தின் தலைமகனாய்

தலையெழுத்தை மாற்றி

சரித்திரம் படைத்திட்ட கர்மவீரர்

காமராஜர் புகழ்பாடிடுவோம்.




No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...