சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Thursday, 31 July 2025

நடுத்தர வர்க்கமும் நாசமாய் போன நாடும்

  இந்தத் தலைப்பை படித்தவுடன் ஏராளமானோர் என்னை திட்டுவார்கள் என்பது தெரியும். இருந்தாலும் இதை விமர்சனம், சுய விமர்சனம் என்ற முறையில் தான் எழுதுகிறேன். தவறில்லை என்று நான் நம்புகிறேன் .. 

உண்மையில்...


எனக்கு நினைவு தெரிந்த வரை நம் நாட்டில் முன்பெல்லாம் எல்லோருமே தாய் மொழி கல்வி மூலம் தான் படித்தோம். பெரும்பாலும் அரசு பள்ளியில் தான் படித்தோம். இன்று இந்தியாவிலேயே ஓரளவுக்கு படித்த மக்கள் நிறைந்த தமிழகம்.

 வெளிநாடுகளிலும், இந்தியாவில் முழுக்க பல பகுதிகளில் நல்ல உயர்ந்த பணியில் தமிழர்கள் இருப்பது பெருமைக்குரிய விஷயம். இஸ்ரோவில் இருந்து ஏராளமான விஞ்ஞானக் கூடங்களிலிருந்து, மருத்துவ நிலையங்கள் வரை, தொழிற்சாலைகளில் இருந்து கல்வி நிறுவனங்கள் வரை தமிழர்கள் படித்து நன்கு நல்ல உயர்ந்த பதவிகளில் இருக்கும் நிலையில் இருக்கிறார்கள் என்பது எல்லோரும் அறிந்த விஷயம் .அது இல்லை என்று யாராவது மறுப்பார்கள் வீம்புக்கு வேண்டுமானால் இருக்கலாமே தவிர அதுதான் உண்மை.


இவர்களில் 90 சதவீதத்திற்கு மேல் தாய்மொழி கல்வியும், குறிப்பாக அரசு பள்ளிகளிலும் உதவி பெறும் பள்ளிகளிலும் படித்தவர்கள் தான். அந்த வசதி படைத்தவர்கள் கூட அங்கு தான் படிக்க வைத்தார்கள்.


பெரிய கோடீஸ்வரர்களும் சினிமாக்காரர்களும் தொழிலதிபர்கள் வேண்டுமானால் கொடைக்கானலிலும் ஊட்டியிலும் கான்வெண்டில் படிக்க வைத்திருப்பார்கள். மற்றபடி எல்லோருமே சாதாரண பள்ளிகளில் படித்தவர்கள் தான்.


ஆனால் இந்த இருபது ஆண்டுகளுக்குள் தான் ஏராளமான தனியார் பள்ளிகளும், முழுக்க முழுக்க ஆங்கிலக் கல்வி முறையும் கல்வியும் மும்மொழிக் கல்வியும் தமிழகத்தில் பரவி உள்ளன.


உண்டு உறைவிட பள்ளிகளும் மிகப் பிரம்மாண்டமான வசதி உள்ள பள்ளிகளும் பெருத்து விட்டன. இல்லாத அவை இல்லாத ஊர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு நம் மாதிரி தனியார் பள்ளிகள் பெருகிவிட்டன. வசதி படைத்தவர்கள் முதல் நடுத்தர வர்க்கம், மிக மிக சாமானியர்கள் வரை இன்று தனியார் பள்ளியில் தான் பிள்ளைகளை படிக்க வைக்கிறார்கள். 

இந்த ட்ரெண்ட்டை உருவாக்கியவர்கள் பெரும்பாலும் நடுத்தர வர்க்கமே...


தமிழிலேயே படித்து மருத்துவரானவரும் பொறியியலாளரானவரும், ஆசிரியரானவரும் பல்துறை வித்தகர்களும் தங்கள் பிள்ளைகளை ஆங்கிலக் கல்வியில் சேர்த்து விடும்போது, சாதாரண மக்கள் ஆங்கில பள்ளியில் சேர்க்க ஆசைப்படுவதில் என்ன அதிசயம் இருக்க முடியும்.


எனக்கு தெரிந்து ஒரு தமிழ் பற்றாளர். தாய்த்தமிழ் மொழி கல்விக்காக நிறைய இயக்கங்கள் கண்டவர்.. தாய்மொழி கல்விக்காக நூல்கள் எழுதியவர். மக்களை திரட்டி இயக்கங்களெல்லாம் கண்டவர். ஆனால் அவர் வீட்டுக்கு பிள்ளைகளை ஆங்கில கல்வியில் தான் சேர்த்திருந்தார். அதற்கு அவர் சொன்ன காரணம் சீருடைகளில் இருந்து எல்லா வகை ஒழுக்கங்களும் இங்கிலீஷ் மீடியம் ஸ்கூல்ல தான் கிடைக்கும் என்றாரே பார்க்கலாம்..


இதைவிட கூத்து ஒரு தமிழாசிரியர் தனியார் பள்ளியில் வேலை பார்த்தார். வேலைக்கு போகும் போது வேஷ்டி சட்டை தான். நெற்றி நிறைய பட்டை குங்குமத்தோடு போவார். மிகவும் அமைதியான குரலில் மட்டுமே பேசுவார். அதற்கு மேல் அவர் பையனும் சிறுவயதிலேயே பட்டை அடித்து திரிவான். அவருக்கு அரசு பள்ளியில் வேலை கிடைத்தது. அதற்குப் பிறகு பேண்ட் சர்ட் இன் பண்ணிதான் போவார். நெற்றியில் திருநிறையும் காணோம். சத்தத்திற்கும், அலப்பறைக்கும் பஞ்சமே இல்லை. தன் பையனை மட்டும் ஆங்கில கல்வியில் சேர்த்து விட்டார். 

இது மாதிரி நூறு காட்சிகளை நாம் தினசரி காணலாம்.. 

இது மாதிரி அரசு பள்ளிகளில் வேலை பார்த்துக் கொண்டு அல்லது, அரசு பணிகளில் இருந்து கொண்டு தங்கள் பிள்ளைகளை மட்டும் ஆங்கில வழி கல்வி சேர்த்து விடுவது மிக அதிகமாகி விட்டது. இவர்களை பார்த்து வசதி குறைவானவர்கள் கூட கடன் வாங்கியாவது ஆங்கில வழிக் கல்வி, தனியார் பள்ளிகளிலே சேர்த்து விடும் அவலம் தான் நீடிக்கிறது. 

இதே லட்சணத்தில் போனால் தமிழ் படித்தோரின் எண்ணிக்கை மிக அரிதாகிவிடும் அவலம் தான் இருக்கிறது. இதற்கு பெரும்பகுதி நடுத்தர வர்க்கத்தாரே காரணம். 

இதற்கு கூசாமல் இவர்கள் சொல்லும் காரணம், அரசின் கல்விக் கொள்கை, அல்லது தங்கள் வீட்டில் மனைவிமார் கட்டாயப்படுத்துகிறார்கள்.... 

இது மாதிரி ஏதாவது சில்லறை சாக்குப் போக்குகளை சொல்லிக்கொண்டே வளர்ந்து வந்த பாதையை மறந்துவிட்டு, தாய்மொழி கல்வியை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.. 


இது யாரையும் குறை சொல்வதற்காக எழுதப்பட்டது அல்ல..


மேலு‌ம் தொடரும்ம்ம்.....

Tuesday, 29 July 2025

வரலாற்றில் பெண்கள்


டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி புதுக்கோட்டை சமஸ்தானத்தில் தேவதாசி குலத்தில் பிறந்தவர்..

கல்லூரியில் படிக்க வேண்டும் என்று இவர் விண்ணப்பித்தார்.

பெண்கள் படிப்பதே அதிகம். அதுவும் கல்லூரியில் படிப்பதாவது. சனாதனம், சம்பிரதாயங்கள் என்னாவது?!

சனாதனவாதிகள், பழமைவாதிகள் அதிர்வதில் ஆச்சரியம் இல்லை. ஆனால் படித்த மேதாவிகளான
பேராசிரியர்கள், கல்லூரி முதல்வர் ஆகியோரும் அதிர்ந்தார்கள்.

'ஆண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரியில் எப்படி ஒரு பெண்ணை அனுமதிப்பது' என்பது அவர்களின் எண்ணமாக இருந்தது.

புதுக்கோட்டை மன்னரான பைரவத் தொண்டைமானுக்கு இந்த செய்தி எட்ட... அவரின் ஆணையால், முதல் பெண் மாணவியாக நுழைந்தார் முத்துலட்சுமி.எதிர்ப்புகள் காரணமாக, அவரது சேர்க்கைக்கான நிபந்தனை என்னவென்றால், அவரது குணம் "குறைபாடற்றதாக" இருக்கிறதா என்று சரிபார்க்க மூன்று மாதங்களுக்கு அவர் கண்காணிக்கப்பட வேண்டும். வகுப்பறையில், சிறுவர்களிடமிருந்து அவளைப் பிரிக்க நடுவில் ஒரு பெரிய திரை வைக்கப்பட்டது, மேலும் அவர் கல்லூரியை விட்டு வெளியேறிய பிறகுதான் மணி அடிக்கும், அப்போதுதான் சிறுவர்கள் வெளியேற முடியும். அங்கேயும் அசத்தினார்.

Madras Medical College-ல் இடம் கிடைத்தது. அங்கே பெண்களுக்கு என்று தனி விடுதி இல்லை. தெரிந்தவரின் வீட்டில் தங்கிப் படிக்க வேண்டிய சூழல்.
ஆண் மருத்துவ மாணவர்கள் சீண்டல்களில் ஈடுபட்டார்கள். வகுப்பிற்கு வீட்டில் இருந்து வருகையில் திரை போட்ட வாகனத்திலேயே வருவார்.

‘போயும், போயும் பெண்ணெல்லாம் படிக்கப் போகிறாள்’ என்றெல்லாம் வசைபாடுவது மக்களின் வழக்கமாக இருந்தது.

‘என் வகுப்பிற்குள் ஒரு பெண் நுழையக்கூடாது’ எனக் கர்னல் ஜிப்போர்ட் கர்ஜித்தார்.
ஆங்கிலேயரும் பெண்ணடிமை சிந்தனையிலிருந்தது ஆச்சரியம் தான்..

முத்துலட்சுமி வகுப்பிற்குள் நுழையவில்லை. தேர்வு முடிவுகள் வந்தன.
முத்துலட்சுமி கண்டிப்பிற்கும், கச்சிதத்திற்கும் பெயர் பெற்ற ஜிப்போர்ட்டின் அறுவை சிகிச்சை தாளில் முதல் மதிப்பெண்ணைப் பெற்று இருந்தார்.
அதற்குப் பிறகே முத்துலட்சுமியை தன்னுடைய வகுப்பில் அவர் அனுமதித்தார்.
முத்துலட்சுமி மருத்துவப் பட்டம் பெற்ற தருணத்தை , ‘இந்தக் கல்லூரி வரலாற்றின் பொன்னாள்’ என்று சிலிர்த்து ஜிப்போர்ட் எழுதினார்.
புதுக்கோட்டை மகாராஜாவிடமிருந்து 150 ரூபாய் உதவித்தொகை பெற்றார். 1912 ஆம் ஆண்டு ஏழு தங்கப் பதக்கங்களுடன் தனது படிப்பை முடித்தார்.

1927-1930 காலத்தில் சட்டசபையில் நுழைந்தார். அப்படி நுழைந்த காலத்தில் துணைத் தலைவராகவும் இயங்கினார். பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம், பால்ய விவாகத் தடை சட்டம், தேவதாசி முறை ஒழிப்புச் சட்டம் முதலிய பல்வேறு சட்டங்கள் அவரின் முயற்சியால் இயற்றப்பட்டன.
குறிப்பாகத் தேவதாசி முறை ஒழிப்புக்காகத் தீவிரமாக இயங்கினார். அதற்குக் காந்தி, பெரியார் எனப் பல்வேறு தலைவர்களிடம் இருந்தும் ஆதரவு பெருகியது.

சத்தியமூர்த்தி "கலாசாரம், பண்பாடு ஆகியவற்றைக் காக்க, கலைகளைப் பேண தேவதாசி முறை தேவை..
தாசி (தேவதாசி) குலம் தோன்றியது நம்முடைய காலத்தில் அல்ல. வியாசர், பராசரர் காலத்திலிருந்து அந்தக் குலம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. பலருக்கு இன்பத்தை வாரி வழங்கிக் கொண்டும் வருகிறது.
சமூகத்திற்கு தாசிகள் தேவை என்பதை திரும்பத் திரும்பச் சொல்ல விரும்புகிறேன். தாசிகள் கோயில் பணிகளுக்கென்றே படைக்கப்பட்டவர்கள்.
அது சாஸ்திர சம்மதமானது. தாசிகளை ஒழித்துவிட்டால், பரதநாட்டியக் கலை ஒழிந்துவிடும். சங்கீதக்கலை அழிந்துவிடும். ஆண்டவன் கட்டளையை மீறுவது அடாத செயலாகும். அநியாயமாகும்” என்றார்.

தந்தை பெரியார் அவர்களின் வழிகாட்டுதலின்படி மறு நாள் அவையில் முத்துலட்சுமி பேசுகையில் “உங்களுக்கு அக்கா தங்கைகள் இல்லையா? பெண்கள் இல்லையா? மனைவி இல்லையா? உங்கள் குடும்பத்தில் எந்தப் பெண்ணையாவது இதுபோன்ற தொழிலுக்கு அனுப்புவீர்களா? தேவதாசி குலத்தில் பிறந்த ஏராளமானோர் கடவுளுக்கு சேவைகள் செய்து புண்ணியம் தேடிக்கொண்டனர் இனிமேல் தங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் தேவதாசிகளாகி ஆண்டவனுக்கு தொண்டு செய்து புண்ணியம் தேடிக் கொ‌ள்ளு‌ங்க‌ள் " என்று பேசிய போது சத்தியமூர்த்தி பேயறைந்து அமர்ந்துவிட்டார்.
பாரீஸ் வரை சென்று பெண்களின் உரிமை சார்ந்த குரலை முத்துலட்சுமி எழுப்பினார்.

 திருமணமே வேண்டாம் என்று இருந்தவர் சுந்தர ரெட்டியை மணந்து கொள்ளச் சம்மதித்தார்.
‘திருமண உறவில் இருவரும் சமமானவர்கள். என்னுடைய விருப்பங்களுக்குத் தடையாக இருக்கக் கூடாது.’போன்ற விதிகளைச் சுந்தர ரெட்டி ஏற்ற பின்னே திருமணம் செய்து கொண்டார். சடங்குகள் இல்லாத திருமணமாக அது அமைந்தது.

தேவதாசி முறையைச் சட்டம் இயற்றி மட்டுமே ஒழித்துவிட முடியாது என்கிற தெளிவு முத்துலட்சுமி அவர்களுக்கு இருந்தது.

தேவதாசி முறை ஒழிப்பால் ஆதரவற்றுப் போன பெண்களுக்கு என்று அடைக்கலம் தர இரண்டு இல்லங்களே சென்னையில் இருந்தன.
ஒன்று பிராமணப் பெண்களுக்கு மட்டுமானது. இன்னொன்று பிராமணர் அல்லாதவர்களுக்கு உரியது.
நள்ளிரவில் அவரின் வீட்டு கதவை மூன்று இளம்பெண்கள் தட்டி அடைக்கலம் கேட்டார்கள். தான் பொறுப்பில் இருந்த அரசு மருத்துவமனையின் கீழ்வரும் விடுதியின் பொறுப்பாளரை பார்க்க சொல்லி அனுப்பினார்.
அந்தப் பெண்களின் குலத்தின் பெயரை சொல்லியும், அவர்களின் பண்புகளைக் கேவலப்படுத்தும் வகையிலும் வசைபாடல்களை நள்ளிரவில் அவர்கள் எதிர்கொள்ள நேர்ந்தது.
கண்ணீரோடு முத்துலட்சுமி அவர்களின் வீட்டுக்கதவை தட்டினார்கள். அந்தக் கணமே தன்னுடைய வீட்டையே பெண்களுக்கான ஆதரவு இல்லமாக மாற்றினார்.
சில காலத்துக்குப் பிறகு ஆதரவற்ற பெண்களுக்கு அடைக்கலம் தருவதற்காக என்று ‘அவ்வை இல்லத்தை’ உருவாக்கினார்.
அவரிடம் அடைக்கலமான அந்த மூன்று பெண்களும் மருத்துவர், ஆசிரியர், செவிலியர் என்று சாதித்துக் காட்டினார்கள். அவ்வை இல்லத்தின் பெண்களின் கல்வியை முத்துலட்சுமி தானே கவனித்துக் கொண்டார்.
தான் படித்த சென்னை மருத்துவக் கல்லூரியின் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் போதே புற்றுநோய்க்கு என்று தனியான ஒரு மருத்துவமனையை உருவாக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.
தன்னுடைய தங்கையைப் புற்றுநோய்க்கு இளம் வயதிலேயே இழந்ததன் வலி அது. சமூகத்தின் கடைக்கோடி மனிதனுக்கும் புற்றுநோய் சிகிச்சை தர வேண்டும் என்று கனவு கண்டார்.
இலவசமாகச் சேவை செய்ய வேண்டும் என்று அவர் தன்னுடைய கனவை விளக்கினார். விடுதலைக்குப் பிறகு அப்போதிருந்த மருத்துவ அமைச்சரிடம் உதவி கேட்டார்.
“ஏன் மக்கள் புற்றுநோயால் மட்டும் தான் இறக்கிறார்களா?” என்று துடுக்காகப் பதில் வந்தது. சுகாதாரச் செயலாளர் , ‘உங்களின் முயற்சிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஆனால்…’ என்று பீடிகை போட்டு இந்த மாதிரி திட்டமெல்லாம் தேறாது என்று எழுதியிருந்தார்.
அமெரிக்காவில் போய் மேற்படிப்பு படித்துவிட்டு வந்திருந்த மகன் கிருஷ்ணமூர்த்தியை அழைத்தார். அவரோடு அரசு மருத்துவ வேலையைத் துறந்திருந்த சாந்தாவும் இணைந்து கொண்டார்.
அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கான அடித்தளம் போடப்பட்டது. பெரிதாகக் கையில் பணம் இல்லை என்றாலும், மக்களின் உயிர் காக்க ஓடி, ஓடி நிதி திரட்டினார். எளிய இடத்தில் அடையார் புற்றுநோய் மருத்துவமனை 12 படுக்கைகளோடு எழுந்தது.
இன்றைக்கு கிட்டத்தட்ட ஐநூறு படுக்கைகளோடு வருடத்திற்கு இரண்டு லட்சம் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக அவரின் விதை, விழுதுகள் பரப்பி விரிந்துள்ளது.
அரசியல் களத்தில் அயராது இயங்கிய முத்துலட்சுமி தன்னுடைய மருத்துவர் பணியை விட்டுவிடவில்லை. மருத்துவத்தைப் பொருளீட்டும் முதலீடாகப் பார்க்காமல் எளியவர்கள் குறித்த கரிசனத்தோடு இயங்கினார்.
அவர் ராணி மேரி கல்லூரியின் முதல் இந்திய முதல்வராகப் பொறுப்பேற்று சாதித்தார்.

 புதுக்கோட்டையில் குழந்தை திருமணத்தில் இருந்து தப்பிப் புத்துலகை சமைத்த முத்துலட்சுமி ரெட்டி.
30 ஜூலை 1886 அன்று புதுக்கோட்டை மகாராஜா கல்லூரியின் முதல்வராக இருந்த எஸ். நாராயணசாமி ஐயர், சந்திரம்மாள் ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார்.

 பிரபல தமிழ் நடிகர் ஜெமினி கணேசன் முத்துலட்சுமியின் சகோதரர் ராமசாமியின் மகன் ஆவார்.

22 ஜூலை 1968 அன்று சென்னையில் காலமானார்
-

கண்ணிமைத்தே கதை எழுதியவர்



கண்ணிமைத்தே ஒருவர் கதை எழுத முடியுமா?! 

கண் இமைத்தலைத்தவிர பக்கவாதத்தால்  பாதிக்கப்பட்டு உடல் செயல்பாடுகள் அனைத்தும் இழந்தாலும், கண் சிமிட்டல் மூலமே தனது கருத்துக்களை உதவியாளர் துணைக்கொண்டு நிணைவுக்குறிப்பினை படைத்தவரின் சாதனை இது... 


புகழ்பெற்ற பிரெஞ்சு பத்திரிகை ஆசிரியரான ஜீன்-டொமினிக் பாபி 1952 ஆம் ஆண்டு ஏப்ரல் 23 ஆம் தேதி பிறந்தார்.
 அவர் தனது பத்திரிகை வாழ்க்கையை காம்பாட் பத்திரிகையிலும் பின்னர் லு குவோடிடியன் டி பாரிஸிலும் தொடங்கினார். 1974 ஆம் ஆண்டு ஜார்ஜஸ் பாம்பிடோ இறந்த நாளில் அவர் தனது முதல் பை-லைனைப் பெற்றார் . 28 வயதில், பாரிஸ் மேட்ச்சின் கலாச்சாரப் பிரிவின் ஆசிரியராக மாறுவதற்கு முன்பு, தினசரி லு மேட்டின் டி பாரிஸின் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்றார். பின்னர் அவர் எல்லேவின் தலையங்கப் பணியில் சேர்ந்தார் ,  பின்னர் பத்திரிகையின் ஆசிரியரானார்.
டிசம்பர் 8, 1995 அன்று, 43 வயதில், பாபி தனது மகனை தியேட்டருக்கு இரவு வெளியே அழைத்துச் செல்லும்போது பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
 இந்த பக்கவாதத்தால், அவரது உடல் கிட்டத்தட்ட முழுவதுமாக செயலிழந்துவிட்டது., 43 வயதிலேயே ஏற்பட்ட மிகப் பெரிய பாதிப்பால் வாழ்க்கையே மாற்றமடைந்தது. 20 நாட்கள் கோமாவில் இருந்த பிறகு, இடது கண்ணிமை சிமிட்டும் திறனைத் தவிர, அவர் முற்றிலும் செயலிழந்து, நகரவோ பேசவோ முடியாமல் திகிலூட்டும் உணர்வை உணர்ந்தார். அவருக்கு லாக்-இன் சிண்ட்ரோம் ஏற்பட்டது, உடல் அசையாமல் இருக்கும்போது மனம் முழுமையாக விழித்திருக்கும் ஒரு நிலை. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆரம்ப காலத்தில், அவர் கிட்டத்தட்ட 60 பவுண்டுகளை இழந்தார், ஆனால் அவரது மன தெளிவு வியக்கத்தக்க வகையில் அப்படியே இருந்தது.


விரக்திக்கு ஆளாக மறுத்து, பாபி ஒரு அசாதாரண பணியை மேற்கொண்டார. பக்கவாதத்திற்கு முன்பு, பாபி ஒரு புத்தகம் எழுதுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். அவரது பேச்சு சிகிச்சையாளர் சாண்ட்ரின் ஃபிச்சோ,  பயன்பாட்டின் அதிர்வெண்ணின்படி 26-எழுத்து எழுத்துக்களை ஏற்பாடு செய்தார் ,  அதனால் அவர் கட்டளையிட முடியும். பேய் எழுத்தாளரும் ஃப்ரீலான்ஸ் புத்தக ஆசிரியருமான கிளாட் மெண்டிபிலை, அவரது வெளியீட்டாளர் ராபர்ட் லாஃபோன்ட் கூட்டாளர்-உதவி ஸ்கேனிங் எனப்படும் ஒரு அமைப்பைப் பயன்படுத்தி கட்டளையிட அனுப்பினார் . பாபி சரியான எழுத்தில் சிமிட்டும் வரை அவள் எழுத்துக்களை உச்சரித்துக் கொண்டிருந்தாள், மேலும் இரண்டு மாத காலப்பகுதியில் 130 பக்க கையெழுத்துப் பிரதி கடிதத்தை கடிதம் மூலம் பதிவு செய்தாள், ஒரு நாளைக்கு மூன்று மணி நேரம், வாரத்தில் ஏழு நாட்கள் வேலை செய்தாள்.

 இந்த கடினமான முறையின் மூலம், அவர் ஒவ்வொரு வார்த்தையையும், வாக்கியத்தையும், பத்தியையும் - ஒரு நேரத்தில் ஒரு சிமிட்டலையும் இயற்றினார். புத்தகத்தின் மிகவும் நெகிழ்ச்சியான பத்திகளில் ஒன்றில், அவர் தனது பாதிப்பைப் பற்றி சிந்திக்கிறார்.

 “ஒரு நாள்... 45 வயதில், கழுவி, என் பின்புறத்தைத் துடைத்து, புதிதாகப் பிறந்த குழந்தையைப் போல என் உடலைச் சுற்றிக் கொள்வது வேடிக்கையாக இருக்கிறது. மறுநாள், அதே நடைமுறை தாங்க முடியாத சோகமாக உணர்கிறேன், மேலும் ஒரு கண்ணீர் என் கன்னத்தில் உள்ள சூட்களுக்கு இடையில் நழுவுகிறது.

நான்கு ஆண்டுகள் மற்றும் 200,000 கண் சிமிட்டல்களில், பாபி *தி டைவிங் பெல் அண்ட் தி பட்டாம்பூச்சி* என்ற நினைவுக் குறிப்பை முடித்தார், இது அவரது உள் உலகத்திற்குள் ஒரு சக்திவாய்ந்த சாளரத்தை வழங்கியது. துரதிர்ஷ்டவசமாக, 1997 இல் புத்தகம் வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் நிமோனியாவால் காலமானார். ஆனால் அவரது மரபு நீடித்தது. 

அவரது கதை பரவலாகப் பாராட்டப்பட்ட திரைப்படமாக மாற்றப்பட்டது, பாபியின் தைரியத்தையும் படைப்பாற்றலையும் உலகெங்கிலும் உள்ளது பார்வையாளர்களுக்குக் கொண்டு வந்தது, மேலும் மிகவும் பலவீனமான மனிதக் குரல் கூட இன்னும் ஒரு அழியாத அடையாளத்தை விட்டுச்செல்லும் என்பதை நிரூபித்தது.


இதைப்படிக்கும் ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். 

நீயும் நானும் சந்திக்கும் பிரச்சினைகளெல்லாம் பிரச்சினைகளேயில்லை. நீயும் நானும் சந்திக்கும் நோய்களும் பெரிதல்ல.. 

செயலிழந்து அசைவற்ற நிலையில் கூட ஒரு மனிதன் படைப்பாளியாக சாதிக்க முடியும் என்றால், நம்மால் முடியும் என்ற நம்பிக்கை வேண்டும். 






 

கருத்தியல் சுதந்திரம் காப்போம்...

 

நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லையும் நான் மறுக்கிறேன். ஆனால் அதை சொல்லக்கூடிய உரிமை உனக்கு வேண்டும் என்பதற்காக எனது உயிரையும் கொடுத்து பாடுபடுவேன்

-ரூஸோ. 

*************************

எனது கருத்துக்கு மாற்றாக வரும் எல்லா கருத்துக்களையும் மறுப்பேன், நசுக்குவேன், முடிந்தால் அழித்தொழிப்பேன்-

 இது பாசிஸ்டுகளின் குரல்

************************

ஒரு சமூக புத்தகங்களை எரிக்கத் தொடங்கினால் என்ன அர்த்தம், அவர்கள் உண்மையில் எதை மௌனமாக்க முயற்சிக்கிறார்கள்?

உலகமெங்கும் எப்போதெல்லாம் கருத்தியல் குருடர்கள் கை ஓங்குகிறதோ, மதவெறி மேலோங்குகிறதோ அப்பொழுதெல்லாம், மாற்று கருத்தியல் கொண்டவர்களின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. அவர்களின் படைப்புகள், நூல்கள் எரிக்கப்பட்டன, சுவடுகள் தெரியாவண்ணம் அழிக்கப்படுகின்றன... 

நாளந்தா பல்கலைக்கழகத்தில் பௌத்த நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டதும் தென் அமெரிக்காவிலே மாயர்களின் படைப்புகளும் நூல்களும் கிறிஸ்தவ பாதிரிமார்களால் எரிக்கப்பட்டது வரலாற்றுச் சான்றுகள் ஆகும்... 

1933 ஆம் ஆண்டில், அடால்ஃப் ஹிட்லர் ஆட்சிக்கு வந்த சிறிது நேரத்திலேயே, நாஜி இளைஞர்களும் அதிகாரிகளும் ஜெர்மன் கலாச்சாரத்தை "தூய்மைப்படுத்த" குளிர்ச்சியான பிரச்சாரமாக ஜெர்மனி முழுவதும் பொது புத்தக ஏற்பாடுகளை செய்தனர். யூத, மார்க்சிய, சமாதான மற்றும் தாராளவாத சிந்தனையாளர்களின் படைப்புகள் "ஜெர்மன் அல்லாதவை" என்ற முத்திரை குத்தப்பட்டு நெருப்பில் எரியப்பட்டன. இலக்கு வைக்கப்பட்ட எழுத்தாளர்களில் மனோ பகுப்பாய்வின் தந்தை சிக்மண்ட் பிராய்டும் ஒருவர், பாலியல், மயக்க மனம் மற்றும் மனித நடத்தை பற்றிய அவரது நடத்தை எழுத்துக்கள் ஹிட்லர் ஆட்சியால் கண்டிக்கப்பட்டன. அவரது புத்தகங்கள் எரிந்தபோது, வியன்னாவில் இருந்த பிராய்ட், "நாம் என்ன முன்னேற்றம் அடைந்து வருகிறோம். இடைக்காலத்தில், அவர்கள் என்னை எரித்திருப்பார்கள். இப்போது, அவர்கள் என் புத்தகங்களை எரிப்பதில் திருப்தி அடைகிறார்கள்" என்று மனம் நொந்து முறையில் குறிப்பிட்டார்.


ஹிட்லரின் இந்த தணிக்கை நடவடிக்கைகள், நாஜி புத்தக எரிப்புகள்  வரலாற்றை தங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றி எழுதவும், கருத்தியல் இணக்கத்தை சீரழிக்கவும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும். 

மே 10, 1933 அன்று, பல்கலைக்கழக மாணவர்கள் 34 நகரங்களில் "சீர்குலைவு மற்றும் தார்மீக ஊழலுக்கு எதிராக" போன்ற முழக்கங்களின் கீழ் ஒருங்கிணைந்த எரிப்புப் போராட்டங்களை நடத்தினர். 

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், ஹெலன் கெல்லர், கார்ல் மார்க்ஸ் மற்றும் ஹென்ரிச் ஹெய்ன் ஆகியோரின் புத்தகங்கள் உட்பட 25,000 க்கும் மேற்பட்ட புத்தகங்கள் அழிக்கப்பட்டது, அவர்கள் ஒரு காலத்தில் "புத்தகங்களை எரிக்கும் இடத்தில், அவர்கள் இறுதியில் மக்களையும் எரிப்பார்கள்" என்று அச்சுறுத்தும் வகையில் எழுதியிருந்தனர்.


கெஸ்டபோ தனது வீட்டைத் தாக்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, ஆஸ்திரியாவை நாஜி கைப்பற்றிய பின்னர், பிராய்ட் இறுதியில் 1938 இல் லண்டனுக்குத் தப்பிச் சென்றார் . மக்களை விட புத்தகங்களை எரிப்பதன் "முன்னேற்றம்" பற்றிய அவரது அவதானிப்பு கசப்பான முரண்பாடான வகையில் நிரூபிக்கப்பட்டது - சில ஆண்டுகளுக்குள், நாஜி ஆட்சி அவர்கள் முதலில் யாருடைய கருத்துக்களை அழிக்க முயன்றார்களோ, பின்னாளில் அவர்களையே பெருமளவில் அழிக்கும் செயல்களில் ஈடுபட்டனர். 

1933 ஆம் ஆண்டு புத்தக வெளியீடு ஒரு தெளிவான நினைவூட்டலாகவே உள்ளது: 

"சமூக சுதந்திர சிந்தனைக்கு அஞ்சத் தொடங்கும் போது, அவர்கள் பெரும்பாலும் வார்த்தைகளை மௌனமாக்குவதன் மூலம் தொடங்குகிறார்கள் - அவற்றைப் பேசுபவர்களை நோக்கித் திரும்புவதற்கு முன்".


அது எங்கோ எப்பொழுதோ நடந்தது என்று இருந்து விடாதீர்கள். பிற்போக்கு மத இனவெறி போக்கு தலையெடுக்கும் எல்லா பிரதேசங்களிலும் இது நடந்தே தீரும். 

அதற்கு நவீன உதாரணங்களைஇங்கேயும் காணலாம். 

கருத்தியலை கருத்தியலாக சந்திக்க இயலாத கயவர்கள் சமூக வலைதளங்களில் ஆபாசமாக மாற்று கருத்துடையவருக்கு எதிராக வசவு மொழிகளை பிரயோகிக்கிறார்கள் அல்லது மிரட்டுகிறார்கள். கௌரி லங்கேஷவரில் ஆரம்பித்தது மாற்று சிந்தனை எழுத்தாளர்களை படுகொலை செய்கிறார்கள் இங்கும் அந்த விசச்செயல்பாடுகள் பரவ ஆரம்பித்தது விட்டன... 

Monday, 28 July 2025

டீசரா டிரெய்லரா

 டீசர், டிரெய்லர் என்றால் என் மனைவி கேட்டாள்.

இரண்டுமே ஒன்று தானே, விளம்பர உத்தி என்றேன். 

முன்பெல்லாம் டிரெய்லர் என்று தானே சொல்லுவார்கள். இப்போது டீசர் என்று சொல்லுகிறார்களே என்றாள்... 

குழம்பி போனேன்... 

எனக்கு சிறு வயதில் படித்த ஒரு துணுக்கு நினைவுக்கு வந்தது. 

சுமார் ஐம்பது அறுபது வருடங்களுக்கு முன்பு இங்கு தாராசிங் என்ற ஒரு மல்யுத்த வீரர் இருந்தார். அவர் தனது துறையில் ஒரு புகழ்பெற்ற வீரராகவும், திரைப்பட நடிகராகவும் வலம் வந்தார்.

அதே நேரம் கிங்காங் என்று ஒரு ஹங்கேரிய வீரர் இந்தியாவிற்கு வருகை தந்தார்.

இருவருக்கும் இடையே மல்யுத்த போட்டி சென்னையில் நடைபெறுவதாக இருந்தது. அது ஒரு வியாபார ரீதியிலான போட்டி என்பதால் விளம்பரங்கள் அதிகமாக செய்யப்பட்டன. ஒரு நாள் கிங்காங் ஒரு கடையில் கண்ணாடி சாமான்கள் வாங்குவதற்காக பார்த்துக் கொண்டிருந்தபோது அங்கு எதார்த்தமாக?! வந்த தாராசிங் ஹங்கேரி பன்றியே, இங்கு தான் இருக்கிறாயா? நீ இருப்பதாக தெரிந்தால் நான் வந்திருக்கவே மாட்டேனே என்று கேவலமாக திட்டினார். அதற்கு கிங்காங் இந்திய குரங்கு வசமாக சிக்கினா உன்னை இங்கேயே கொன்று விடுகிறேன் பார் என்று பதிலுக்கு சத்தமாக கத்தி இருக்கிறார். 

இருவரும் கண்ணாடி பொருட்களை வீசி எறிந்து கடையில் பொருட்களை நாசம் ஆக்கினர். 

போலீசாரும் மக்களும் இருவரையும் பிரித்து அனுப்பினர். 

இருவரும் ஒருவரை ஒருவர் கொன்று விடுவதாக சவால் விட்டு சென்றனர். 

அடுத்த நாள் காலை செய்தித்தாள்கள் எல்லாம் இவர்கள் சண்டை பற்றி தான் விவரமாக வந்தது. ஊரெல்லாம் ஒரே பரபரப்பு. நடக்கப் போகிற சண்டையில் என்ன நடக்குமோ என்று ஆவலோடு மக்கள் காத்திருந்தனர். 

கடுமையான கூட்டம் கூடி ஏராளமான பணம் வசூலானது. ஆனால் அது ஒரு செட்டப் என்பது யாருக்கும் தெரியாது. 

இப்படி ஒரு விளம்பர உத்தியை விளம்பர ஏற்பாட்டாளர் சின்ன அண்ணாமலை வியாபார நோக்கத்திற்காக பயன்படுத்தினார் என்று படித்திருக்கிறேன்.

அந்த காலத்தில் திரைப்படங்களாகட்டும், அல்லது மக்கள் பயன்படுத்தும் சாதனங்களாகட்டும், அவற்றைப் பற்றியெல்லாம் சிறு குறும்படங்கள் விளம்பரத்திற்காக தயாரிக்கப்பட்ட திரையரங்குகளில் திரைப்படம் துவங்குவதற்கு முன்பும் இடைவேளையின் போதும் வெளியிடுவார்கள். அவற்றை டிரெய்லர் என்று சொல்வார்கள். அந்த அப்பொருள்களை பற்றிய சுருக்கமான விபரங்களை மக்களை கவரும் வண்ணமாக காட்சியாக்கி இருப்பார்கள்.

அப்போதெல்லாம் லிரில் சோப், வாஷிங் பவுடர் நிர்மா, விக்கோ வச்சிரதந்தி கிரீம், டூத் பேஸ்ட் போன்ற விளம்பரங்கள் மிக அதிகமாக மக்களை சென்றடைந்தது டிரெய்லர் காட்சிகள் மூலமாகத்தான்.

தொலைக்காட்சிகள் வந்த பிறகு டிரெய்லர்கள் பிரசித்தி பெற்ற மக்களுடைய வாங்கும் பொருள் எதுவென்று தீர்மானிக்கும் திறனை முழுமையாக ஆக்கிரமித்துள்ளது.

அதன் பிறகு சமீப காலங்களில் திரைப்படங்கள் தயாரிக்க ஆரம்பித்ததில் இருந்து, வெளிவரும் வரை டீசர்கள் என்ற பெயரில் இந்த திரைப்படங்களைப் பற்றியது துணுக்குகள், காட்சிகள், பாடல்கள் மிக பிரம்மாண்டமாக வெளிவர ஆரம்பித்தன. டீசர்கள் வெளியிடுவதையே பெரிய விழாக்கள் போல நடத்த ஆரம்பித்தனர்.

தொடர்ச்சியாக பிரபலமான, பெரிய நடிகர்களின் படங்களைப் பற்றிய டீசர்கள் போட்டி போட்டுக் கொண்டு வெளிவரலாயின. 

இதில் பிரச்சினைக்குரிய விளம்பரங்களும் உண்டு. டீசரில் வரும் பாடலும், காட்சிகளும் திரைப்படத்தில் வராமல் போவதுமுண்டு.. 

அதை தி யூ டியூப் களிலும் சமூக ஊடகங்களிலும் ரசிகர்கள் வரவேற்றனர், கிண்டலடித்தும், வார்த்தைப் போர்களில் பங்கு பெற்றனர். இவ்வாறு அனைவரையும் டீஸ் செய்வதனாலோ என்னவோ டீசர் என்ற பெயர் வந்திருக்கும் என நினைக்கிறேன். எது சரி என்று சமூகம் தான் முடிவு செய்ய வேண்டும்.... 

Sunday, 27 July 2025

தேவை சமாதான சகவாழ்வு

 உலகில் எந்த நாட்டில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆட்சியாளர்களாகவும் அரசுப் பணிகளிலும், பொறுப்புகளிலும் இருந்து கொண்டு சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களால் தங்களுக்கு ஆபத்து என்று கூப்பாடு போடுகிறார்களோ அந்த நாடு பாசிசத்தை நோக்கி நடை போடுகிறது என்று அர்த்தம். அழிவை நோக்கி போகிறது என்று கொள்ளலாம். 


தங்களுடைய கலாச்சாரம், பொருளாதாரம் அழிகிறது என்று கூப்பாடு போடுகிறார்கள் என்றால்,அது தங்களை வளர்த்துக் கொள்ளும் கேவலமான குறுகிய புத்தி அரசியல் என்பது தெளிவாகும்.


தாங்களே ஆண்ட பரம்பரை, தாங்களே ஆளப்பிறந்தவர்கள், தங்களுடைய அகண்ட பிரதேசத்திற்குள் எல்லாம் அடக்கம் என்று எங்கெல்லாம் பிரச்சாரம் நடக்கிறதோ அங்கெல்லாம் வலதுசாரி பிற்போக்குத்தனமான சிந்தனையாளர்கள் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று அர்த்தம். அப்படி பேசி ஆட்சிக்கு வந்து அக்கிரமங்கள் செய்த எந்த அரசும் நிலைக்கவில்லை. நிலைக்க போவதுமில்லை. நிலைத்ததாக வரலாறு இல்லை. 


முன் காலத்தில் வாளை ஏந்தியவர்கள், வாள்வலிமையாலும், போர் தந்திரங்களாலும் மிகப்பெரிய சாம்ராஜ்யங்களை உருவாக்கினார்கள். அது சில காலமோ, நீண்ட காலமோ நீடித்திருந்தாலும், நிலையாக இருந்தது இல்லை. அசைக்கவே முடியாது என்று நம்பிக்கொண்டிருந்த சாம்ராஜ்யங்கள் எல்லாம் அடி மண்ணோடு சாய்ந்து போனது தான் வரலாறு.


கிரேக்க, ரோமானிய, மவுரிய பேரரசுகள் எல்லாம் வெறும் நினைவுச் சின்னங்களாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன. 



இவ்வாறு இனவெறி மொழிவெறி மதவெறி போன்றவை தலையெடுத்து நிற்கும் எல்லா நாடுகளிலும் மக்களெல்லாம் அதே சிந்தனையோடு மோதல்களில் ஈடுபடுபவர்கள் என்ற அர்த்தமல்ல. இன்னும் சொல்லப்போனால் உலகில் எல்லா நாடுகளிலும் வாழும் மக்கள் சமாதானமான அமைதியான வாழ்க்கையை மட்டுமே விரும்புவார்கள். எனவே, அமைதியான, வாழ்க்கையில் மட்டுமே நிம்மதியாக வாழ முடியும் என்பது எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் குறுகிய வெறி தூண்டப்பட்டு, அதற்கு சில நேரம் மக்கள் ஆட்படும்போது உள்நாட்டு கலவரங்களும், குழப்பங்களும், அழிவுகளும் மட்டுமே நிறைந்திருக்கும். மக்களின் நிம்மதி குறைந்திருக்கும்.


ஜெர்மனியிலும் ஆளப்பிறந்தவர்கள் ஆரியர்கள் மிக உயர்ந்த வம்சம் நாங்கள் தான் யூதர்களால் ஜெர்மானியர்களுக்கு ஆபத்து என்று கூக்குரலிட்டு, பொய்யே பேசி ஆட்சிக்கு வந்து, பல அக்கிரமங்கள் செய்த ஹிட்லரும் மண்ணோடு மண்ணாக  மடிந்தான்.


பழம்பெருமையும் பொய்யையும் மட்டுமே திரும்பத் திரும்ப பேசி வாய்ச்சவடால் ஆட்சிக்கு வந்து பாசிசத்தை உருவாக்கிய முசோலினியும், அவனால் ஏமாற்றப்பட்ட மக்களாலேயே அடித்துக் கொல்லப்பட்டான்.


இலங்கையில் முன்னொரு காலத்தில் பிரிட்டிஷாரின் ஏகாதிபத்திய ஆட்சியின் கீழ் மக்கள் போராடும்போது ஒன்றுபட்டு தான் இருந்தார்கள். போராடினார்கள். 


ஒரு வழக்கில் ஏகாதிபத்திய அரசுக்கு எதிரான போராட்டத்தில் வழக்குகளை சந்திக்கும் போது, வாதாடி வெற்றி கண்டு சிங்கள பௌத்தபிக்குகளை மீட்ட வழக்கறிஞர் தமிழர். 


அவரை அலங்கரித்த தேரில் வைத்து அந்த தேரை இழுத்து வந்து பௌத்த பிக்குகள்.


ஆனால் பிற்காலத்தில் தமிழர்களுக்கு எதிரான இனவெறியை தூண்டுவதன் மூலமே ஆட்சிக்கு வர முடியும் என்று எண்ணிய சிங்கள அரசியல்வாதிகள், ஐக்கிய தேசியக் கட்சியானாலும் சரி, சுதந்திரக் கட்சியானாலும் சரி இனவெறியை வெகுவாக தூண்டினர். மோதல்களை வளர்த்தனர். அதன் மூலம் ஆட்சிக்கு வந்தனர். ஆட்சிக்கு வந்த பின்னரும் சிறுபான்மை தமிழர்களால் தான் தங்களுக்கு ஆபத்து என்ற பிரமையை உருவாக்கி அதன் மூலம் உள்நாட்டு கலவரத்தை பெரிய அளவுக்கு உருவாக்கினர். அந்த நாடு எவ்வளவு பெரிய பொருளாதார சீரழிவுகளை சந்திக்க நேரிட்டது என்பதை அனைவரும் அறிவோம்.


ஒரு காலத்தில் உலகம் எங்கும் பெரும்பான்மை நாடுகளால் வெறுக்கப்பட்டு, அனாதைகளாய் நாடு நாடாய் திரிந்த யூதர்கள், ஏகாதிபத்தியத்தின் உதவியோடு இஸ்ரேல் என்ற நாட்டை உருவாக்கிய பின்னர், ஆதரித்த பாலஸ்தீனர்களை அழித்து,அகண்ட யூத சாம்ராஜ்யம் என்ற சியோனிச கனவுகளோடு அக்கிரமங்களை புரிந்து கொள்ளுங்கள் வருகின்றனர். .பாலஸ்தீன மக்களையே இன அழிப்பு செய்ய முயற்சி செய்து வருகின்றனர் .உலகமே எதிர்த்து நின்ற போதும். அமெரிக்க ஐரோப்பிய ஏகாதிபத்தியவாதிகள் உதவிகளோடு அக்கிரமங்கள் செய்து வருவதை உலகமே அறியும். 

தடுத்து நிறுத்த வகையின்றி வழி தெரியாமல் ஐக்கிய நாடு சபை திண்டாடுவதையும் அறிவோம்.


இதுபோல பல உதாரணங்களை உலகமெங்கும் நம்மால் காண முடியும். 


ஏன் நம் நாட்டில் கூட சில மதவாத சக்திகள், சிறுபான்மை இஸ்லாமிய கிறிஸ்தவ மக்களுக்கு ஆபத்து நேரிட்டது, நேரிடுகிறது, நேரிட போகிறது,என பெரும்பான்மையினர் மக்களிடையே ஒரு பிரமையை உருவாக்கி, மதவெறியை வளர்த்து வருகின்றனர் என்பதை அமைதியை விரும்பும் அனைத்து மக்களும் அறிவர்.


 போன்ற குறுகிய இன, மத, மொழி வெறி தூண்டப்பட்டு ஆட்சிக்கு வந்த வெறியாளர்களால் வளர்ச்சியை ஒருபோதும் அளிக்க முடியவில்லை, அழிவைத்தான் அந்த நாடுகளுக்கு தந்திருக்கிறது என்பது உலக வரலாறு. 

இதை அறியாமல், புரியாமல் இதன் பின்னே ஆட்டு மந்தைகளாய் செல்லும் மக்கள் அதற்கான விலையை கொடுக்கத்தான் வேண்டி இருக்கும்.. 

Saturday, 26 July 2025

பசியின் கொடுமை

 வயிற்றுக்கு சோறிடல் வேண்டும் இவ்

வையத்தில் வாழும் மனிதருக்கெல்லாம்.....

தனிமனிதனுக்கு உணவில்லையெனில்

ஜகத்தினை அழித்திடுவோம்.... 


இந்த சிறுமிகள் உங்களிடம் ஒரு அழுத்தமான கேள்வியைக் கேட்கிறார்கள்.

“உங்கள் குழந்தை எப்போதாவது பசியுடன் படுக்கைக்குச் சென்றிருக்கிறதா? குளிரில் நடுங்கித் தூங்கிவிட்டதா? ஒரு முறையாவது?”

ஒரு குழந்தையின் இந்த வார்த்தைகளைக் கேட்பது மனதை உடைக்கிறது. 



பசி உலகில் எல்லோருக்கும் பொதுவானது. அதை ஏழை, பணக்காரன், ஆண்டான், அடிமை, அரசன், குடிமகன், முதலாளி, தொழிலாளி என வர்க்க பேதம் அறியாது...

பசி அரசியல் ஆப்பிரிக்கன், அமெரிக்கன், ஐரோப்பியன் என்று கண்ட பேதங்களோ, நாடு பேதங்களோ அறியாது..

பசி படித்தவன், படிக்காதவன், ஞானி, மூடன் என பேதம் அறியாது..

பசி ஆரியன், திராவிடன் என இன பேதமறியாது 

ஆங்கிலம், பிரெஞ்சு, லத்தீன், ஹிப்ரூ, இந்தி, தெலுங்கு, தமிழ் என மொழி பேதம் அறியாது.. 

பசி கிறிஸ்தவன், இஸ்லாமியன், பௌத்தன், யூதன், இந்து, சீக்கியன் என மத பேதம் அறியாது. 

ஏன், ஆறறிவு உள்ளது, ஓரறிவு உள்ளது என்று எந்த உயிரின பேதமும் அறியாது. 

புல் பூண்டிலிருந்து , ஆடு, மாடு, சிங்கம், புலி,  யானை, மனிதன் வரை அனைவருக்கும் பொதுவானது பசி. 

காலம், நேரம், இடம், சந்தர்ப்பம் பார்த்து வருவதில்லை பசி. 

பசி இருப்பதால் தான் உயிரோடு இருப்பது உலகிற்கு தெரிகிறது. 

பசியுடன் தான் உயிரினங்கள், ஒன்றை ஒன்று வேட்டையாடி தின்று பசி அடங்குகிறது. 

ஆனால் எந்த ஜீவராசியும் தனது பசி அடங்கிய பிறகு, அடுத்தவரை பசியால் துடிக்க விட்டு வேடிக்கை பார்ப்பதில்லை, ரசிப்பதும் இல்லை. தன் பசி தீர்ந்ததும் தானே அகன்று விடுகிறது. 

மனிதன் மட்டுமே தன் பசி தீர்த்து விட்டு பிறரை பசியால் துடிக்க விட்டு வேடிக்கை பார்க்கிறான். ரசிக்கிறான். மகிழ்கிறான்.. 

பசி, நோக்காடு, சாக்காடு போன்ற துயரங்களைக் கண்டு மனம் வெதும்பி மனித குலம் உய்வுற மார்க்கம் கண்ட புத்தரும், இயேசுவும், மகாவீரரும், திருவள்ளுவரும் இது போன்ற ஏராளமான மகான்கள் இந்த பூமியில் தான் பிறந்திருக்கிறார்கள்.. 

வாடிய பயிரை கண்டபோதெல்லாம் மனம் வாடிய வள்ளலார் பிறந்த பூமி இது.... 

பல்வேறு முன்னேற்றங்கள் காண இயந்திரப் புரட்சி தொழில் புரட்சி விவசாய புரட்சி வெண்மை புரட்சி என பல முன்னேற்றங்களை காண உழைத்திட்ட ஏராளமான விஞ்ஞானிகளும் அறிஞர்களும் இம் மண்ணிலே தான் பிறந்திருக்கிறார்கள்.. 

இயற்கை பஞ்சத்தால் உயிரினங்கள் பசிக் கொடுமையால் வாடி மடிந்து இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள கூடியதே. 

ஆனால் செயற்கையாய் பஞ்சத்தை உருவாக்கி, லட்சக்கணக்கில் மக்களை கொன்று குவித்த சர்ச்சில்களும் ஹிட்லர்களும் முசோலினிகளும் இது போன்ற கொடூரமான அரக்க மனம் படைத்த ஆட்சியாளர்கள் இதே மண்ணில் தான் பிறந்திருக்கிறார்கள். 

அதே வரிசையில் இன்று பாலஸ்தீன இன மக்களை லட்சக்கணக்கில் கொன்று குவித்து, பட்டினி போட்டு சாகடித்துக் கொண்டிருக்க கூடிய இஸ்ரேலிய ஆட்சியாளர்களும், அவர்களுக்கு துணை போகும் அமெரிக்க ஐரோப்பிய ஆட்சியாளர்களும் இன்று அரக்க மனம் படைத்தவருக்கு சாட்சியாக இருந்து கொண்டிருக்கிறார்கள். 

ஆனால் இயற்கையின் நீதியிலிருந்து இட்லர் முசோலினிகளும் எந்த அரக்கமனம் படைத்த அக்கிராமக்காரர்களும் தப்பியதாக வரலாறு கிடையாது..

அதுவே வரலாறு இதுவரை சொல்லிக்கொடுத்த பாடம்.. 

வரலாற்றின் சில பதிவுகள் 2

 

 உண்மையான ஆஸ்திரேலிய மண்ணின் மைந்தர்களான அடிமைப்படுத்தப்பட்ட பழங்குடி ஆண்கள்...

எல்லைப் போர்களின் கைதிகள் (1900)


1900களின் முற்பகுதியில், அமெரிக்காவின் உட்டாவில் எட்டு வயது நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி.

புச்சென்வால்டின் குழந்தைகள்: விடுதலை மற்றும் உயிர்வாழ்வு, ஏப்ரல் 1945


1945 ஆம் ஆண்டு எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் மீது B-25 குண்டுவீச்சு மோதியதன் விளைவுகள்.


ஸ்காட்லாந்தில் 16 ஆம் நூற்றாண்டின் இடிந்த கோபுர வீடான கிரீனன் கோட்டை, இன்றைய காலத்துடன் ஒப்பிடும்போது 1838 இல் பொறிக்கப்பட்டுள்ளது. 

அய்ரின் தெற்கே உள்ள பாறைகளில் அமைந்துள்ள இது, ஸ்காட்லாந்தின் மிகவும் ஆபத்தான நினைவுச்சின்னமாக இருக்கலாம்.


மனித வரலாற்றின் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றான இரண்டாம் உலகப் போரின் போது, உலகம் இரத்தத்திலும் கொடுங்கோன்மையிலும் மூழ்கியிருந்தபோது, யூகோஸ்லாவியாவைச் சேர்ந்த ஒரு டீனேஜ் பெண் படைகளை விட அதிக தைரியத்துடன் உயர்ந்து நின்றாள்.

அவள் பெயர் லெபா ராடிக், அவள் அசைக்க முடியாத எதிர்ப்பு மற்றும் ஒப்பிடமுடியாத துணிச்சலின் அடையாளமாக மாறினாள்.

"நான் என் மக்களின் துரோகி அல்ல. நீங்கள் யாரைப் பற்றிக் கேட்கிறீர்களோ, அவர்கள் கடைசி மனிதன் வரை உங்கள் எல்லா தீயவர்களையும் துடைத்தெறிவதில் வெற்றி பெற்ற பிறகு தங்களை வெளிப்படுத்திக் கொள்வார்கள்."

அந்த அழியாத இறுதி வார்த்தைகளுடன், லெபா ராடிக் தூக்கிலிடப்பட்டார்.

அவள் உடைந்து போகவில்லை. அவள் கெஞ்சவில்லை. அவள் நம்பியவர்களை - அவளுடைய மக்கள், அவளுடைய தாய்நாடு மற்றும் அவளுடைய இலட்சியங்களைப் பாதுகாத்து, ஒரு போராளியாக இறந்தாள்.

ஏழை தாய் மற்றும் குழந்தைகள், பின்லாந்து 1917.


(இந்த ஆண்டின் 200ஆவது பதிவு) 

Friday, 25 July 2025

வெற்றிக்கு எது முக்கியம்

 


"இந்த கென்ய ஓட்டப்பந்தய வீரர் ஏபெல் முட்டாயை ஞாபகம் வச்சுக்கோங்க, அவர் எல்லை பூச்சுக் கோட்டிலிருந்து சில அடி தூரத்தில் இருந்தார், ஆனால் பலகையைப் பார்த்து குழப்பமடைந்து பந்தயத்தை முடித்துவிட்டதாக நினைத்து நின்றார். ஸ்பானிஷ் ஓட்டப்பந்தய வீரர் இவான் பெர்னாண்டஸ் அவருக்குப் பின்னால் இருந்தார்.. 
என்ன நடக்கிறது என்பதை உணர்ந்து, கென்ய வீரரை ஓடச்சொல்லி ஸ்பானிஷ் மொழியில் சப்தமிட தொடங்கினார். முட்டாய்க்கு ஸ்பானிஷ் தெரியாது, அவருக்குப் புரியவில்லை. என்ன நடக்கிறது என்பதை உணர்ந்த பெர்னாண்டஸ் முட்டாயை வெற்றிக்கோட்டுக்கு தள்ளினார்.

ஒரு பத்திரிகையாளர் இவானிடம், "நீ ஏன் அப்படிச் செய்தாய்?" என்று கேட்டார். 

இவான் பதிலளித்தார், "என் கனவு என்னவென்றால், ஒரு நாள் நாம் ஒருவரையொருவர் தள்ளி வெற்றி பெற உதவும் ஒரு வகையான சமூக வாழ்க்கையை நாம் கொண்டிருக்க முடியும்."

 பத்திரிகையாளர் வலியுறுத்தி கேட்டார். 

"ஆனால் ஏன் நீங்கள் கென்யனை வெல்ல அனுமதித்தீர்கள்?"


 இவான் பதிலளித்தார், "நான் அவரை வெல்ல விடவில்லை, அவர் வெல்லப் போகிறார். பந்தயம் அவருடையது."

 பத்திரிகையாளர் மீண்டும் வலியுறுத்தினார். 

"ஆனால் நீங்கள் வென்றிருக்கலாம்!"

 இவான் அவரைப் பார்த்து, "ஆனால் எனது வெற்றியின் தகுதி என்னவாக இருக்கும்? அந்த பதக்கத்தில் என்ன மரியாதை இருக்கும்?"  என் அம்மா அதைப் பற்றி என்ன நினைப்பார்?"

தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு மதிப்புகள் கடத்தப்படுகின்றன. நம் குழந்தைகளுக்கு நாம் என்ன மதிப்புகளைக் கற்பிக்கிறோம்? வெற்றி பெறுவதற்கான தவறான வழிகளையும் வழிமுறைகளையும் நம் குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக, உதவும் கரத்தின் அழகையும் மனிதாபிமானத்தையும் மற்றவர்களுக்குக் கடத்துவோம். ஏனென்றால் நேர்மையும் நெறிமுறைகளும் வெற்றி பெறுகின்றன!"


வெற்றிக்கு எது முக்கியம்? நேர்மை.. 

ஏனெனில் நேர்மையான வெற்றி மட்டுமே தகுதியானது. 

எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்பதற்காக குறுக்கு வழி கையாளுவோரும் உண்டு. எதிராளியை மனதளவிலும், உடலளவிலும், பலவீனப்படுத்தி வெற்றி பெறுவது உண்டு, அல்லது எதிராளியின் பலவீனத்தை மட்டும் பயன்படுத்தி வெற்றி பெறுவது உண்டு. அதை கிரிக்கெட், கால்பந்து, குத்துச்சண்டை உள்ளிட்ட பணத்திற்காக மட்டுமே விளையாடக் கூடிய விளையாட்டுகளில் சர்வசாதாரணமாக காணலாம். ஆனால் என்றுமே நேர்மையான வெற்றியே மதிக்கத்தக்கது. பாராட்டத்தக்கது...


Thursday, 24 July 2025

வரலாற்றின் சில பதிவுகள்


 1892 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த அற்புதமான புகைப்படத்தில், 1,341 ஆண்டுகள் பழமையான "மார்க் ட்வைன்" மரத்தின் பிரமாண்டமான எச்சங்களுக்கு அருகில் ஒரு குழுவினர் போஸ் கொடுக்கிறார்கள், அது ஒரு காலத்தில் 331 அடி உயரத்தில் வானத்தில் உயர்ந்தது. பசிபிக் வடமேற்கில் இரண்டு மனிதர்களால் 13 கடினமான நாட்களில் வெட்டப்பட்ட இந்த மரத்தின் பிரமிக்க வைக்கும் அளவு மற்றும் வரலாறு இந்த படத்தை மனித உறுதிப்பாடு மற்றும் இயற்கையின் மகத்துவத்திற்கு ஒரு பிரம்மாண்ட சான்றாக ஆக்குகிறது.

ஒரு மரம் பிரம்மாண்டமாவதற்கு நூறு ஆண்டுகள் பிடிக்கின்றது. ஆனால் அதை வெட்டி வீழ்த்துவதற்கு, இரண்டு மனிதர்களுக்கு சில நாட்கள் மட்டுமே போதுமானதாக இருந்தது. 
ஆக்கல் அரிது - ஆனால் அதை அழித்தல் எளிது. 



1936 ஆம் ஆண்டு பண்ணை பாதுகாப்பு நிர்வாகத்திற்காக கார்ல் மைடன்ஸ் எடுத்த இந்த சக்திவாய்ந்த கருப்பு-வெள்ளை புகைப்படம், பெரும் மந்தநிலையின் போது வறுமையின் கடுமையான யதார்த்தங்களைப் படம்பிடித்து காட்டுகிறது.

பொருளாதாரம் மந்த நிலை வந்தால் வளர்ந்த நாடுகளிலும் ஏழை மக்கள் பாடு அதோ கதி தான்.. 




ஏப்ரல் 6, 1893 அன்று, வரலாற்றில் மிக நீண்ட குத்துச்சண்டை சண்டை நடந்தது, இது 110 சுற்றுகள் நீடித்தது (அதாவது அவர்கள் 7 மணி நேரம் 19 நிமிடங்கள் வளையத்தில் கழித்தனர்!) இது ஆண்டி போவன் மற்றும் ஜாக் பர்க் இடையே சமநிலையில் முடிந்தது.



மில்லிக்கு நான்கு வயது, நெல்லிக்கு ஐந்து வயது. ஹூஸ்டன் அருகே உள்ள ஒரு பண்ணையில் பருத்தி பறிப்பவர்கள், மில்லி ஒரு நாளைக்கு எட்டு பவுண்டும், நெல்லிக்கு முப்பது பவுண்டும் பருத்தி பறிக்கிறார்கள். இது கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும்.

குழந்தை தொழிலாளர் உழைப்பு அமெரிக்காவின் சென்ற நூற்றாண்டின் பதிவு.. 




1946 | பெல் கவுண்டி, கென்டக்கி

📍 ஒரு நிலக்கரி சுரங்கத் தொழிலாளியின் சமையலறைக்குள். ஒரு தந்தை. மூன்று குழந்தைகள். நான்கு அறைகள் கொண்ட வீடு, புகை, அன்பு மற்றும் உயிர்வாழ்வில் நனைந்துள்ளது.


இந்த பயங்கரமான சக்திவாய்ந்த புகைப்படம், நிலக்கரி சுரங்கத் தொழிலாளியான டில்லார்ட் எல்ட்ரிட்ஜ், தனது மாதத்திற்கு $9 செலவில் வீட்டின் சமையலறையில் நிற்பதை படம்பிடித்துள்ளது - இது ஃபோர் மைலில் உள்ள பெல்வா சுரங்கத்திற்கு அருகிலுள்ள கென்டக்கி ஸ்ட்ரெய்ட் க்ரீக் நிலக்கரி நிறுவனத்தால் கருணையால் அல்ல, ஆனால் தேவையால் வழங்கப்பட்டது.


நீங்கள் இங்கே பார்க்கும் அனைத்தும் ஒரு கதையைச் சொல்கின்றன:


👣 உழைப்பு மற்றும் வறுமையின் எடையுடன் சத்தமிடும் மரத் தளங்களில் வெறுங்காலுடன் கூடிய கால்கள்.

👕 மெல்லியதாக அணிந்திருக்கும் ஆடைகள், நாகரீகத்தால் அல்ல, வேலை மற்றும் எச்சரிக்கையால்.

🪨 நிலக்கரி தூசியால் மூடப்பட்ட ஒரு மனிதன், தனது குழந்தையை ஒரு கேடயமாகவும் பிரார்த்தனையாகவும் வைத்திருக்கிறான்.

🍽️ ஒரு சமையலறை - மலையின் கட்டளையின் கீழ் உடைந்து போகும் உடல்களுக்கு எளிமையான, பயனுள்ள மற்றும் உயிர்நாடி.


 1940களில் இது அப்பலாச்சியா - அங்கு குடும்பங்கள் நிறுவனத்திற்குச் சொந்தமான வீடுகளில் வசித்து, நிறுவனப் பத்திரத்தில் பொருட்களை வாங்கி, நிலக்கரி மற்றும் நம்பிக்கை இரண்டையும் கொண்ட காற்றை சுவாசித்தனர். எல்ட்ரிட்ஜ்கள் விதிவிலக்கல்ல. அவர்கள் விதி. கொஞ்சம் கேட்டு எல்லாவற்றையும் கொடுத்த அமைதியான ஹீரோக்கள்.


📸 இந்தப் படம் பிற்றுமினஸ் நிலக்கரித் துறையின் மருத்துவ ஆய்வின் ஒரு பகுதியாக எடுக்கப்பட்டது, இது அமெரிக்காவின் எரிசக்தி ஏற்றத்தின் உண்மையான செலவைக் காட்டிய சில பதிவுகளில் ஒன்றாகும் - டாலர்களில் மட்டுமல்ல, உயிர்களிலும்.


அவர்களை நினைவில் கொள்வோம்.

ஏழைகள் போல அல்ல.

அழுக்கு போல அல்ல.

ஆனால் நீடித்தவர்கள் போல.

கடுமையானவர்கள் போல.

ஆழமாக, அசைக்க முடியாத அளவுக்கு மனிதர்கள்.

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...