சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Saturday, 5 April 2025

காக்கா....

 


வீட்டுக்கு 
வெளியே 
பட்டுப்போன மரம்... 

 ஒற்றை காகம் 
ஒன்று பசியோடு
ஓரக்கண்ணால் பார்த்தது.... 

கடும் கோபத்துடன் 
கத்தியது 
காகம்.... 

வடாம், வற்றல் காய
வைக்கையில்
விரட்டி விடுகிறாயே... 

முன்னோர் க்கு திதியெனில்
விருந்து வைத்து
வா வாவென கூவுகிறாயே...

காரியம் நடக்க பிறர்
கால், கை பிடித்து விட்டு
காக்காய் என 
கேலி செய்வதா....

வகை வகையாய் 
திருடிவிட்டு
வசதியாய் வாழ்கின்றாய்.. 

வடை நாங்கள் திருடியதாக 
வகைவகையாய் 
கதை விடுகிறாயே..... 

ஊரைச் சுருட்டி 
உன் குடும்பத்திற்கு 
சொத்து சேர்க்கிறாய் .... 

பகிர்ந்து தின்னும் 
எங்களை 
பகடி செய்கிறாயே ... 





2 comments:

  1. காகத்தின் கோபம் நியாயம்

    ReplyDelete
  2. ஐயா வணக்கம் தாங்கள் மிக பெரிய இலக்கியவாதி என்பதனை நான் தற்பொழுது புரிந்து கொண்டுள்ளேன் நீண்ட காலமாகிவிட்டது என்று நினைக்க வேண்டாம்உங்கள் இலக்கிய பணி சிறக்க வாழ்த்துக்கள் ஐயா

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...