சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 14 April 2025

குரங்கின் போதை

 ஒரு ஊரில் ஒரு குரங்கு இருந்தது. அதற்கு கர்வம் ஜாஸ்தி. பொதுவாகவே குரங்குகளுக்கு சேட்டை குணம் உண்டு. இது இன்னும் கொஞ்சம் கூடுதல்.

அந்த ஊருக்குள் வரும் வழியில் ஒரு மதுபாட்டில் ஒன்று கிடந்தது. அது அந்த மது பாட்டிலை திறந்து குடித்து விட்டது. குடித்த உடன் அதற்கு போதை ஏற்றி விட்டது. ஏற்கனவே சேட்டைக்கார குரங்கு, மது போதை சேர்ந்தால் எப்படி இருக்கும்.

போதையுடன் வந்த குரங்கு பக்க கடையில் இருந்து மிளகாய் பஜ்ஜி எடுத்து கடித்து விட்டது. சரியான காரம் . ஒரு சேட்டைக்கார குரங்கு, மது போதை, காரமான மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டால் எப்படி இருக்கும்.

அன்றைக்கு பார்த்து வெயில் ரொம்ப அதிகம். போதை, மிளகாய் பஜ்ஜி, உஷ்ணம் எல்லாம் சேர்ந்ததால் நிலை தடுமாறி கிடைத்த பொருளை எல்லாம் நாசம் செய்ய ஆரம்பித்துவிட்டது. ஆட்களை வேறு கடிக்க ஆரம்பித்து விட்டது. ஒரு பொந்தை பார்த்தவுடன் சும்மா இருக்க மாட்டாமல் உள்ளே கையை தினித்து ஏதாவது கிடைக்குமா என்று துளாவியது. உள்ளே இருந்த தேள் அதை கொட்டி விட்டது.

அதுவே குரங்கு புத்தி, மது போதை, மிளகாய் காரம், உஷ்ணம், போதாததற்கு தேள் கொட்டியதால் கடுப்பேறி கண்டவர்களை எல்லாம் கடித்துக் குதற ஆரம்பித்தது.

இந்த நிலைமையை நாட்டோடு ஒப்பிட்டுப் பார்த்தால் அதற்கு நான் பொறுப்பு அல்லன்.... 

1 comment:

  1. மிக சரியான கதை

    ReplyDelete

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...