பசித்திருக்கும் வேங்கை
பூனை போல் பதுங்கி நிற்கும்..
வேட்டைக் கிடைக்குமென்றால்
பத்தடி வேகத்தில் பாய்ந்திடும்..
பிழைத்திருக்க மானோ
பதினாறடி வேகத்தில் பறந்திடும்..
வேட்டை வெற்றி என்றால்
தின்ற வேங்கை தூங்கிடும்..
வேட்டை தோல்வி என்றால்
நிம்மதியாய் மான் இரை தேடும்..
அவரவர் தேவைக்கு பின்
அமைதியாய் காட்டுக்குள் ...
பாழாய் போன மனிதனோ
பார்த்தெல்லாம் விழுங்கிடுவான்
வாழ்வளிக்கும் பூவுலகையே
அழிக்க துணிந்திடுவான்..
அருமையான பதிவு
ReplyDelete