படிப்பாளி
வாசிக்கிறார்
பலவகை நூல்களை....
நூல்கள்
திறக்கின்றன
புதியதோர்உலகை...
உலகோ
காட்டிடும் ஆயிரம்
அற்புதங்களை.....
அற்புதங்கள்
அறிவியல் வரலாறென
ஆயிரமாயிரம்......
வித்வான் வாசிக்கிறார்
வீனை மிருதங்கமென
இசைக்கருவிகளை...
இசையால்
இன்பமூட்டினார்
இன்னுலகையே...
மகான்கள் வாசித்தனர்
மனிதனின் முகம்
பார்த்தவர் இன்னலை..
இன்னல்கள்
தீர்ந்திட இனிய
வழி காட்டினர்.... .
படைப்பாளிகள் படைத்ததும்
வித்வான்கள் இசைத்ததும்
மகான்கள் உரைத்ததும்
உலகம் மேன்மையுறவே...
எப்படியாயினும்
வாசித்தலென்றும்
மிக இனிதே.....
அருமை...தோழா!
ReplyDelete