அன்றைக்கு என்னமோ அதிசயமாக செல்வம் சீக்கிரம் வீட்டுக்கு வந்து விட்டான். எப்பவுமே ஏதாவது வேலையாக சுற்றிக் கொண்டே இருப்பான்.
அவன் ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தான். வேலையை மிகவும் சிறப்பாக செய்து வருவான்.அவன் வகுப்பு நடத்தும் விதமே அலாதியானது. பாடங்களை நன்கு கதைகள் சொல்லி நடத்துவான்.மாணவர்களை அடிக்க மாட்டான். கோபப்படாமல் மிகவும் அன்பாக பேசுவதால், அவனை மாணவர்களுக்கு பிடிக்கும். கிராமத்தில் உள்ள சாமானிய மக்களுக்கு நிறைய உதவிகள் செய்வதால் எல்லோரும் அவனை பெரிதாக மதித்தார்கள். அரசியல்வாதிகளிடமிருந்து அதிகாரிகள் வரை அவனுக்கு செல்வாக்கு அதிகம். யாருக்கு பிரச்சனை என்றாலும் இன்று தீர்த்து வைக்க முயற்சி செய்வான்.
சங்கத் தலைவனாக இருந்ததால் பிரச்சனைகளை ஈடுபட்டு தீர்த்து வைக்க முயற்சி செய்தான். பெரும்பாலும் அவன் ஈடுபட்டு எந்த பிரச்சனையும் தீர்த்து வைக்காமல் இருந்தது இல்லை. சந்திக்கும் இடங்களில் எல்லாம் வெற்றி பெறும் ஆளாக இருந்ததால் தன்னம்பிக்கை மிக்க ஆளாக காட்சி அளிப்பான்...
எப்போது பார்த்தாலும் பொதுவேலைகளிலே ஈடுபட்டு வந்தாலும், வீட்டில் பெரும்பாலும் அக்கறையற்றவனாக இருந்து வந்தான்.
அவள் மனைவி மிகவும் பொறுமைசாலி. வீட்டினை நன்றாக பராமரித்து வந்தாள் இருபிள்ளைகளையும் நன்றாக கவனித்து வளர்த்து வந்தாள்.
அவனுடைய பையன்களுக்கு அப்பா பற்றி பெருமை அதிகம். அவர்களின் அப்பா பள்ளிக்கு வந்தால் ஆசிரியர்கள் எல்லாம் அவனுக்கு அதிக மரியாதை கொடுப்பார்கள். அவன் சங்கத் தலைவர் என்பதால் ஆசிரியர்களுக்கு மிகவும் பரிச்சயமானவன். கூட்டங்கள் எல்லாம் பேசுவான். அதனால் அவனுடைய பையன்களுக்கு அப்பாவை பற்றிய பெருமை நிறைய இருந்தது. எந்த விஷயத்தை பற்றி கேட்டாலும் விளக்கமாக சொல்லுவான். அதனால் அப்பாவுக்கு எல்லாம் தெரியும் என்று நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.
இரண்டு பையன்களுமே நன்றாக படிப்பார்கள். பெரியவன் படு சுட்டி. சிறியவன் நல்ல புத்திசாலி.
அவனுக்கும் பையன்கள் என்றால் ரொம்ப பிடிக்கும். அன்பாக இருப்பான்.அன்று அப்பா சீக்கிரம் வீட்டுக்கு வந்ததால் சின்னவன் அவனை சதுரங்கம் விளையாட கூப்பிட்டான். செல்வத்திற்கு ஒரே ஒரு பலவீனம். அவனுக்கு தோல்வி என்பது எப்போதுமே பிடிக்காது. அன்றைக்கு பார்த்து மகனிடம் கேவலமாக தோற்று விட்டான்.
ஆனால் தாங்க முடியவில்லை. மனதிற்குள் ஒளிந்திருக்கும் அரக்கன் திடீரென்று வெளிப்பட்டான். செல்வம் கோபமாக சதுரங்க காய்களை விசிறி அடித்து விட்டு, சதுரங்கஅட்டையை வீசி எறிந்து எழுந்து சென்று விட்டான்.
அவனது மகன் அரண்டு போய் மிரண்டு நின்றான்......
No comments:
Post a Comment