சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Friday, 27 June 2025

சால்வடார் அலெண்டே

 உலக ஜனநாயகத்தின் பாதுகாவலன் நாங்களே என்று தங்களுக்கு தாங்களே சுய தம்பட்டம் அடித்துக் கொண்டு, உலகில் பல நாடுகளில் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை பலாத்காரத்தாலும், நயவஞ்சகமாக கலைத்து நாசம் செய்த அமெரிக்காவின் சில "சாம்பிள்" களை பார்ப்போம். 

அமெரிக்காவின் இரத்த வெறி பிடித்த கொலைகள் எண்ணிலடங்கா. அந்த நாடுகளின் தலைவர்களையே நடுங்க வைத்தது. சிலி நாட்டில் அமெரிக்கா தனது கைகூலி படைகளை வைத்து அரங்கேற்றிய அரசியல் படுகொலை.  சிலிநாட்டு குடிமக்கள் செப்டெம்பர் 11, 1973ஐ ஒருபோதும்  மறக்கமாட்டார்கள்.


அன்று சிலி நாட்டை ஆட்சி செய்தவர் சால்வடோர் அலெண்டே. முறைப்படி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். செப்டெம்பர் 11, 1973 அன்று அலெண்டேக்கு எதிராக அவரை பாதுகாக்க வேண்டிய ராணுவம் அமெரிக்கவால் களமிறக்கப்பட்டது. அலெண்டேயின் அரசதலைவர் மாளிகை முற்றுகைக்குள்ளானது, அவர் உயிரைக் குடிக்கும் துவக்கங்கள் காத்திருந்தன. அதையுணர்ந்தும் அஞ்சாத நெஞ்சுடன் நாட்டு மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான உரையாற்றிகொண்டிருந்தார் அலெண்டே.

தனது நாட்டு மக்களின் வாழ்வை, தான் மேலாக பற்று வைத்திருந்த சிலி நாட்டை ஒரு போதும் அடக்கம் செய்பவர்களுக்கு அடிபணிந்து விட்டுக்கொடுக்க அவர் தயாரிக்கவில்லை. எதிரியின் கைகளில் கோழைத்தனமாக தான் வாழ்வதை விட வீரனாக மரணத்தை தழுவ விரும்பினார் அலெண்டே. இனிய நண்பர் பிடல் காஸ்ரோ தனக்கு வழங்கிய அழகிய துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டார் அலெண்டே. இந்த அரசியல் கொலைக்கு பின்னால் இயங்கியது யார்? அந்த வெள்ளை மாளிகையில் இருந்த நிக்சன் தலைமையில் அமெரிக்க அரசு சி.ஐ.ஏ.


அலெண்டே என்ன குற்றம் செய்தார்? அவர் பயங்கரவாதியா? 

அவர் பக்கத்து நாடுகள் மீது படையெடுத்து அச்சுறுத்தினாரா? 

படுகொலைகள் நடத்தினாரா? 

இல்லை மக்களின் பணத்தை கொள்ளையடித்தாரா?

  சிலி மக்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் வரலாற்றை மறவாத மனதுகளில் அலையாய் மோதுகிற கேள்விகள் இவை.

அவர் செய்ததெல்லாம் இவைதாம்.. 

ஜனாதிபதியாக, அலெண்டே முக்கிய தொழில்களை தேசியமயமாக்கவும், கல்வியை விரிவுபடுத்தவும், தொழிலாளி வர்க்கத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் முயன்றார்.

 சிலியின் சிறந்த இடதுசாரித் தலைவர் சால்வடார் அலெண்டே ஜூன் 26, 1908 இல் பிறந்தார். 1970 தேர்தல்களில் வெற்றி பெற்ற பிறகு அவர் சிலியின் முதல் இடதுசாரி மற்றும் மார்க்சிஸ்ட் ஜனாதிபதியாக உயர்ந்தார். அலெண்டேவின் நிர்வாகம் மிகவும் நீதியான, நியாயமான மற்றும் சமமான சிலியை உருவாக்க தேசியமயமாக்கல் மற்றும் ஜனநாயகமயமாக்கல் ஆகியவற்றின் தீவிரம் சோசலிச திட்டத்தைப் பின்பற்றியது.

இந்த படுகொலையின் பின்னணி என்ன?


செப்டெம்பர் 4, 1970ல் சோசலிச கொள்கை கொண்ட சால்வடோர் அலெண்டே 36.2 சதவீத வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜார்ஜ் அலெச்சந்திரி (சி.ஐ.ஏ. வால் வெற்றிபெறுவார் என நம்பப்பட்டவர் இவர். முன் அரசதலைவர்) 34.9 சதவீதம் பெற்றார். மற்றொரு வேட்பாளர் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சார்ந்த ரடோமிரொ றொமிக் 27.8 சதவீத வாக்குகள் பெற்றார், இவரது செல்வாக்கு இருந்த மக்களிடம் அலெண்டேயின் செல்வாக்கும் காணப்பட்டது. அப்போதைய சட்டப்படி மக்கள் வாக்குகளில் (மக்கள் வாக்குகள்) பெரும்பான்மையில்லையெனில், காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்ற இருவரில் ஒருவரை அரச தலைவர் (இது ஒன்றும் மக்களாட்சியில் புதிதல்ல, அமெரிக்க அரச தலைவர்கள் ஜார்ஜ் புஸ், பில்கிளிண்டன் மற்றும் பிரிட்டிஸ் பிரதமர் மார்கரெட் தாட்சர் இதே முறையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்ட). இந்த நிலையில் அமெரிக்க அரசு, சி.ஐ.ஏவும் பல சதித்திட்டங்களுடன் திரைமறைவு மிரட்டல் அரசியலில் இறங்கியது. சிலி நாட்டின் இராணுவத்தளபதி சி.ஐ.ஏ கைகூலியாக வைத்த கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டார். நாட்டின் ஆபத்தான நிலையை உணர்ந்த காங்கிரஸ் அலெண்டே தான் அரச தலைவர் என நவம்பர் 3, 1970ல் அறிவித்தது.

அலெண்டே ஆட்சியில் இருந்த முதல் ஆண்டு, சோசலிச கொள்கைகளைத் தொடங்குவதில் வெற்றிகரமாக இருந்தது குறிப்பாக அவரது ஆட்சியில் எதிர்க்கட்சிகள் குறை கூற முடியாத அளவிற்கு சிறப்பாக இருந்தது.இரண்டாவது பெரிய சாதனையாக நாட்டின் வங்கிகளை தேச உடமை ஆக்க துவங்கினார். சிலியின் முக்கிய இயற்கை வளமான காப்பர் (செம்பு ) சுரங்கங்களை தேசி உடமை ஆக்கினார். இந்த முடிவிற்கு நாடாளுமன்றம் ஒருமனதாக ஒப்புதல் வழங்கியது. ஜவுளி நிறுவனங்கள் முதல் பல துறைகளில் சமூக சொத்துக்களை சிலி அரசாங்கம் உருவாக்கியது.

அலெண்டே ஆட்சியில் பல வங்கிகள், சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டது. சுகாதார அமைப்பில் சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், குழந்தைகளுக்கு இலவச பால் என பல மக்கள்நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. முந்தைய அரசின் விவசாய வளர்ச்சித்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. எல்லா தரப்பு மக்களின் ஊதியத்தை உயர்த்திய அதே வேலையில் பொருட்களின் விலையேறாமல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.


அதே வேளையில் அலெண்டேயின் அரசு எதிர்ப்பையும் தேடியது. இம்முறை எதிர்த்தவர்கள் கணகில்லா நிலங்களை தனது கைகளில் அனுபவித்து வந்த பணம்படைத்தவர்களும், பிற்போக்குத்தன கல்வியை சோசலிச கல்விமுறை மாற்றியது விரும்பாத கத்தோலிக்க மதமும். அசராத அலெண்டே தனது சீர்திருத்தத்தை ஏழைமக்கள் பயன்படும் திட்டங்களாக உருவாக்கினார். அவை கல்வி, வேலைவாய்ப்பு, பொதுக்கட்டமைப்புகள் என தொடர்ந்தன. முதல் வருடம் நாட்டில் பொருளாதரம் வரலாறு காணாத முன்னேற்றமடைந்தது.


தொடர்ந்து வந்தது அலெண்டேவின் நெருக்கடியான காலம். கடைகளில் பொருட்களை வர விடாமல் தடுத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதன் பின்னால் இருந்தது அலெண்டேயின் எதிரிகளான செல்வம் படைத்தவர்கள். டிரக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. சர்வதேச சந்தையில் சிலிநாட்டு ஏற்றுமதி கனிமமான செம்பு (காப்பர்) விலைவீழ்ச்சி. சர்வதேச பெரியண்ணன் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளும் கூடவே தேடிவந்தது. தொடர்ந்து நாடே பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

அவர் காங்கிரஸைக் கட்டுப்படுத்தும் வலதுசாரிக் கட்சிகளுடனும் நீதித்துறையுடனும் மோதினார். செப்டம்பர் 11, 1973 அன்று, சிஐஏவால் ஆதரிக்கப்பட்ட ஒரு ஆட்சிக் கவிழ்ப்பில் அலெண்டேவை வெளியேற்ற இராணுவம் நகர்ந்தது , இது ஆரம்பத்தில் குற்றச்சாட்டுகளை மறுத்தது.  2000 ஆம் ஆண்டில், அலெண்டேவின் பதவியேற்பைத் தடுக்க இராணுவத்தைப் பயன்படுத்த மறுத்த ஜெனரல் ரெனே ஷ்னைடரை 1970 இல் கடத்தியதில் சிஐஏ தனது பங்கை ஒப்புக்கொண்டது . 2023 இல் வெளியிடப்பட்ட வகைப்படுத்தப்பட்ட ஆவணங்கள், அலெண்டேவை "ஆபத்தான" கம்யூனிஸ்ட் என்று முத்திரை குத்திய அமெரிக்க அரசாங்கம் , ஆட்சிக் கவிழ்ப்புக்கு முந்தைய நாட்களில் அலெண்டேவின் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான இராணுவத்தின் திட்டங்களை அறிந்திருந்தன என்பதைக் காட்டுகிறது . லா மொனெடா அரண்மனையை துருப்புக்கள் சுற்றி வளைத்தபோது , ​​அலெண்டே ராஜினாமா செய்ய மாட்டேன் என்று சபதம் செய்து தனது கடைசி உரையை நிகழ்த்தினார்.

இராணுவத்தின் டாங்கி பிரிவு ஜூன் 29, 1973 கர்னல் ரொபர்டோ சொய்பர் தலைமையில் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டது. இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு ஆகஸ்டு 9ல் ஜெனரல் பிரட்ச் இராணுவ தலைமை ஏற்றார். அவரும் நெருக்கடிகளால் இராஜினாமா செய்தார். ஆகஸ்டு 22 பினோசெட் ராணுவ தலைமை பொறுப்பேற்றார் அவர் தலைமையில் தான் இராணுவ புரட்சி அரங்கேறியது.


தொடர்ந்து பினொசெட் ஆட்சிப்பொறுப்பில் 17 வருடங்கள் அமெரிக்காவின் ஆசியுடன் சர்வாதிகாரியாக உயிரிழந்தார். இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எண்ணிக்கை, சித்திரவதை செய்யப்பட்டவர்கள், சிறைகொடுமை அனுபவித்தவர்கள் பல்லாயிரம் மக்கள். இந்த கொடுங்கோன்மை ஆட்சிக்கு பாதையமைத்தது அமெரிக்கா என்பதற்கான உறுதியான ஆவணங்கள் தற்போது வெள்ளைமாளிகையால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அலெண்டேவின் ஆட்சியை பலிவாங்க அடிப்படையாக இருந்ததை அமெரிக்க அரசு ஆவணங்கள் உறுதி செய்கின்றன. முதல் முறையாக சிலி நாட்டில் சர்வாதிகார ஆட்சியை அமர்த்திய பெருமையும் சிலி மக்கள் வாழ்வை குலைத்த பெரும்பேறும் அமெரிக்கா என்ற அரச வல்லாதிக்கத்தை சேரும். பினோசெட் ஆட்சிப் பொறுப்பில் இருந்து இறங்கிய பின்னர் பிரிட்டனில் கைது செய்யப்பட்ட சித்திரவதைக்கு எதிரான வழக்கு தொடரப்பட்டது. அந்தக் கோழையை சிலி நாட்டுக்கு அனுப்பி வீட்டுக்காவலில் சக்கரநாற்காலியில் முடக்கிவைத்தது தனி வரலாறு.


"வாழ்க சிலி! வாழ்க மக்கள்! வாழ்க தொழிலாளர்! எனது தியாகம் வீண்போகாது...." இது அலெண்டே என்ற அசைக்க முடியாத வீரனின் கடைசி குரல்கள் வானொலியில் மக்களுக்காக. வரலாற்றில் அந்த வீரனின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது இராணுவ வல்லமை பொருந்திய அமெரிக்கா.



செப்டம்பர் 11, 1973 அன்று தனது அரசாங்கத்தையும் ஜனநாயகத்தையும் தூக்கியெறிந்த அமெரிக்கா மற்றும் மேற்கத்திய ஆதரவுடன் நடந்த பாசிச ஆட்சிக் கவிழ்ப்பை எதிர்த்து அலெண்டே இறந்தார்.


.

அலெண்டே இறுதியாக ஆற்றிய உரை இது.. 

நாம் சோசலிசத்தை நோக்கி நகர்கிறோம், ஒரு கோட்பாட்டு அமைப்பின் மீதான கல்விசார் அன்பினால் அல்ல, மாறாக நமது மக்களின் வலிமையால் ஊக்குவிக்கிறோம். பின்தங்கிய நிலையை வெல்வதற்கு அது தவிர்க்க முடியாத கோரிக்கை என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள், மேலும் சுதந்திரம், சுதந்திரம் மற்றும் கண்ணியத்தில் பகுத்தறிவுடன் கட்டமைக்க விரும்பும் நவீன நாடுகளுக்கு ஒரு சோசலிச ஆட்சி மட்டுமே கிடைக்கக்கூடிய ஒரே வழி என்று அவர்கள் உணர்கிறார்கள். மக்கள், தங்கள் வாக்குகளின் மூலம், முதலாளித்துவத்தை சுதந்திரமாக நிராகரித்ததால், அது ஒரு முரட்டுத்தனமான சமத்துவமற்ற சமூகத்தை, சமூக நீதியால் சிதைக்கப்பட்டது மற்றும் மனித ஒற்றுமையின் அடித்தளங்களின் சீரழிவால் சீரழிந்த ஒரு சமூகத்தை உருவாக்கியது. 


வீரத்தின் மிக உயர்ந்த உதாரணத்தை வெளிப்படுத்திய அலெண்டேவை நாங்கள் நினைவு கூர்ந்து கௌரவிக்கிறோம்.

ஜெனரல் பினோசே மற்றும் இராணுவ சர்வாதிகாரத்தின் கொடூரம் மற்றும் கொடூரத்தை எதிர்த்து சிலி மக்கள் பல ஆண்டுகளாக வீரம், எதிர்ப்பு மற்றும் தியாகத்தை நாங்கள் நினைவில் கொள்கிறோம்











No comments:

Post a Comment

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...