இறைவனின் கட்டளைக்காய்
இப்ராஹிம் தன்மகன்
இஸ்மாயிலை பலியிட
ஈமானுடன் துணிந்தாரே...
தியாகத்தின் பெருமையை
திருவுலகிற்கு பறைசாற்றிய
தினமே பக்ரீத் எனும்
தியாகத்திருநாளாம்....
இப்லீஸ் சாத்தானின்
இடையூறுகளை தகர்த்து
இறைவன் நம்பிக்கையை
இன்னுலகிற்கு அறிவித்தார்.. .
பச்சிளம் குழந்தைகள்,
பெண்டிர், பாலஸ்தீனத்திலே
பலியாடுகளாய் மடிந்து
கொண்டிருக்கிறாரே..
ஏகாதிபதிபத்தியத்திற்கு
எடுபிடிகள் ஆகிவிட்டனரே
எண்ணெய் வளமிக்க அரபு
தேசமத்தனையுமே..
அமெரிக்க யூத சைத்தான்கள்
அக்கிரமத்தின் எல்லையில்
ஆடிக்கொண்டிருக்கையில்
அரபுகள் தூங்குகிறாரே...
அநீதிகள் அழிந்திட
அக்கிரமங்கள் ஒழிந்திட
அமைதியும் ஆனந்தமும்
அமைந்திட வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment