அகிலத்தில் சரிபாதி பெண்களென்பது
அரசின் கணக்கு...
வாக்களிப்பதில் சரி பாதி பெண்களென்பது
அரசியல்வாதியின் கணக்கு..
ஆனாலும் அதிகாரத்தில் பங்கு கொடுப்பதில்
அவருக்கென்ன பிணக்கு.....
ஆதிசிவன் அவருடலில் சரிபாதி
தந்தாராம் அவர் பங்கு..
ஆலயங்களில் வருவோரில் சரிபாதி
பெண்களின் பங்கு...
ஆனாலும் ஆன்மீக தலைமையில்
எங்கேயவர் பங்கு...
அகிலமெங்கும் கொண்டாடப்படுது
மகளிர் தினம்..
ஆனாலும் எங்கே மதிக்குது
சாதி சனம்..
அன்றாடம் மகளிர் அவதிப்படுகிறார்
தினம் தினம் ..
ஆணுக்கு பெண் சமமென்பது
உயர்ந்தோர் எண்ணம்..
அகிலமெங்கும் அனைவரும் சமமென்பது
சமத்துவவாதிகள் எண்ணம்.
அனைவரும் உணர்ந்துழைத்தால்
மகளிர் உயர்வது திண்ணம். ....
அனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள்
Superb sir
ReplyDelete