மகன் பிறந்தால் வாரிசு
வந்ததென்று இறுமாந்து
இருந்துவிடாதே. ......
வருங்கால வாழ்வு செழிக்க
நிகழ்காலத்தை நீ
மறந்து விடு.....
உனக்கு கிடைக்காத வாழ்வு
உன் மகன் பெற்றிட நீ
உழைத்திடு........
நல்ல கல்வி அவர்பெற
நாயாய் பேயாய் நீ
உழைத்திடு....
உணவுக்கும் உடைக்கும்
உன்னத வாழ்வுக்கும்
உழைத்து தந்திடு....
சமூகத்தில் அவர் செயலால்
சங்கடங்கள் வந்தாலும் நீ
சமாளித்திடு.....
வேலை அவர் பெற்றிட
சேர்த்த பொருளையெலாம்
தொலைத்திடு..
மணம் புரிந்து அவர்வாழ
மானத்தையெல்லாம் நீ
இழந்திடு...
திருமணம் முடிந்தவுடன்
தொலைவில் மனைவியுடன் நீ
சென்றிடு.....
எச்சில் இலையாய் அவர்
எறியுமுன்னரே முடிந்தால் நீ
மரித்திடு....
மகன் பிறந்தால் வாரிசு
வந்ததென்று இறுமாந்து
இருந்துவிடாதே. ......
No comments:
Post a Comment