நாம் வாழ்ந்த காலத்தில் நம்மோடு உலவி தமிழ்த்தொண்டு புரிந்தவர்களில் முதன்மையானவராக திகழ்ந்தவர் பாவலரேறு பெருச்சித்திரனார் அவர்கள் 'தமிழைநேசித்தவர்,சுவாசமாக வாழ்ந்தவர், தமிழுக்கு தீங்கு நேரும்போதெல்லாம் சமர் புரிந்தவர்,வெறும் வார்த்தைகளால் அல்லாமல் செயலால் காட்டியவர்.தமிழுக்காக தியாக உருவமாய் திகழ்ந்தவர்.அரசு பணியை துறந்து ,பன்முறை சிறைசென்றவர் .தமிழ் வளர்ச்சிக்காய் தம்மை மட்டுமல்ல குடும்பத்தையே தந்திட்டவர்.தமிழ் மொழி வாழ ,தமிழினம் வாழ வேண்டும்,வளர வேண்டுமென மொழி,இனம் சமுதாயம் நாடு என வாழ்ந்தவர் .இன்று அவரது பிறந்த நாள் .
வாழ்க அவர் புகழ்.
வாழ்க தமிழ்.
வளர்க தமிழினம்.....
பிறப்பு :இராசமாணிக்கம்
10 மார்ச் 1933
சமுத்திரம்,சேலம் மாவட்டம்,தமிழ்நாடு.
இறப்பு: 11 சூன் 1995 (அகவை 62)
சென்னை.
------------------------------------------------------------------------------------------------------------------
வெற்றிக்கென் வேண்டுவதே ?
நெஞ்சில் தமிழ் நினைவு;
நீங்காத மெய்யுணர்வு;
செஞ்சொல் குமிழியிடும்
சிதையாத பாட்டுயிர்ப்பு;
துஞ்சா இரு விழிகள்;
தொய்ந்து விழா நற்றோள்கள்;
அஞ்சுதல் இன்றி
அயர்வின்றி நின்றவுரம்;
எஞ்சுகின்ற காலமெலாம்
ஏற்ற நறுந்தொண்டு;
நஞ்சு மனங் கொண்டார்
நடுக்கமுறுஞ் செந்துணிவு;
கொஞ்சமிலை, நல்லிளைஞர்
கூட்டமோ கோடி பெறும்!
விஞ்சுகின்ற செந்தமிழே,
வெற்றிக்கென் வேண்டுவதே?
- 1972 பாவலரேறு பெருச்சித்திரனார்
No comments:
Post a Comment