சீனி கார்த்திகேயன் பக்கங்கள்

Monday, 31 March 2025

உலக முட்டாள்கள் தினம


 

 உலகத்தில் பல்வேறு தினங்கள் அதிகாரப்பூர்வமாகவும், அதிகாரப்பூர்வமற்றும் கொண்டாடப்பட்டு வருகிறது. அனேகமாக எல்லா தினங்களிலும் யாருக்காக கொண்டாடப்படுகிறது, அவர்கள் சந்தோஷமாகவே ஏற்றுக்கொள்வார்கள். மற்றவர்களும் சந்தோஷமாக எடுத்துக் கொள்வார்கள்

சர்வதேச மகளிர் தினம், அன்னையர் தினம், ஆசிரியர் தினம், சகோதரிகள் தினம், தந்தையர் தினம், அறிவியல் தினம் இவ்வாறு எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம், கொண்டாடப்படுபவர்களுக்கு தெரியாமல் கூட கொண்டாடும் தினங்கள் கூட உண்டு. உதாரணமாக குருவிகள் தினம், சர்வதேச பறவைகள் தினம், தண்ணீர் தினம், விலங்குகள் தினம் இவ்வாறு எவ்வளவோ சொல்லிக் கொண்டே போகலாம்.அதுகளுக்கு தெரியவாபோகிறது.. 

 ஆனால் முட்டாள்கள் தினம் என்பது மட்டும் வித்தியாசமானது கொண்டாடப்படுபவர்கள், நிச்சயமாக சந்தோஷப்பட மாட்டார்கள். கொண்டாடுபவர்கள் தான் அடுத்தவர்களை முட்டாளாக்கி நகைச்சுவையாக கொண்டாடுவார்கள். தங்களை அறிவாளிகளாக நினைத்துக் கொண்டு, மற்றவர்களை முட்டாளாக்கி மகிழ்ந்து கொண்டாடுகிற தினம். ஏன் சில சமயங்களில் எல்லோருமே நகைச்சுவைக்காக கூட சந்தோசமாக கொண்டாடலாம். ஆனால் இதனுடைய வரலாறு என்ன என்பது நமக்கு தெரியாது. எப்பொழுதுமே நாம் அதை பற்றி தான் கவலைப்படுவதில்லையே....

சிறுவயதில் படிக்கின்ற காலத்திலேயே" ஏப்ரல் ஃபூல்" என்றாலே ஒரு பக்கம் ஜாலியாக இருக்கும். ஒரு பக்கம் பயமாக இருக்கும். பையன்கள் எல்லாம் பேனாவில் இருக்கும் மையை அடுத்தவர்கள் சட்டையில் அடித்து விளையாடுவார்கள். இன்னும் சில அதிவாணரங்கள் வேலை மெனக்கெட்டு வாழைப்பட்டை சாறு எடுத்து பேனாவில் ஊற்றி வந்து சட்டைகள் அடித்து விடுவார்கள். கறை போகவே போகாது. வீட்டிற்கு வந்தால் சட்டை பூராவும் மை கறையோடு வரும்போது அம்மாவிடம் திட்டு கிடைக்கும சமயத்தில் அடி கூட கிடைக்கும்.  சில நேரங்களில் நம்ப முடியாத ஏதாவது ஒரு புரளியை கிளப்பி விட்டு, மற்றவர்களை ஏமாற்றி விளையாடுவோம். 

ஒரு முறை எங்கள் தமிழ் ஐயா ஏப்ரல் ஃபூல் தினத்தன்று மிகவும் சோகமாக வந்தார். நான் இந்த பள்ளியை விட்டு மாற்றிப் போகிறேன் என்று சோகமாக சொன்னார். சில மாணவர்கள், அய்யய்யோ என்ன ஐயா அப்படி சொல்றீங்க என்று சொன்னார்கள். சிறிது நேரம் கழித்து அவர் உங்களை ஏப்ரல் ஃபூல் செய்வதற்காக தான் சொன்னேன், அப்படியெல்லாம் மாற்றிப் போகவில்லை என்றார். கடைசி வரிசையில் இருந்த ஒரு மாணவன் மெல்லமான குரலில் சொன்னான். ஐயையோ தொலைந்து போயிட்டாருன்னு நினைச்சா இன்னும் ஒரு வருஷத்துக்கு அறுப்பார் போல இருக்கே என்றானே பார்க்கலாம். 

இந்த ஏப்ரல் பூல் எனப்படும் முட்டாள்கள் தினம் பற்றி பலவியாக்யானங்கள் செய்யப்பட்டாலும், ஏப்ரல் முட்டாள்கள் தினத்தின் சரியான தோற்றம் சரியாகத் தெரியவில்லை.

1508 ஆம் ஆண்டில், பிரெஞ்சு கவிஞர் எலோய் டி'அமெர்வால் ஒரு பாய்சன் டி'அவ்ரிலை (ஏப்ரல் முட்டாள், அதாவது "ஏப்ரல் மீன்") குறிப்பிட்டார் , இது பிரான்சில் கொண்டாட்டத்திற்கான முதல் குறிப்பாக இருக்கலாம். சில வரலாற்றாசிரியர்கள் ஏப்ரல் முட்டாள்கள் 'மத்தியக்காலத்தில், பெரும்பாலான ஐரோப்பிய நகரங்களில் மார்ச் 25 அன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டதால் தோன்றியதாகக் கூறுகின்றனர், பிரான்சின் சில பகுதிகளில், குறிப்பாக, ஏப்ரல் 1 அன்று முடிவடைந்த விடுமுறையுடன், ஜனவரி 1 அன்று புத்தாண்டு தினத்தைக் கொண்டாடியவர்கள் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தைக் கண்டுபிடித்ததன் மூலம் மற்ற தேதிகளில் கொண்டாடுபவர்களை கேலி செய்தனர் என்று சொல்லுகிறார்கள்.

இது மாதிரியான விளக்கங்கள் பல நாடுகளில் பலவிதம் சொல்லப்படுகிறது. அதற்குள் நாம்போய் ஆராய்ச்சி செய்தால், தலையே வெடித்து விடும்.

சரி நாம் தான் வரலாற்று பூர்வமாக ஆராய்ச்சி செய்து பார்ப்போமே என்று சிந்தித்துப் பார்த்தேன்.

ஒரு காலத்தில் உலகம் முழுக்க ராஜாக்கள் தான் ஆட்சி செய்து கொண்டிருந்தார்கள். ராஜாக்கள் என்றால் ஜனங்கள் யாரும் அவர்களை ராஜாவாக தேர்ந்தெடுத்ததில்லை. அவர்களே தங்கள் ஆயுத பலத்தால் பல்வேறு பகுதிகளை, பிடித்துக் கொண்டு ஆட்சி செய்வார்கள். பல குட்டி ராஜியங்களை எல்லாம் வெற்றி கொண்டவர் மகாராஜா என்று அழைக்கப்படுவார். சாம்ராஜ்யங்கள் அமைத்துக் கொள்வார்கள்.

எதுவுமே நிரந்தரமாக இருந்ததில்லை. இந்த ராஜாவை விட, அல்லது பேரரசரை விட இன்னும் வலிமையானவர் வந்துவிட்டால் அவர் வெற்றி கொள்வார். இவர் காணாமல் போவார். அவ்வளவுதான்.

அவர்கள் வாயில் வந்ததெல்லாம் சட்டம். நினைத்தபோதெல்லாம் வரிபோட்டு ஜனங்களிடம் பிடுங்கிக் கொள்வார்கள். அவர்கள் சொல்வதுதான் நீதி. இவர்களுக்கு உதவி செய்ய மந்திரிமார், ராஜ குருக்கள் இருப்பார்கள். அவர்கள் பெரும்பாலும் புத்திசாலிகளாக இருப்பார்கள். நல்லவர்களாக இருப்பார்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் ராஜா ஆட்சி நடத்துவதற்கு உதவி செய்வார்கள். நீதி, சட்டங்கள், நீதி திரட்டல் போன்றவற்றிற்கு உதவி செய்வார்கள். நிறைய அடியாள் படை வைத்திருப்பவர் ராஜாவுக்கு கீழ் இருப்பார் அவர் தளபதி என்று சொல்வார்கள். இவ்வளவு தான் அரசாங்கம் நடத்திய லட்சணம் எல்லாம்.....உலகில் தொழில் புரட்சி ஏற்பட்ட பிறகு, ஏராளமான தொழிற்சாலைகளும் முதலாளிகளும் உருவாகின. அதுவரை ஆட்சியில் இருந்த மன்னர்களும் மந்திரிகளும் ராஜகுருமாருமே எல்லாவற்றையும் தீர்மானித்துக் கொண்டிருந்தார்கள். புதிதாக உருவான முதலாளிமாருக்கு அவருடைய வளர்ச்சிக்கு அரசியல் அதிகாரம் தேவைப்பட்டது. அதற்கு இடையூறாக மன்னராட்சி இருந்ததால் பெரும் பகுதி மக்கள் பங்கேற்க கூடிய மக்களாட்சி முறையை ஆதரித்து செயல்பட ஆரம்பித்தனர்.

 சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்றெல்லாம் கோஷமிட ஆரம்பித்தனர். மன்னர்களும், தளபதிகளும், ராஜகுருமார்களும், செய்த அக்கிரமங்கள் தாங்க மாட்டாமல் பொதுமக்கள் அவர்கள் பின்னால் திரண்டனர். அதன் விளைவாக மக்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கும் ஜனநாயக ஆட்சி முறை வந்தது.

மன்னர் ஆட்சி காலத்தில் இஷ்டப்பட்ட போதெல்லாம் வரி வசூலிக்கப்பட்டது. வரவு செலவுக்கென்று பெரிய திட்டமிடுதல் எல்லாம் கிடையாது. மக்களாட்சி அமைந்த பிறகு எழுதப்பட்ட சட்டங்களும், திட்டமிட்ட வரவு செலவு கணக்குகளும் உருவாகின.

 என்ன இருந்தாலும் நிர்வாக அமைப்பு என்பது, காலம் காலமாக மக்களை சுரண்டுகிற அமைப்பு தானே. மக்களாட்சி வந்துவிட்டால் மட்டுமே மாறிவிடவா போகிறது. மன்னர்கள் பிரபுக்கள் இருந்த இடத்தில், பெரிய முதலாளிகள் தங்கள் விருப்பப்படி, மக்கள் மூலமாகவே தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கங்களை உருவாக்கினர். அரசின் வரவு செலவு கணக்கு பட்ஜெட் மூலமாக நிறைவேற்றப்பட்டது. நிதியாண்டு என்பதை ஏப்ரல் ஒன்றிலிருந்து அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை என்று நிர்ணயம் செய்தார்கள். நிம்மி மாதிரி நிதி அமைச்சர் ஆரம்பத்தில் வந்தாரோ என்னவோ தெரியவில்லை. பட்ஜெட் என்பதே மக்களை முட்டாளாக்குகிற வேலை தானே, எனவே ஏப்ரல் ஒன்றையே முட்டாள் தினமாக வைத்தால் என்ன என்று தீர்மானித்து விட்டனர். அதிலிருந்து ஏப்ரல் ஒன்று உலக முட்டாள்கள் தினமாக மாறியது.

உலக முட்டாள்கள் தினம் என்பது பற்றி வரலாற்று ரீதியாக ஆராய்ச்சி செய்ததில் எனக்கு தோன்றியது இவ்வளவுதான். யாரும் சண்டைக்கு வந்து விடாதீர்கள். 


Friday, 28 March 2025

நாகரீகமானவர்கள்






 நேர்மையும்

 நன்மையும்

 அனாதைகளாயின...


உண்மையிங்கே

 ராகமிழந்த

பாடல்களாயின..


மனித மாண்புகள்

மதிப்பிழந்து

 போயினர்..... 


பகட்டும் சூதும்

 பணிவுக்கு

 இலக்கணமாயின...


பொய்மையும்

 புளுகுகளும்

 மெய்ப்பொருளாயின...


கபட வேடதாரிகள்

கடவுளாகவே

மாறிப்போயினர்....


மகிழ்ந்து கொள்வோம்

நாமெல்லாம்

 நாகரீகமானவர்கள்..

Friday, 21 March 2025

சங்க கால திருமணம்



சங்க கால திருமணம் 
------------

சங்க கால திருமணம்………..திருமகள்
தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிட உயர்வானது. தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப்பட்ட உண்மைகளாகும்.

கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு …
வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை
யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி
யாரம் படைத்த தமிழ்நாடு
என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.

ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.

முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.

சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகர்கின்றன.

கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான அய்ம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும் மணம்வீசிப் பரப்பின.

காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி தமிழன்னையின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.

இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்தது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறியது. பொருளற்ற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக – சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை.

நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம்.

பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.

இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.

அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும் இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை. புரோகிதர் இல்லை.

அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.

அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.

உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை
பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்
தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி
மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்
கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்
கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்
கேடில் விழப்புகழ் நாடலை வந்தென
வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்
பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்
முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்
புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று
வாலிழை மகளிர் நால்வர் கூடிக்
“கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்
பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென
நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி
பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க
வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்
கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து
“பேரில் கிழத்தி யாகென” தமர் தர
ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்
கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்
தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ
முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப
வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்
நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென
வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்
செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர
அகமலி யுவகைய ளாகி முகனிகுத்
தொய்யென விறைஞ்சி யோளே மாவின்
மடங்கொண் மதைஇய நோக்கின்
ஒடுங்கீ தோதி மாஅ யோளே. (அகநானூறு பாடல் 86)

“எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.

வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.

மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.

புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.

தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.

நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!”

என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.

அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.

அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். “ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு’

என வினாவினேன்.

அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.

சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது.

புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் – தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.

முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய

திருமணங்களில் உள்ள –

(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை

(2) புரோகிதர் இல்லை.

(3) எரி ஓம்பல் இல்லை.

(4) தீவலம் இல்லை.

(5) அம்மி மிதித்தல் இல்லை.

(6) அருந்ததி காட்டல் இல்லை.

(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.

சங்ககாலத் திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் “இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” எனக் குறித்திருத்தல் மகிழத்தக்கது.

பழந்தமிழர் திருமண முறைப்பற்றி நமக்கு தாராளமான வரலாற்றுச் செய்திகள் இல்லை. அகநானூறு 86 ஆவது பாடலில் ஊரில் நடந்த திருமணம் பற்றிய செய்தி உள்ளது.

அதுபோல புறநானூற்றில் 77 ஆவது பாடல் மற்றும் 37 ஆம் பாடலிலும் அகநானூற்றின் 54-ஆவது பாடலிலும் மணவிழாவைபற்றி ஒரு சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் எல்லாம் பின்னால் வந்தவைகளாக இருக்கின்றன.

மணப்பந்தலிலே புது மணல் பரப்பப் பட்டிருந்தது, பந்தலில் மறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது, காலை நேரம் மாசற்று இருந்தது, ஒருபுறம் உணவு குவியல் கிடந்தது, முதுபெண்டிர் உச்சியில் நீர்குடம் ஏந்தி நின்றனர், அவர்கள் முன்னவும், பின்னையும் நீர்க் குடங்கள் முறை முறையாகப் பல பிள்ளைகளைப் பெற்ற மகளிர் நால்வர் கூடி கற்பு நெறி என்றும் தவறாமல் நல்லறங்களை செய்து கணவன் விரும்பத்தக்க மனைவியாக வாழ்வாயாக என வாழ்த்தி மணமகளை நீராட்டினர். அந்த நீரில் நெல்லும், மலரும் கலந்திருந்தன.

இங்ஙனம் பெண்ணை நீராட்டும் சடங்கு நடைபெற்றது. இது நடைபெற்ற பிறகு மணமகளை அவளின் உறவினர் சிலர் விரைந்துவந்து பெரிய இல்லக்கிழத்தியாய் திகழ்வாயாக! என்று வாழ்த்தி என் கையில் ஒப்படைத்து அவளும், நானும் ஒருங்கு கலந்திருந்த இராப்பொழுது என்று அந்தப் பாடலிலே இருக்கின்றது.

ஆகவே குத்து விளக்கு வைப்பது, மணமக்கள் நெருப்பைச் சுற்றி வருவது, அம்மி மிதிப்பது, ‘அருந்ததி ‘ என்ற இல்லாத நட்சத்திரத்தைப் பகலிலே காண முயற்சிப்பது, இதுபோன்ற கற்பனைகள் எல்லாம் பழைய திருமண முறையில் இருக்கவில்லை. அது மட்டுமல்ல திருமணத்தைப் பெண்களே செய்து வைத்தார்கள்.

குறுந்தொகை நிகழ்வு இருக்கிறதா? இங்கே கவிஞர் அவர்கள் அருமையாக சுட்டிக் காட்டினார்கள் ‘ஞாயும், யாயும் யாராகியரோ’ என்று.

அப்படி இருவர் உள்ளங்கள் இணைந்த ஒரு மணவிழாவாகத்தான் முதலில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றைக்கு தமிழர்களின் வாழ்வில், குறுந்தொகை நிகழ்வு இருக்கின்றதா? இதுபற்றிதான் இன்றைக்கு நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.

எனவே, மனப்பொருத்தம் என்கிற அடிப்படையிலே ‘ஞாயும், யாயும் யாராகியரோ’ என்ற முறையிலே ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள் என்று கவிஞர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.

தமிழ் நாட்டில், ஏன் பல இடங்களிலே திருமணம் எப்படி நடைபெறுகின்றது? குறுந்தொகைக்குப் பதவுரை பொழிப்புரை சொல்லிக் கொடுக்கிறவர் வீட்டில் கூட, இதைச் செரிமானம் செய்து கொள்கிறார்களா என்றால் இல்லை! தந்தை – மகனை கண்டிப்பார் ‘அய்யோ இப்படி வேறு சாதியில் பெண்ணைப் பார்த்துவிட்டாயே உனக்காக பெரிய இடத்தில் அல்லவா பெண் பார்த்து வைத்திருந்தேன். பெருந்தொகை வரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன் வருந்தொகையும் போய்விட்டதே’ என்று குறுந்தொகைப் பாடலை சொல்லிக் கொடுப்பவர் கேட்பார்.

நுழையக் கூடாத ஒரு தத்துவம் தமிழர் வாழ்விலே வரதட்சணை என்ற பெயராலே நுழைந்திருக்கின்றது. வரதட்சணை என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. வரனும் தமிழ் சொல் அல்ல, தட்சணையும் தமிழ் சொல் அல்ல, தமிழனுக்கு வரதட்சணை வாங்கி பழக்கமே கிடையாது.

மணமக்களுடைய அழைப்பிதழைப் பாருங்கள் மன்றல் அழைப்பு மடல் என்று தூய தமிழிலே, நல்ல தமிழிலே அழைப்பிதழ் அச்சடித்திருக்கின்றார்கள். இந்த உணர்வு வருகின்ற தலைமுறையினருக்கும் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள் எனக்கு முன்னாலே வாழ்த்துரை கூறிய அறிஞர் பெருமக்கள்.

பழைய திருமணத்திலே யாரோ ஒருவரிடம் கொடுத்து ‘முகூர்த்த ஓலை’ என்று எழுதச் சொல்வார்கள். இதில் முகூர்த்தம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. விவாஹ சுப முகூர்த்தம் என்று போட்டு கன்னிகாதானம் செய்விக்கப் பெரியோர்களால் நிச்சயித்தபடி என்று போட்டு, தாராமுகூர்த்தம் செய்விக்க என்று திருமண ஓலையில் போடுகின்றார்கள். இதிலே ஏதாவது ஒரு சொல் தமிழ்ச் சொல் உண்டா? இதற்குப் பொருள் தெரிந்து கொண்டு யாராவது எழுதியிருக்கின்றார்களா? இதை மட்டும் இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.

‘கன்னிகா தானம்’ என்று சொல்லுகின்றார்கள். கன்னி என்றால் பெண் தானம் என்றால் தர்மம். பெண்ணை வளர்த்துத் தருமமாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்வதிருக்கிறதே அது தமிழர் பண்பாடு அல்ல, ஏன் மனித பண்பாடே அல்ல, காரணம் பெண்களை ஒரு பொருள் போலக் கருதிய அடிமை மனப்பான்மை இது. எப்படியோ, ஆரியப் பண்பாட்டின் மூலமாக உள்ளே நுழைந்ததன் மூலமாகத்தான் இப்படி ஏற்பட்டது.

பேனா என்னிடத்திலே இருக்கிறது, இதை ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தால், வாங்கியவர் இதை இன்னொருவருக்கு விற்கலாம் – கொடுக்கலாம் அல்லது உடைத்தும் போடலாம், நொறுக்கலாம் ஏன் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்குக் கிடையாது. இது பொருளுக்குப் பொருந்தும். ஆனால், பெண் ணுக்குப் பொருந்துமா? என்று கேட்டவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதனுடைய விளைவு தான் மாறுபட்ட சுயமரியாதை சீர்த்திருத்த வாழ்க்கை இணை ஒப்பந்தம் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவு உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு.

இதை பார்த்துத்தான் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்.

பாரதக் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாரதக் கதையில் தருமன் சூதாடினான் பஞ்ச பாண்டவர்கள் அய்ந்து பேரில் யோக்கிய மானவர் யார் என்று சொல்லும்பொழுது தர்மராசா என்றுதான் சொல்லுவார்கள்.

தருமன்தான் தன் மனைவி திரௌபதையை வைத்துச் சூதாடினான். அதுவும் தருமனுக்கு அய்ந்திலே ஒரு பங்குதான் சொந்தம். தருமன் சூதாட்டத்திலே தோற்கிறான். பெண்ணை ஒரு பொருளாக வைத்துத் தருமன் சூதாடினான்.

இந்தக் கருத்து நமது இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ, மனித சமுதாயத்திற்கோ ஒத்ததல்ல. இதில் தாரா முகூர்த்தம் என்று சொல்வது இன்னும் மோசமானது.

பெற்றோர், மணப் பெண்ணை மடியிலே உட்கார வைத்து கையிலே எள்ளும், தண்ணீரையும் விட்டுத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னால், அந்தப் பொருள் கைநழுவிப் போய் விட்டது என்று பொருள். ஆகவே தாரா முகூர்த்தம் அதுவும் தமிழ்ச் சொல் அல்ல, தமிழ்ப் பண்பாட்டிற்குரியது அல்ல ஏன் பண்பாட்டிற்கே உரியது அல்ல

 சங்க கால  திருமணம் 

------------


சங்க கால திருமணம்………..திருமகள்

தமிழினம் தொன்மை வாய்ந்த இனம். தமிழ்மொழி இன்று உயிர்த் துடிப்போடுள்ள உலக மொழிகளில், சீனம், கிரேக்கம், ஹீப்புரூ, இலத்தீன் போன்ற மிகப் பழமையான மொழிகளில் தமிழ்மொழியும் ஒன்று. தமிழ் மொழிக்கு இருக்கும் இலக்கிய வளம் ஏனைய மொழி இலக்கியங்களைவிட உயர்வானது. தமிழர் மொழியாலும், நாகரிகத்தினாலும் சிறந்தவர் என்பது மொழி ஆராய்ச்சியாலும், அகழ்வாராய்ச்சியாலும் நிறுவப்பட்ட உண்மைகளாகும்.


கல்வியில் சிறந்த தமிழ்நாடு -புகழ்க்

கம்பன் பிறந்த தமிழ்நாடு …

வள்ளுவன் தன்னை உலகினிக்கே -தந்து

வான்புகழ் கொண்ட தமிழ்நாடு- நெஞ்சை

யள்ளும் சிலப்பதிகார மென்றோர்- மணி

யாரம் படைத்த தமிழ்நாடு

என்று மகாகவி பாரதியார் போற்றிப் பாடுவார்.


ஒவ்வொரு இனத்திற்கும் ஒவ்வொரு காலம் பொற்காலமாகத் திகழ்ந்திருக்கிறது. தமிழினத்தைப் பொறுத்தளவில் சங்ககாலமே தமிழரது பொற்காலமாகும். பாரதியார் வார்த்தையில் கூறவேண்டும் என்றால் உண்மை இது வெறும்புகழ்ச்சி இல்லை.


முடியுடை வேந்தர்கள் மூவரும் கொற்றம் வைத்து சீரோடும் சிறப்போடும் பேரோடும் புகழோடும் அறத்தோடும் மறத்தோடும் பாராண்ட காலம் அது.


சங்க இலக்கியங்களான எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, பதிணென்கீழ்க்கணக்கு நூல்கள் தமிழரின் ஒப்பற்ற நாகரிகச் சிறப்புக்கு சான்று பகர்கின்றன.


கள்ளையும் தீயையும் சேர்த்து- நல்ல காற்றையும் வானவெளியையும் சேர்த்துத் தௌளு தமிழ்ப் புலவோர் செய்த தீஞ்சுவைக் காவியங்களான அய்ம்பெரும் காப்பியங்கள் தமிழ் அன்னையின் புகழை திக்கெட்டும் மணம்வீசிப் பரப்பின.


காலில் சிலம்பு, இடையில் மேகலை, காதில் குண்டலம், கையில் வளை, மார்பில் சிந்தாமணி தமிழன்னையின் இயற்கை அழகுக்கு அழகு சேர்த்தன.


இடைக்காலத்தில் தமிழ்மரபுக்கு மாறான வாழ்க்கைமுறை தமிழரிடம் புகுந்தது. தமிழரின் பழக்க வழக்கங்கள் மாறின. மணமுறை மாறியது. பொருளற்ற சடங்குகள் பெருகின. இவற்றின் பயனாக இன்றுள்ள தமிழர் நாமமது தமிழராக இருக்கின்றாரே தவிர மெய்த் தமிழராக – சங்ககால தமிழர்தம் வழித்தோன்றலாக இல்லை.


நாம் தாய்மொழியைப் போற்றாது விட்டோம். தமிழ்க் கலையை வளர்க்காது விட்டோம். தமிழினத்தின் மரபைக் காவாது விட்டோம். வடமொழிக்கு அடிமையானோம்.


பாவேந்தர் பாரதிதாசனின் ஆசையை இன்று தமிழீழம்தான் செயல்படுத்தி நிறைவு செய்து வருகிறது. தமிழகம் பாரதி, பாரதிதாசன் காலத்திலேயே இன்றும் இருக்கிறது.


இன்றைய தமிழரின் மணமுறை பண்டைத் தமிழர் மரபுக்கு முற்றும் மாறானாதாக இருக்கிறது. இதனைத் தமிழ் இலக்கியச் சான்று கொண்டு காட்டலாம்.


அன்றைய தமிழருடைய திருமணம் எளிமையாக நிகழ்ந்தது. அதில் சடங்குகள் எதுவும் இல்லை. எரியோம்புதல் இல்லை. தீவலம் வருதல் இல்லை. அருந்ததி பார்த்தல் இல்லை. புரோகிதர் இல்லை.


அகநாநூறு எட்டுத்தொகை நூல்களில் ஒன்று. அதில் உள்ள 400 பாடல்கள் வௌவேறு காலத்தில் வௌவேறு புலவர்களால் பாடப்பட்டவை. இதில் காணப்படும் இரண்டு பாடல்கள் (பாடல் 86, 138) பழந்தமிழரின் திருமணமுறையை வர்ணிக்கின்றன.


அவற்றுள் பாடல் 86 நல்லாவூர் கிழார் என்ற செந்தமிழ்ப் புலவர் பாடிய பாடல். பொருள் தேடத் தலைவியைப் பிரிந்து சென்று திரும்பும் தலைவனை தலைவியின் தோழி வழிமறித்து “எனது தலைவி உன்னோடு மணமகன் தனக்கு முன்பு நிகழ்ந்த திருமணத்தைக் கூறுவதாகப் பாடப்பெற்றதாகும். இந்தப் பாடலில் கூறப் பெறும் திருமணமுறையைக் காண்போம்.


உழுந்துதலைப் பெய்த கொழுந்கனி மிதவை

பெருஞ்சோற் றமலை நிற்ப நிரைகால்

தண்பெரும் பந்தர்த் தருமணல் ஞெமரி

மனைவிளக் குறுத்து மாலை தொடரிக்

கனையிருள் அகன்று கவின் பெறு காலைக்

கோள்கால் நீங்கிய கொடுவெண் திங்கள்

கேடில் விழப்புகழ் நாடலை வந்தென

வுச்சிக் குடந்தர் புத்தகல் மண்டையர்

பொதுசெய் கம்பலை முதுசெம் பெண்டிர்

முன்னவும் பின்னவும் முறை முறை தரத்தரப்

புதல்வற் பயந்த திதலையவ் வயிற்று

வாலிழை மகளிர் நால்வர் கூடிக்

“கற்பினின் வாழாஅ நற்பல வுதவிப்

பெற்றோற் பெட்கும் பிணையை ஆகென

நீரொடு சொரிந்த ஈரிதழ் அலரி

பல்லிருங் கதுப்பின் நெல்லொடு தயங்க

வதுவை நன்மணம் கழிந்த பின்றைக்

கல்லென் சும்மையர் ஞெரேரெனப் புகுதந்து

“பேரில் கிழத்தி யாகென” தமர் தர

ஓரில் கூட்டிய வுடன்புணர் கங்குற்

கொடும்புறம் வளைஇக் கோடிக் கலிங்கத்

தொடுங்கினள் கிடந்த வோர்புறந் தமீஇ

முயங்கல் விருப்பொடு முகம்புதை திறப்ப

வஞ்சினள் உயிர்த்த காலை யாழநின்

நெஞ்சம் படர்ந்த தெஞ்சா துரையென

வின்னகை யிருக்கைப் பின்யான் வினவலிற்

செஞ்சூட் டொண்குழை வண்காது துயல்வர

அகமலி யுவகைய ளாகி முகனிகுத்

தொய்யென விறைஞ்சி யோளே மாவின்

மடங்கொண் மதைஇய நோக்கின்

ஒடுங்கீ தோதி மாஅ யோளே.                                      (அகநானூறு பாடல் 86)


“எங்கள் திருமணநாளன்று உழுந்தம் பருப்புடன் கூட்டிச் சமைத்த, பக்குவமாகக் குழைந்த பொங்கலோடு, மலைபோல் குவிந்த பெருஞ் சோற்றினை உண்பவர்கள் கூட்டம் நிறைந்திருந்தது.


வரிசையாக கால்களை நட்டுக் குளிர்ந்த மணப் பந்தல் முழுதும் வெளியிலிருந்து கொண்டுவந்த வெண்மணல் பரப்பப் பட்டிருந்தது.


மனையில் விளக்கு ஏற்றி மலர் மாலைகளை பந்தல் முழுதும் நெருக்கமாகத் தொங்க விட்டு மிகஅழகாக அலங்கரித்துள்ளார்கள். திருமண வீட்டில் மனைவிளக்குகளை ஏற்றி வைத்து ஒளிபெறச் செய்துள்ளார்கள்.


புகழினையுடைய திங்களுடன் கூடிய உரோகிணி நன்னாள் குற்றமற்றதும் வாழ்விற்கு நல்லது பயக்கும் அடர்ந்த இருள் நீங்கி, விடியல் தொடங்கும் வனப்பு மிகு நேரத்தில் திருமண விழா தொடங்குகிறது.


தலையில் நன்நீர்க் குடத்தினைத் தாங்கியும், கையில் அகன்ற பாத்திரத்தை ஏந்திக் கொண்டும், திருமணத்தை செய்து வைக்கும், கலகலப்புடன் கூடிய முதிய மங்கல வாழ்வரசியர் நீர்க் குடங்களை முன்னேயும் பின்னேயும் முறைமுறையாகத் தந்திட மணமகளை நன் நீராட்டினர்.


நல்ல மக்களைப் பெற்று அடி வயிற்றில் வரி வரியாகத் தழும்புகள் கொண்ட மணிவயிறு வாய்ந்த மங்கல மகளிர் நால்வர் தூய ஆடைகளையும் அணிகளையும் அணிந்து கூடிநின்ற மணமகளிடம் ‘உன்னை அடைந்த கணவனை விரும்பிக் கூடிக் “கற்பு நெறியின்றும் தவறாமல் நல்லறங்களைச் செய்து, கணவன் விரும்பத்தக்க மனைவியாhக அவனை வாழ்நாள் முழுதும் நன்கு பேணிக் காத்து வாழும் எண்ணத்தைக் கைக் கொண்டு வாழ்வாயாக!”


என்று நீருடன் குளிர்ந்த இதழ்கள் உள்ள பூக்களையும் புதிய நெல்லையும் தூவி வாழ்த்தியதால் மணமளின் அடர்த்தியான கரிய கூந்தலில் அவை தோற்றமளிக்க, திருமணம் இனிதே நிகழ்கிறது.


அதன்பின் ஆர்வத்துடனும், ஆரவாரத்துடனும் சூழ்ந்த உறவினர் ‘இன்று முதல் நீயும் பெரிய மனைக் கிழத்தி ஆகிவிட்டாய்’ என்று கேலி பேசி மணமகளுக்கு கோடியுடுத்தி மெல்லிய அலங்காரங்களைச் செய்து, வனப்புடன் கூடிய முதலிரவு அறைக்குள் உடன் கூடிய புணர்ச்சிக்குரிய அன்றிரவே அவளை அனுப்பி வைத்தனர். அவ்வறைக்குள் நுழையும் மணமகள் உடுத்திய புதிய புடவைக்குள் தன்னை ஒடுக்கிக் கொண்டு, தன் இனிய கணவன் இருக்கும் இடம் நோக்கிச் செல்கின்றாள்.


அப்போது அவள் புத்தாடையில் ஒடுங்கி முகம் புதைத்துக் கிடந்தாள். அவளைத் தழுவும் விருப்பத்தோடு முகத்தை மூடிய துணியைச் சற்றே விலக்க அவள் அதற்கு அஞ்சி பெருமூச்சு விட்டாள். நடுங்கி ஒடுங்கினாள். “ஏன் பயந்தனை, உன் மனதில் உள்ளதை உள்ளவாறு என்னிடம் கூறு’


என வினாவினேன்.


அப்போது மானைப்போல் மடமை கொண்டவளும், செருக்கினையுடைய நோக்கினையுடையவளும், குளிர்ந்த கூந்தலையுடையவளும், மாநிறத்தினை உடையவளுமாகிய மணமகள், அகம் மலர்ந்த மகிழ்ச்சியளாய் முகம் தாழ்த்தி என் காதலி மெலிந்த மடல் கொண்ட காதில் அணிந்திருந்த சிவந்த மணிகள் பதித்த அழகிய குழைகள் அசைய விரைந்து வந்து தனக்குரியவனை வணங்கினாள். ஆதலால் அவள் எக்காலத்தும் என்பால் அன்புடையவள். அதனை நீ அறியாய்” என்று தோழியிடம் கூறினான்.


சங்ககாலத் தமிழரது திருமண நெறியை பாடலில் படம்பிடித்து வைத்த புலவர் நல்லாவூர் கிழார் அவர்களுக்கு நாம் நன்றி சொல்லக் கடமைப் பட்டுள்ளோம். அவரது சொல்லோவியத்தைப் படிக்கும்போது எமது முன்னோரது நாகரிகச் சிறப்பையும் பகுத்தறிவையும் எண்ணி மனம் பூரிப்படைகிறது.


புலவர் நல்லாவூர் கிழார் காதலால் பிணைக்கப்பட்ட தலைவன் – தலைவியது முதல் இரவை எப்படி மிக நாகரிகமாக, மிக நளினமாக தலைவன் கூற்றாகச் எடுத்துச் சொல்கிறார் என்பதும் எண்ணி மகிழத்தக்கது.


முன்னர் கூறியவாறு இந்த இரண்டு சங்க காலத் திருமணங்களிலும் இன்றைய


திருமணங்களில் உள்ள –


(1) பொருள் புரியாத வட மொழி மந்திரங்கள் இல்லை


(2) புரோகிதர் இல்லை.


(3) எரி ஓம்பல் இல்லை.


(4) தீவலம் இல்லை.


(5) அம்மி மிதித்தல் இல்லை.


(6) அருந்ததி காட்டல் இல்லை.


(7) கோத்திரம் கூறல் முதலியன இல்லை.


சங்ககாலத் திருமணங்களைப் பற்றிக் கூறுமிடத்துக் காலம் சென்ற வரலாற்றுப் பேராசிரியர் திரு. பி.டி. சீனிவாச அய்யங்கார் அவர்கள் “இப்பண்டைத் திருமண நிகழ்ச்சிகளில் எரிவளர்த்தல் இல்லை, தீவலம் இல்லை, இது முற்றும் தமிழர்க்கே உரிய திருமணம்” எனக் குறித்திருத்தல் மகிழத்தக்கது.


பழந்தமிழர் திருமண முறைப்பற்றி நமக்கு தாராளமான வரலாற்றுச் செய்திகள் இல்லை. அகநானூறு 86 ஆவது பாடலில் ஊரில் நடந்த திருமணம் பற்றிய செய்தி உள்ளது.


அதுபோல புறநானூற்றில் 77 ஆவது பாடல் மற்றும் 37 ஆம் பாடலிலும் அகநானூற்றின் 54-ஆவது பாடலிலும் மணவிழாவைபற்றி ஒரு சில கருத்துகள் கூறப்பட்டுள்ளன. தாலி கட்டுதல் போன்ற சடங்குகள் எல்லாம் பின்னால் வந்தவைகளாக இருக்கின்றன.


மணப்பந்தலிலே புது மணல் பரப்பப் பட்டிருந்தது, பந்தலில் மறை விளக்கு எரிந்து கொண்டிருந்தது, காலை நேரம் மாசற்று இருந்தது, ஒருபுறம் உணவு குவியல் கிடந்தது, முதுபெண்டிர் உச்சியில் நீர்குடம் ஏந்தி நின்றனர், அவர்கள் முன்னவும், பின்னையும் நீர்க் குடங்கள் முறை முறையாகப் பல பிள்ளைகளைப் பெற்ற மகளிர் நால்வர் கூடி கற்பு நெறி என்றும் தவறாமல் நல்லறங்களை செய்து கணவன் விரும்பத்தக்க மனைவியாக வாழ்வாயாக என வாழ்த்தி மணமகளை நீராட்டினர். அந்த நீரில் நெல்லும், மலரும் கலந்திருந்தன.


இங்ஙனம் பெண்ணை நீராட்டும் சடங்கு நடைபெற்றது. இது நடைபெற்ற பிறகு மணமகளை அவளின் உறவினர் சிலர் விரைந்துவந்து பெரிய இல்லக்கிழத்தியாய் திகழ்வாயாக! என்று வாழ்த்தி என் கையில் ஒப்படைத்து அவளும், நானும் ஒருங்கு கலந்திருந்த இராப்பொழுது என்று அந்தப் பாடலிலே இருக்கின்றது.


ஆகவே குத்து விளக்கு வைப்பது, மணமக்கள் நெருப்பைச் சுற்றி வருவது, அம்மி மிதிப்பது, ‘அருந்ததி ‘ என்ற இல்லாத நட்சத்திரத்தைப் பகலிலே காண முயற்சிப்பது, இதுபோன்ற கற்பனைகள் எல்லாம் பழைய திருமண முறையில் இருக்கவில்லை. அது மட்டுமல்ல திருமணத்தைப் பெண்களே செய்து வைத்தார்கள்.


குறுந்தொகை நிகழ்வு இருக்கிறதா? இங்கே கவிஞர் அவர்கள் அருமையாக சுட்டிக் காட்டினார்கள் ‘ஞாயும், யாயும் யாராகியரோ’ என்று.


அப்படி இருவர் உள்ளங்கள் இணைந்த ஒரு மணவிழாவாகத்தான் முதலில் நடந்து கொண்டிருந்தன. ஆனால், இன்றைக்கு தமிழர்களின் வாழ்வில், குறுந்தொகை நிகழ்வு இருக்கின்றதா? இதுபற்றிதான் இன்றைக்கு நாம் சிந்திக்கக் கடமைப்பட்டிருக்கின்றோம்.


எனவே, மனப்பொருத்தம் என்கிற அடிப்படையிலே ‘ஞாயும், யாயும் யாராகியரோ’ என்ற முறையிலே ஒன்று சேர்ந்திருக்கின்றார்கள் என்று கவிஞர் அவர்கள் தெளிவாக எடுத்துச் சொன்னார்கள்.


தமிழ் நாட்டில், ஏன் பல இடங்களிலே திருமணம் எப்படி நடைபெறுகின்றது? குறுந்தொகைக்குப் பதவுரை பொழிப்புரை சொல்லிக் கொடுக்கிறவர் வீட்டில் கூட, இதைச் செரிமானம் செய்து கொள்கிறார்களா என்றால் இல்லை! தந்தை – மகனை கண்டிப்பார் ‘அய்யோ இப்படி வேறு சாதியில் பெண்ணைப் பார்த்துவிட்டாயே உனக்காக பெரிய இடத்தில் அல்லவா பெண் பார்த்து வைத்திருந்தேன். பெருந்தொகை வரும் என்று கணக்குப்போட்டு வைத்திருந்தேன் வருந்தொகையும் போய்விட்டதே’ என்று குறுந்தொகைப் பாடலை சொல்லிக் கொடுப்பவர் கேட்பார்.


நுழையக் கூடாத ஒரு தத்துவம் தமிழர் வாழ்விலே வரதட்சணை என்ற பெயராலே நுழைந்திருக்கின்றது. வரதட்சணை என்ற சொல்லே தமிழ்ச்சொல் அல்ல. வரனும் தமிழ் சொல் அல்ல, தட்சணையும் தமிழ் சொல் அல்ல, தமிழனுக்கு வரதட்சணை வாங்கி பழக்கமே கிடையாது.


மணமக்களுடைய அழைப்பிதழைப் பாருங்கள் மன்றல் அழைப்பு மடல் என்று தூய தமிழிலே, நல்ல தமிழிலே அழைப்பிதழ் அச்சடித்திருக்கின்றார்கள். இந்த உணர்வு வருகின்ற தலைமுறையினருக்கும் இருக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டியிருக் கின்றார்கள் எனக்கு முன்னாலே வாழ்த்துரை கூறிய அறிஞர் பெருமக்கள்.


பழைய திருமணத்திலே யாரோ ஒருவரிடம் கொடுத்து ‘முகூர்த்த ஓலை’ என்று எழுதச் சொல்வார்கள். இதில் முகூர்த்தம் என்பது தமிழ்ச்சொல் அல்ல. விவாஹ சுப முகூர்த்தம் என்று போட்டு கன்னிகாதானம் செய்விக்கப் பெரியோர்களால் நிச்சயித்தபடி என்று போட்டு, தாராமுகூர்த்தம் செய்விக்க என்று திருமண ஓலையில் போடுகின்றார்கள். இதிலே ஏதாவது ஒரு சொல் தமிழ்ச் சொல் உண்டா? இதற்குப் பொருள் தெரிந்து கொண்டு யாராவது எழுதியிருக்கின்றார்களா? இதை மட்டும் இந்த நேரத்திலே நான் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.


‘கன்னிகா தானம்’ என்று சொல்லுகின்றார்கள். கன்னி என்றால் பெண் தானம் என்றால் தர்மம். பெண்ணை வளர்த்துத் தருமமாகக் கொடுத்துவிடுகிறேன் என்று சொல்வதிருக்கிறதே அது தமிழர் பண்பாடு அல்ல, ஏன் மனித பண்பாடே அல்ல, காரணம் பெண்களை ஒரு பொருள் போலக் கருதிய அடிமை மனப்பான்மை இது. எப்படியோ, ஆரியப் பண்பாட்டின் மூலமாக உள்ளே நுழைந்ததன் மூலமாகத்தான் இப்படி ஏற்பட்டது.


பேனா என்னிடத்திலே இருக்கிறது, இதை ஒருவருக்குத் தானமாகக் கொடுத்தால், வாங்கியவர் இதை இன்னொருவருக்கு விற்கலாம் – கொடுக்கலாம் அல்லது உடைத்தும் போடலாம், நொறுக்கலாம் ஏன் என்று கேட்கக்கூடிய உரிமை எனக்குக் கிடையாது. இது பொருளுக்குப் பொருந்தும். ஆனால், பெண் ணுக்குப் பொருந்துமா? என்று கேட்டவர்தான் தலைவர் தந்தை பெரியார் அவர்கள். அதனுடைய விளைவு தான் மாறுபட்ட சுயமரியாதை சீர்த்திருத்த வாழ்க்கை இணை ஒப்பந்தம் ஆணுக்கு என்னென்ன உரிமைகள் உண்டோ அவ்வளவு உரிமைகளும் பெண்ணுக்கும் உண்டு.


இதை பார்த்துத்தான் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கின்றோம்.


பாரதக் கதை தெரியாதவர்கள் இருக்க முடியாது. பாரதக் கதையில் தருமன் சூதாடினான் பஞ்ச பாண்டவர்கள் அய்ந்து பேரில் யோக்கிய மானவர் யார் என்று சொல்லும்பொழுது தர்மராசா என்றுதான் சொல்லுவார்கள்.


தருமன்தான் தன் மனைவி திரௌபதையை வைத்துச் சூதாடினான். அதுவும் தருமனுக்கு அய்ந்திலே ஒரு பங்குதான் சொந்தம். தருமன் சூதாட்டத்திலே தோற்கிறான். பெண்ணை ஒரு பொருளாக வைத்துத் தருமன் சூதாடினான்.


இந்தக் கருத்து நமது இனத்திற்கோ, பண்பாட்டிற்கோ, மனித சமுதாயத்திற்கோ ஒத்ததல்ல. இதில் தாரா முகூர்த்தம் என்று சொல்வது இன்னும் மோசமானது.


பெற்றோர், மணப் பெண்ணை மடியிலே உட்கார வைத்து கையிலே எள்ளும், தண்ணீரையும் விட்டுத் தாரை வார்த்துக் கொடுத்துவிட்டோம் என்று சொன்னால், அந்தப் பொருள் கைநழுவிப் போய் விட்டது என்று பொருள். ஆகவே தாரா முகூர்த்தம் அதுவும் தமிழ்ச் சொல் அல்ல, தமிழ்ப் பண்பாட்டிற்குரியது அல்ல ஏன் பண்பாட்டிற்கே உரியது அல்ல



படித்ததில் பிடித்தது. 

நன்றி முகநூல் பதிவு 

Thursday, 20 March 2025

மக்கள் தலைவர்



 முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்
கிறையென்று வைக்கப் படும்.        

நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான்.
புர்கினா பாசோவின்
 ஜனாதிபதி, இப்ராஹிம் ட்ராரே ஒரு முஸ்லீம், தனது நாட்டில் 200 மசூதிகளை கட்ட சவுதி அரேபியாவின் வாய்ப்பை நிராகரித்தார். அதற்கு பதிலாக, பர்கினாபே மக்களுக்கு வேலைகளை உருவாக்கும் பள்ளிகள், மருத்துவமனைகள் அல்லது வணிகங்களில் சவுதி அரேபியா முதலீடு செய்ய வேண்டும் பரிந்துரைத்தார். 

 மக்களுக்கு நல்லது செய்ய விரும்பும் ஒரு தலைவரை இப்படித்தான் நீங்கள் அறிவீர்கள்.

புர்கினா பாசோவின் 37 வயதான ஜனாதிபதி இப்ராஹிம் டிரேர் தனது மொத்த நிகர மதிப்பு $128,566 என்று அறிவித்தார், ஒரு சிப்பாயாக சம்பாதித்த சம்பளத்தை தொடர்ந்து பெறுவதாக வலியுறுத்திய பின்னர் தனது சம்பளத்தை அதிகரிக்க மறுத்துவிட்டார்.புர்கினா பாசோவின் ஜனாதிபதி கேப்டன் இப்ராஹிம் டிரயர், அமைச்சர்கள் மற்றும் அனைத்து அரசியல்வாதிகளின் சம்பளத்தையும் 30% குறைத்தார்.

அவர் தொழிலாளர்களின் சம்பளத்தை 50% அதிகரித்து, ஒரு ஜனாதிபதியின் சம்பளத்தை ஏற்க மறுத்து, தனது இராணுவ கேப்டனின் சம்பளத்தை தக்க வைத்துக் கொண்டார்.

தனது அரசாங்கத்தில் பணியாற்றும் அனைத்து அதிகாரிகளும் மார்ச் 24, 2025 திங்கட்கிழமைக்குள் தங்கள் சொத்துக்களை அறிவிக்க வேண்டும் என்று அவர் கூறினார் அறிவுறுத்தியுள்ளார், மேலும் அவ்வாறு செய்யத் தவறினால் வழக்கு விரைவாக தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

விரைவாக பணக்காரர் ஆவதற்காக ஊழலில் ஈடுபடமாட்டார்கள் தண்டிக்கப்படுவார் என்றும், அவர் ஊழலை ஏற்றுக்கொள்ள என்றும் எச்சரித்தார்.

அரசாங்கத்தில் பணியாற்றும் அனைவரும் அரசு எந்த வணிகமும் செய்வதையும் டிரயர் தடை செய்துள்ளார். ஊழலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார். ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய சுரங்கத் தொழிலாளி என்று கூறப்படும் ஒரு பிரிட்டிஷ் நிறுவனத்திடமிருந்து புர்கினா பாசோ தங்கச் சுரங்கங்களை வாங்கியது, சுரங்கங்களை மீண்டும் கைப்பற்றிய பிறகு அவர்கள் என்ன செய்தார்கள் என்று யூகிக்கிறீர்களா? அவர்கள் உடனடியாக தேசியமயமாக்கினர்! கடாபி ஆட்சிக்கு வந்த பிறகு லிபியாவில் இதைத்தான் செய்தார், லிபியா உலகின் பணக்கார நாடுகளில் ஒன்றாக மாறியது.

புர்கினா பாசோவில் உள்ள அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் இப்போது தங்கள் படிப்பு முழுவதும் மற்றும் வேலை கிடைக்கும் வரை 100,000 CFA சம்பளத்தை ஆதரவாக பெறுவார்கள்.

புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரேர், முந்தைய அரசாங்கத்தால் 100 மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்பட்ட அனைத்து சாலை டெண்டர்களையும் ரத்து செய்து, 1000 அகழ்வாராய்ச்சி இயந்திரங்கள், கிரேடர்கள் மற்றும் பிற சாலை கட்டுமான இயந்திரங்களை வாங்கியுள்ளார். இப்போது மாநிலம் நாட்டின் சாலைகளை அமைக்கும்.


புர்கினா பாசோவின் ஜனாதிபதி இப்ராஹிம் ட்ரேர், இளைஞர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று மற்ற நாடுகளில் வேலை செய்வதை விட, புர்கினா பாசோவில் வேலை செய்து வேலை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். புர்கினா பாசோவில் தொழில்மயமாக்கல் செழிக்க சாதகமான வணிகச் சூழலை அவர் உருவாக்கி வருகிறார்.

"புர்கினா பாசோவில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும் இலவச பிரசவம்! இன்று, நமது நாட்டில் நம்பிக்கை மற்றும் இரக்கத்தின் புதிய சகாப்தத்தை நான் அறிவிக்கிறேன். பிரசவம் ஒரு அதிசயம், உலகிற்கு உயிரைக் கொண்டுவரும் போது எந்தப் பெண்ணும் நிதிச் சுமைகளைச் சந்திக்கக்கூடாது" ~ 

"அதிகாரம் என்பது ஒருவரின் சொந்த சுயநல விருப்பத்திற்கு சேவை செய்வதல்ல, மாறாக மக்களுக்கு சேவை செய்வதாகும்" ~ 

"பிரச்சார காலங்களில் ஏழைகளுடன் சாலையோர சோளங்களை வாங்கியோ அல்லது தொடக்கப்பள்ளி சீருடைகளை அணிந்து அல்லது ஏழைகளின் அனுதாபங்கள் வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களுடன் கேரி குடிப்பது போல் நடித்து புகைப்படம் எடுக்கும் ஒரு ஜனாதிபதியாக நான் நினைவுகூரப்பட விரும்பினேன். வாழ்க்கை வழங்கக்கூடிய அடிப்படை விஷயங்களை வழங்குவதன் மூலம் புர்கினா பாசோ மக்கள் என் வாழ்நாளில் உண்மையான நிர்வாகத்தை உணர விரும்புகிறேன். புர்கினா பாசோவை எங்கிருந்தும் எங்காவது உயர்த்துவதே எனது நோக்கம்." ~ 

இப்ராஹிம் டிரேர் (புர்கினா பாசோவின் ஜனாதிபதி)

"கடாபி, தாமஸ் சங்கரா அல்லது ஆப்பிரிக்காவை மேம்படுத்த முயன்ற எந்த இளம் தலைவரைப் போலவும் நான் இறந்துவிடுவேன் என்று அவர்கள் என்னிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். நான் பயப்படவில்லை, என் மக்களுக்காக இறப்பதற்கு நான் வருத்தப்பட மாட்டேன்" ~ இப்ராஹிம் டிரேர் (புர்கினா பாசோவின் ஜனாதிபதி)

புர்கினா பாசோ, மாலி மற்றும் நைஜர் ஆகியோர் பிரெஞ்சு மொழி பேசும் உலக அமைப்பிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகியுள்ளனர். இந்தியா முன்பு பிரெஞ்சு காலனியாதிக்கத்திலிருந்து விடுதலை பெற்றது. பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்: "புர்கினா பாசோவின் ஜனாதிபதி கேப்டன் இப்ராஹிம் ட்ரௌரேவுடன் நட்பை வலுப்படுத்த வேண்டும், அவரது நாட்டில் எங்கள் இராணுவ தளங்களை அனுமதிக்க அவரை சமாதானப்படுத்த வேண்டும்"

இப்ராஹிம் ட்ரௌரே: "ஆனால் நீங்கள் ஏற்கனவே அமெரிக்கா, பிரிட்டன், பிரேசில், கனடாவுடன் நண்பர்கள். அந்த நாடுகளில் உங்களுக்கு ஏதேனும் இராணுவ தளங்கள் உள்ளதா?"

"நாங்கள் எங்கள் இறையாண்மையை அனுமதியுடன் அல்ல, தைரியத்துடன் மீட்டெடுக்கிறோம். ஆப்பிரிக்கா மண்டியிடாமல், அதன் காலில் நிற்க வேண்டும்."

ஏகாதிபத்தியவாதிகள் இரண்டு ஆண்டுகளில் மட்டும் 18 முறை அவரை கொலை செய்ய முயற்சித்துள்ளனர். 

உலக சிட்டுக்குருவிகள் தினம்




இன்று

உலக சிட்டுக்குருவிகள் தினம்

என்று

சிட்டுக்குருவிகள் அறியா....

உலகின்

அத்தனையும் அழித்து விட்டு

அரியனவானபின்

அவனே

அறிவிப்பான்

உலக... தினமென்று.....




Tuesday, 18 March 2025

யார் பெரிய நாத்திகர்

 உலகில் வாழும்  பெரும்பாலான மக்கள் ஏதாவது ஒரு மதத்தை சார்ந்து இருப்பார்கள். எந்த மதமும் சாராத மத நம்பிக்கை அற்ற நாத்திகர்களும் இருப்பார்கள்.

 கிறிஸ்தவ மதம் சார்ந்தவர்கள் அநேகமாக எல்லா நாடுகளிலும் வசிக்கிறார்கள். இஸ்லாமிய மதத்தை சார்ந்தவர்கள் பல நாடுகளில் வசிக்கிறார்கள். அடுத்தபடியாக இந்து மதம் இந்தியா. நேபாளம்.பாகிஸ்தான், பங்களாதேஷ், மலேசியா. சிங்கப்பூர் உள்ளிட்ட பெரும்பாலான ஆசிய நாடுகளிலும் பிற பகுதிகளிலும் வசிக்கிறார்கள்.

அதேபோல பௌத்த மதம் பல நாடுகளிலும் பெரும்பகுதி மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல எந்த மதமும் சாராத அல்லது மதங்களை நிராகரிக்கிற நாஸ்திகர்களும் இந்த உலகில் கணிசமாக இருக்கிறார்கள்.நாத்திக மக்கள் பெரும் பகுதி வாழ்வது பொதுவுடமை நாடுகள் தான் என்றில்லை, நார்வே, சுவீடன் போன்ற ஐரோப்பியர்களால் நாடுகளும் அடக்கம். 

நாத்திகம் என்பது கடவுள் அல்லது கடவுள்கள் இருப்பதாக நம்பாத ஒரு நிலைப்பாடு, அதாவது கடவுள் பற்றிய எந்த நம்பிக்கையும் இல்லை அல்லது கடவுள் தொடர்பான நம்பிக்கைகளையும் கோட்பாடுகளையும் ஏற்காத கொள்கை என்று கொள்ளலாம். 

இதில் சில மத நம்பிக்கை உடையவர்கள் தங்கள் மதத்தின் மீது நம்பிக்கை இல்லாத மற்றவர்களை நாத்திகர்கள் என்று கூறுகிறார்கள். உதாரணமாக இஸ்லாமியர்கள், இந்து மதம் மற்றும் சில மதங்களை நம்புகிறவர்கள் கடவுள் நம்பிக்கை அற்றவர்கள் காபீர்கள் என்று அழைக்கிறார்கள். ஆக அவரவர் நோக்கத்திற்கு நாத்திகத்திற்கு விளக்கம் அளிக்கிறார்கள். 

உலகத்தில் உள்ள அனைத்து மதங்களும் பொதுவாக போதிக்கின்ற விஷயங்கள் அன்பு, கருணை, பிறர் பொருள் மீது ஆசை படாதிருத்தல் திருடாதிருத்தல் இன்னும் பிற அறம் சார்ந்த விஷயங்கள்......

 ஆனாலும் எல்லா மதங்களைச்சார்ந்த மக்களின் ஒன்றுபட்ட எண்ணம் தங்கள் மதமே ஒசத்தி தங்கள் கடவுளே உயர்ந்தவர்கள்..... 

ஒரே மதத்தைச் சார்ந்த பல்வேறு பிரிவினர்களுக்கு இடையே இருக்கக்கூடிய பிரச்சனையும் இதுதான்.. இதற்காக இதுவரை உலகில் நடந்துள்ள போர்கள், மனித இழப்புகள், பொருள் இழப்புகள், சகல விதமான அக்கிரமங்களுக்கும் எல்லையே கிடையாது. ஒரு மதத்தைச் சார்ந்தவர்கள் பிற மதத்தினுடைய வழிபாட்டுத் தலங்களை இடித்து நாசமாக்குதல், ஏன் அதே மதத்தைச் சார்ந்த மற்ற பிரிவினருடைய வழிபாட்டு தலங்களை இடித்து நாசமாக்குதல் என்பது வரலாற்றில் இதுவரை ஏராளமான முறை நிகழ்ந்திருக்கின்றன. இதுவரை உலகமெங்கும் நாத்திகர்கள் ஆத்திகர்கள் மோதலில் இந்த அளவுக்கு வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுதல், போர்கள், மனித கொலைகள், நடந்துள்ளனவா என்று பார்த்தால், நாத்திகர்கள் வேண்டுமானால் அதிகம் கொல்லப்பட்டு இருக்கலாம், ஆனால் ஆத்திகர்கள் கொல்லப்பட்டதாகவோ வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதாகவோ பெரிதாக தகவல்கள் வரலாற்றில் இல்லை..

ஒரு கன்னத்தில் அடைந்தால் மறு கன்னத்தை காட்ட சொல்லுகிற இயேசுவின் பக்தர்கள் மற்ற மதத்தினரிடமும், அவர்களுக்குள்ளே உள்ள கத்தோலிக்கர். பிராட்டஸ்டண்ட் உள்ளிட்ட பிரிவினர்களோடும் நடத்திய யுத்தங்கள்,நடத்திய கொலைகள் கொள்ளைகள் மிக அதிகம்... 

அமைதி மார்க்கம் என்று தன்னை அறிவித்துக் கொண்ட இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதத்தினரிடமும், அவர்களுக்குள்ளே உள்ள ஷியா, ஸன்னி பிரிவினர்களோடும் நடத்திய யுத்தங்கள், வழிபாட்டுத்தலங்களை இடித்தல், தாக்குதல்கள், கொள்ளைகள் மிக அதிகம்.

 அமைதியையும் சாந்தத்தையும் போதிக்க கூடிய பௌத்தம், அது மதமே அல்ல பின்னாளில் அது மதமாக மாற்றப்பட்டது. அதைச் சார்ந்த அரசுகளும், மக்களும் மதத்தின் பெயரால் நடத்திய அக்கிரமங்களைப்பற்றி நிறையவே சொல்லலாம்.

 அகம் பிரம்மாஸ்மி, அன்பே சிவம் என்றும், சகல ஜீவ ராசிகளையும் தன்னுயிர் போல் எண்ணுவதாக சொல்லிக் கொண்ட இந்துமதம் ஆதி காலத்தில் இருந்து மதத்தின் பெயரால் அது நடத்திய சண்டைகளுக்கு அளவே கிடையாது. ஆயிரக்கணக்கில் சமணர்களை கழுவில் ஏற்றியதில் இருந்து, சைவ வைணவ சண்டைகள் உள்ளுக்குள்ளே ஏராளமான ஜாதியின் பெயரால் நடத்திய தாக்குதல்களுக்கு அளவே கிடையாது.

எந்த மதம் சிறந்தது, அதனுடைய நிறைகுறைகள் என்ன என்பதை பற்றி ஆராய்ச்சியை நாம் இங்கு செய்யவில்லை. ஆனால் , அரசாங்க மதம் ஆக அறிவிக்கப்பட்டு செயல்படும் அரசுகளிலிருந்து, தனிநபர் வரை மதங்களில் சொல்லப்பட்ட கோட்பாடுகளுக்கு விரோதமாக செயல்படுவதை நாம் காண முடிகிறது. 

"நான் மானிடரின் மொழிகளிலும் வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கில்லையேல் ஒலிக்கும் வெண்கலமும் ஓசையிடும் தாளமும் போலாவேன்.

இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் எனக்கு இருப்பினும், மறைபொருள்கள்அனைத்தையும் அறிந்தவனாய் இருப்பினும்,அறிவெல்லாம் பெற்றிருப்பினும்,மலைகளை இடம்பெயரச்செய்யும் அளவுக்குநிறைந்தநம்பிக்கை கொண்டிருப்பினும்என்னிடம் அன்பு இல்லையேல்நான் ஒன்றுமில்லை.

என் உடைமையை எல்லாம் நான் வாரி வழங்கினாலும் என் உடலையே சுட்டெரிப்பதற்கெனஒப்புவித்தாலும்என்னிடம் அன்பு இல்லையேல்எனக்குப் பயன் ஒன்றுமில்லை.

அன்பு பொறுமையுள்ளது; நன்மை செய்யும்; பொறாமைப்படாது; தற்புகழ்ச்சி கொள்ளாது; இறுமாப்பு அடையாது.

அன்பு இழிவானதைச் செய்யாது;தன்னலம் நாடாது; எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது.

ஆக,நம்பிக்கை, எதிர்நோக்கு,அன்பு ஆகிய மூன்றுமேநிலையாய் உள்ளன.இவற்றுள் அன்பே தலைசிறந்தது.

கொரிந்தியர் அதிகாரம் – 13 – திருவிவிலியம். 

என்கிறது பைபிள்.... 

"புண்ணியம் என்பது உங்கள் முகங்களை கிழக்கிலோ மேற்கிலோ திருப்பிக் கொள்வதில் இல்லை :ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும் இறுதி தீர்ப்பு நாளின் மீதும் மலக்குகளின் மீதும் வேதத்தின் மீதும் நபிமார்கள் மீது ஈமான் கொள்ளுதல், பொருளை இறைவன் மேல் உள்ள நேசத்தின் காரணமாக பந்துகளுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்பவர்களுக்கும், அடிமைகள் கடனாளிகள் போன்றோரின் மீட்புக்காகவும் செலவு செய்தல்:...... 

இவையே புண்ணியமாகும்... "

திருக்குரான் - ருகூஃ 22-177.

என்கிறது இஸ்லாம்.... 

வெறுப்பை அன்பினால் வெல்க. தீமையை நன்மையால் வெல்க. கருமித்தனத்தைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யினால் வெல்க. 

என்கிறது பௌத்தம்

இதுபோல அனைத்து மதங்களும் போதிக்கின்ற வேளையில், கோட்பாடுகளை புறந்தள்ளிவிட்டு, சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்களை மட்டும் கடைப்பிடிப்பவர்கள் விட பெரிய நாத்திகர்கள் யார் இருக்கிறார்கள்?!..... 

Saturday, 15 March 2025

அழியட்டும் ஜா"தீ"ய வன்மம்

 அழியட்டும் ஜாதீய வன்மம் 




முன்பெல்லாம் யாரவது குற்றம் செய்துவிட்டு சிறை சென்று வந்தால் யாரையும் சந்திக்க வெட்கப்பட்டு வெளியில் தலைகாட்ட மாட்டார்கள்.நெருங்கிய உறவினர்கள் கூட சற்று ஒதுங்கியே செல்வார்கள்.

ஆனால் இப்பொழுதோ ஜாதிய வன்மத்தோடும் செறுக்கோடும் ஆணவ கொலை செய்துவிட்டு வெட்கம் கூச்சமே இல்லாமல்,பரோலில் வரும்போது கூட ஆரவாரமாக வருகிறார்கள்.அவர்களையும் பெரும் கூட்டம் அமர்க்களமாய் வரவேற்கிறது என்றால்,நவீன ,நாகரீகமான  காலத்தில் வாழ்வதாக சொல்லும் தமிழர்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும். 

சனாதனம் தலையெடுத்த பின்னர் பலநூறு ஆண்டுகளாய் ஆட்டிப்படைத்த சாதீய பேய் மீண்டும் தமிழ் மண்ணில் ஆட்டம் ஆட துவங்கியிருக்கிறது. சாதீயம் என்பது ஏதோ குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் பிடித்திருக்கிறது என்றெல்லாம் நினைத்து விடாதீர்கள்.அது கொடூரமாய்,மேலிருந்து கீழாய் பிரமீடைப்போல அஸ்திவாரமிட்டு உள்ளது.ஒவ்வொரு மனிதனின் டி என் ஏ விலும் மிக  ஆழமாய் பதிந்திருக்கிறது என்பது தான் உண்மை,ஒவ்வொரு சாதியும் தனது சாதி தான் உசத்தி என்ற வெறியும், தனக்கு மேலே சாதிகள் இருந்தாலும் தன் சாதிக்கு  கீழும் சாதிகள் உள்ளன ,அவர்களுக்கு நாம் மேல்.. ,அவர்கள் தமக்கு அடங்கி இருக்க வேண்டும் என்கிற எண்ணம் மிக மிக அதிகமாய் உள்ளது. 

நம்பூதிரிக்கு மற்ற பிராமணர்களும் தமக்கு கீழ் ,அய்யருக்கு அய்யங்கார் பெரியவரா..சின்னவரா...,அய்யங்காரில் வடகலை பெரிதா தென்கலை பெரிதா குருக்கள் இவர்களுக்குள் எந்த நிலை ...இப்படி ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் முடிவில்லாத அளவிற்கு போய்க்கொண்டே இருக்கும்.ஆனாய் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமை எல்லா பிற சாதியினரும் இவருக்கு கீழ்... 

அப்புறம் நம் ஆண்ட பரம்பரையினர்....முக்குலத்தோரில் யார் பெரியவர்.....தேவரா சேர்வையா,கள்ளரா அப்புறம் அதற்குள்ளே இருக்கிற பிரிவினரா...   இப்படி ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் முடிவில்லாத அளவிற்கு போய்க்கொண்டே இருக்கும்.ஆனாய் இவர்களுக்குள் ஓர் ஒற்றுமை எல்லா பிற சாதியினரும் இவருக்கு கீழ்... 

அப்புறம் யார் பெரிய சாதி முதலியாரா.. பிள்ளைமாரா.. வன்னியர்.. கவுண்டரா..கோனாரா ..உடையாரா..நாயுடுவா.. செட்டியார்... முத்தரையரா...நாடாரா.... இப்படியே ஆராய்ச்சி செய்துகொண்டே போனால் இன்னும் சாதிகளுக்கும் பஞ்சம் இருக்காது... அவர்களுக்குள் இருக்கும் உட்பிரிவுகளும் பஞ்சமிருக்காது....பெருமை பீத்தல்களுக்கும் பஞ்சமிருக்காது...

எல்லோருக்கும் பொதுவான ஒரே குரல்... நாங்க ஆண்ட பரம்பரை.நாங்க இத்தனை கோடிப்பேர் இருக்கோம்....ஒவ்வொரு சாதியினரையும் மட்டமாக விமர்சித்து பழமொழிகள் வேறு.... 

இதில் அத்தனை சாதிகளையும் சொல்லவில்லையென்றால் எண்ணிக்கை தெரியாத குற்றம் அல்லது எண்ணமுடியாத அளவிற்கு சாதிகள் உள்ளதென்ற யதார்த்தம்.ஆனால் எல்லோருக்கும் பொதுவான எண்ணம் அந்தக்காலத்தில் நாங்க அப்படி இருந்தோமாக்கும்..மத்தவங்க எங்களுக்கு கீழே ..எங்களுக்கு மேலே சாதிகள் இருந்தாலும் எங்களுக்கும் சாதிகள் கீழே....

இவர்கள் எல்லோருக்கும் பெரிய ஒற்றுமை என்னவென்றால் இவர்களுக்கு கீழே தாழ்த்தப்பட்ட சாதிகள் ,அவர்கள் நமக்கு அடங்கி தான் நடக்கவேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம்,இந்த எண்ணமானது  படித்தவர்கள் படிக்காதவர்கள்,வசதி படைத்தவர்கள்,ஏழைகள். ஆண்கள், பெண்கள், குழந்தைகள்,எல்லோர் மத்தியிலும் வெளியே தெரிந்தும் தெரியாமலும் ஆட்டி படைக்கிறது....இது பள்ளியிலிருந்து சுடுகாடுவரை ,ஆன்மீகத்திலிருந்து அரசியல் வரை எல்லா இடத்திலும் ஆட்டிப்படைக்கிறது.

இந்த வன்மம் தான் பல அக்கிரமங்களுக்கு காரணமாகிறது.சக மனிதனை மனிதனாக நடத்தாதிலிருந்து ,அடிமைப்படுத்தி துன்புறுத்தும் அளவிற்கு வியாபித்திருக்கிறது.

ஆனால் நாம் மிக முக்கியமாக வரலாற்றை மறந்து விடுகிறோம்.  ஒரு நூற்றாண்டுக்கு முன்னாள் வரை எல்லோருக்கும் கல்வி மறுக்கப்பட்டு,வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டு,அணைத்து பதவிகளிலும் பிராமணர் உள்ளிட்ட சில சாதியினரே ஆக்கிரமித்துக்கொண்டு,தமிழகத்தை ஆட்டிபடைக்கையில் உருவானது தான் தென்னிந்திய நல உரிமை சங்கம்,பின்னர் நீதி கட்சி,திராவிட இயக்கம் பொதுவுடைமை கட்சிகள்.இவர்களது விடாப்பிடியான சட்ட போராட்டங்கள்,மக்கள் இயக்கங்கள் அரசு மாற்றங்கள் இதற்கு பின்னர் தான் ஓரளவிற்காவது எல்லா சாதியினரும் கல்வி வேலைவாய்ப்பில் சில முன்னேற்றங்கள்..

அதே போலத்தான் கோவில்களுக்குள் அனைவரும் செல்ல முடியாத நிலை...விடாப்பிடியான சட்ட போராட்டங்கள்,மக்கள் இயக்கங்கள்,ஆலய நுழைவு போராட்டங்கள்  இதற்கு பின்னர் தான் அனைவரும் கோவிலுக்குள் சென்று ஆண்டவனையே வணங்கும் சூழல் ஏற்பட்டது.

இது பல விஷயங்களை கூற முடியும்.

இதைவிட தமிழகம் மிக பெருமைப்படக்கூடிய விஷயம்.. பெயருக்கு பின்னால் சாதி போடுவதை தூக்கி எறிந்த பெருமை தமிழனுக்கு மட்டுமே உண்டு.தந்தை பெரியாரும் திராவிட இயக்கங்களின் விடாமுயற்சியினால் தான இது சாத்தியமானது.இந்த முன்னேற்றங்கள் எதுவும் தானாக வந்துவிடவில்லை. சனாதனம் புகுத்தியதை பகுத்தறிவுவாதிகள் எதிர்த்து போரிட்டதால் தான் என்கிற   உண்மையை மறந்துவிடலாகாது. ஆனால் இவ்வளவு முன்னேற்றங்களுக்கு பின்னரும் மீண்டும் சாதி வெறி தலை தூக்கி இருப்பது கேவலமான விஷயம். 

1968ஆம் ஆண்டில் தஞ்சை கீழ வெண்மணியில் கூலி உயர்வு கேட்டார்கள் என்பதற்காக விவசாய கூலிகள், முதியவர்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட 44 பேரை நிலப்பிரபுகள் உயிரோடு தீயிலிட்டு  கொளுத்தி, படுகொலை செய்தனர். 

அது வெறும் கூலிஉயர்வுக்கான போராட்டம் என்பதற்காக மட்டும் இல்லை தாழ்ந்த ஜாதியினர் ஒன்றுபட்டு செங்கொடி சங்கத்தின் கீழ் தங்களை எதிர்த்து இயக்கம் நடத்தினார்கள் என்ற வன்மமும் சேர்த்து தான். 

தாழ்ந்த ஜாதி பையன் தங்கள் சாதி பெண்ணை பார்த்தான்,பேசினான், காதலித்தான்,  என்பதற்காக எத்தனை ஆணவக்கொலைகள் நடந்திருக்கிறது என்பதை பட்டியலே போடலாம்.... 

தாழ்ந்த ஜாதி பையன் விளையாட்டில் தங்கள் சாதி பையனை ஜெயித்தான்,நன்றாக படித்தான், தங்கள் தெருவில் செருப்பு போட்டு நடந்தான் என்பதற்காக கூட மிருகவெறி தாக்குதல்கள் நடைபெறுவதை இன்றைய பல செய்திகளைதொலைக்காட்சி வாயிலாக செய்தி ஊடகங்கள் வாயிலாக  காண்கிறோம்..  

தங்கள் தெருவில் ஒரு நாடார் பையன் செருப்பு போட்டு நடந்து வந்ததால் தன் தாத்தா கட்டி வைத்து அந்த காலத்தில் அடித்ததாக ஒரு பிராமண உபன்யாசகர் தொலைக்காட்சியில் இன்று பேசுகிறார் என்றால் என்ன அர்த்தம்.சனாதனம் நன்றாக மீண்டும் தலை தூக்கி விட்டது என்று தானே அர்த்தம், 

 இந்த கொடுமை தாழ்ந்த சாதியினருக்குள்ளேயும் காணப்படுகிறது என்பது அதைவிட கேவலமான விஷயம்...அவர்களுக்குளேயே இந்த சாதியை விட நாங்கள் உயர்ந்தவர்கள்,அவர்கள் தாழ்ந்தவர்கள் என்ற எண்ணம் ஆழமாய் பதிந்திருக்கிறது என்பது தான் இன்னம் கொடூரமான விஷயம். 



துர் வர்ணயம் மாயா ஸ்ருஷ்டம் குண கர்ம விபாகச

தஸ்ய கர்தாரமாபி மாம் வித்யா கர்தார மவ்யயம்'' (கீதை)


இதில் கிருஷ்ண பரமாத்த்மா என்ன சொல்கிறாரென்றால்...

நான்கு வர்ணங்கள் என்னால்

உருவாக்கப்பட்டவை. அவரவர்க்கு உரிய கர்மங்களை

அவரவர் மீறாமல் செய்ய வேண்டும் ( நீ செருப்பு தைப்பவனாக இருந்தால் செருப்பை மட்டுமே தைத்துக்கொண்டு இருக்க வேண்டும்)

அதனை மீறி செயல்பட வைக்க அந்த வர்ணத்தை உருவாக்கிய என்னால்கூட முடியாது ( நீ மீறி வேறு எதையும் செய்ய நான் அனுமதிக்க மாட்டேன்)

இதைதான் கிருஷ்ண பகவான் கீதையில் உள்ள

அந்த இரண்டு வரிகளில் சொல்லி இருக்கிறார்

கடவுளே சாதியை உருவாக்குவது முறையானதா?

இல்லையில்லை... ஆளும் சுரண்டும் வர்க்கம் தனது சுயநலத்திற்காக உருவாக்கிய கடவுளும், வர்ண, சாதிய கட்டமைப்புமே காரணம்.அதனால் உருவாக்கப்பட்ட  சாதிய வன்மம், ஒவ்வொரு மனிதரின் டி என் ஏ வில் ஊடுருவி உள்ளது என்கிற உண்மையை புறந்தள்ளி விட முடியாது. இந்த சாதீய வன்மத்தை தொலைத்து தலைமுழுகுவதற்கு அணைத்து முற்போக்கு ஜனநாயக சக்திகளும் சமூக ஆர்வலர்களும் ஒன்றிணைத்து கடுமையான கருத்துப்போர் தொடங்குவது அவசியம் .இல்லையென்றால் மீண்டும் கற்காலத்திற்கே சென்று விடுவோம்.





Friday, 14 March 2025

நீங்கள் யார் பக்கம்.....

 பெண்களின் கடமை எதுவென “காஞ்சிப் பெரியவர்” கூறுவது: 

பெண்களும், சிரமதானமும் : தெய்வத்தின் குரல் (மூன்றாம் பகுதி)

காமகோடி

பெண்ணாகப் பிறந்தவர்கள் வீட்டு வேலைகளைக் குனிந்து நிமிர்ந்து பண்ணினால் போதுமானது. ஆபீஸ் வேலை அவர்களுக்குக் கூடாது என்பதே என் அபிப்ராயம். என் அபிப்ராயமென்றால் என்ன? நம்முடைய தர்ம சாஸ்திரத்தில் என்ன சொல்லியிருக்கிறதோ அதை அநுஸரித்துத்தான் சொல்கிறேன். இப்போது இந்த விஷயத்தை நிறுத்திக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, ஒரு ஸ்த்ரீயானவள் ஒழுங்காகப் பொறுப்பாகப் வீட்டு வேலைகளைப் பண்ணுவதென்றால், சமைத்துப்போட்டு, குழந்தைகளைக் கவனித்து, புருஷனுக்குச் செய்ய வேண்டியவைகளைச் செய்வதென்றால் அதற்கே நாள் பூராவும் ஆகிவிடும். குடும்பங்கள் சேர்ந்துதான் தேசம்; வீடுகள் சேர்ந்துதான் நாடு. ஆனதால் பொம்மனாட்டிகள் அவரவர் வீடுகளை வீடாக வைத்துக் கொள்வதற்கானவற்றைப் பண்ணினால் அதுவே நாட்டுப்பணி; உலகத்தொண்டுதான்; பரோபகாரம்தான். இதற்கு மிஞ்சிப் பொழுதும் சக்தியும் இருந்தால் பொதுப்பணிகளும் செய்யலாம். இவை ஸ்த்ரீ லக்ஷணத்துக்கு உரியதாக, ‘பெண்மை’ என்று ஒன்றை வார்த்தையாகவாவது இன்னமும் சொல்லிக் கொண்டிருக்கிறோமே, அதற்கு ஏற்றபடியான தொண்டுகளாக இருக்க வேண்டும். அதாவது அடக்கத்துடன் செய்வதாக இருக்க வேண்டும். தேஹ ச்ரமமும் அதிகம் இருக்கக்கூடாது. கோயில்களில் கட்டுக் கட்டாகக் கோலம் போடுவது; பஜனை – ஸந்தர்ப்பணை நடக்கிற இடத்தில் பெருக்கி, மெழுகி, பாத்திரம் தேய்த்து உபகாரம் பண்ணுவது; பிரஸவ ஆஸ்பத்திரி மாதிரியான பெண்களுக்கு மட்டுமே உரிய இடங்களில் பிரஸாதங்கள் விநியோகம் பண்ணுவது; அநாதைக் குழந்தைகளைப் பராமரிக்கிற இடங்களுக்குப் போய் அதுகளுக்குப் புது வஸ்திரம், பக்ஷணம் கொடுத்து ஏதோ கொஞ்சம் பஜனை, ஸ்தோத்ரம் சொல்லித் தருவது என்று இப்படிப்பட்டப் பணிகளைப் பெண்கள் செய்யலாம்.

ஸமுதாயம் அடங்கலும் ஒன்றுபட வேண்டும் என்பதற்காகக் குளம் வெட்டுகிற வேலையில் மட்டும், அது கொஞ்சம் ச்ரமமானதாக இருந்தாலுங்கூட, நானே பெண்களையும் ஈடுபடுத்தியிருக்கிறேன்.

இருந்தாலும் பொதுவாக ‘ச்ரமம்தான்’ என்பதில் கடும் சரீர உழைப்புத் தேவைப்படுகிற தொண்டுகளைப் பெண்களிடம் காட்டாமல் புருஷர்களே பண்ணுவதுதான் உசிதம்.

இது சனாதன வாதிகள் குரல்

*****************************

ஒரு ஆண் படித்தால், அவன் மட்டுமே படிக்கின்றான்; ஒரு பெண் படித்தால் அந்தக் குடும்பமே படிக்கின்றது. பெண்கள் தங்கள் வாழ்க்கையை நடத்திக் கொள்ளக்கூடிய அளவுக்கு ஊதியம் தேட ஆரம்பித்து விட்டாலே, ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியவர் பெரியார்.

பெரியார் கூறுகிறார் : வாழ்க்கையில் இன்ப, துன்பங்கள் போக, போக்கியங்களில் இருவரும் சம உரிமையுடன் வாழுங்கள். கணவன் மனைவி இருவரும் தாங்கள் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ வேண்டும். வரவுக்கேற்ற செலவு செய்ய வேண்டும். சிறிதாவது வருமானத்தில் மிச்சப்படுத்த வேண்டும். வரவுக்கு மேல் செலவு செய்வது “விபச்சாரம்” செய்வதை ஒத்ததாகும்.

“மூடநம்பிக்கைகளை ஒழித்துப் பகுத்தறிவுக்கேற்ற முறையில் நடக்க வேண்டும். கோயில் திருவிழாக்களுக்குச் செல்லக்கூடாது. எங்காவது போக வேண்டுமானால், அறிவை விசாலமாக்கும் பொருட் காட்சிச் சாலை, இயந்திரத் தொழிற்சாலை போன்றவற்றிற்குச் சென்று பார்க்க வேண்டும். அதிகமான குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு பகவான் (கடவுள்) கொடுத்தார் என்று சொல்லக் கூடாது. ஒன்று, இரண்டு குழந்தைகள் பெற்று மகிழ்ச்சியுடன் வாழுங்கள். ஆண்கள், பெண்களுக்கு சம உரிமையும், சம பங்கும் கொடுங்கள். உங்கள் மனைவியை நினைத்துக் கொண்டே - யோசிக்காதீர்கள். உங்களுடைய செல்லப் பெண் குழந்தைகளையும், உங்கள் தாய், சகோதரிகளையும் மனதில் வைத்து யோசி யுங்கள். நம் நாட்டுப் பெண்கள், மேல்நாட்டு பெண்களைவிடச் சிறந்த அறிவு, ஆற்றல், வன்மை, ஊக்கம் உடையவர்கள், பெண்களை வீரத்தாய்மார்களாக உருவாக்குங்கள்.

பெண்களே! சட்டை, பேண்ட், லுங்கி கட்டுங்கள். முடியைக் கழுத்தளவுக்கு வெட்டிக் கொள்ளுங்கள். உருவத்தில் ஆண்களா, பெண்களா என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வாழுங்கள். கும்மி, கோலாட்டங்களை ஒழித்து, ஓடவும் தாண்டவும் குதிக்கவும் குஸ்தி போடவும் போலீசாக, இராணுவ வீரராக, விமானியாக உருவாகுங்கள்.

மனுநீதி சாஸ்திரப்படி நமக்குத் திருமணம் கிடையாது; நாம் எல்லோரும் தாசி மக்கள்; நாம் திருமணம் செய்வதாக இருந்தால் நம் வீட்டுக்குப் பார்ப்பான் வந்து நமக்கு பூணுல் மாட்டித்தான் திருமணம் செய்வான். கன்னி காதானம், மாங்கல்யதாரணம், பாணிக்கிரகணம், விவாக சுபமுகூர்த்தம், தாராமுகூர்த்தம் என்று வேற்று மொழிச் சொற்கள்தான், தமிழில் சொற்கள் இல்லை. நாங்கள் தான் “வாழ்க்கை ஒப்பந்தம்” - என்ற சொல்லை, திருக்குறளில் இருந்து கண்டு பிடித்தோம். கல்யாணம் என்பதன் பொருளே ஒரு பெண்ணை ஆணுக்கு அடிமைப்படுத்துவது என்றுதான் பொருள் ஆகும்.”

மேலும் பெரியார் கூறுகிறார் : “பெண் என்பவள் ஒரு ஆணுக்கு சமையல்காரி, சம்பளம் வாங்காத வீட்டு வேலைக்காரி - ஆணின் காமக் கிழத்தி, ஒரு ஆணின் குடும்பப் பெருக்கிற்கு - பிள்ளை உற்பத்தி செய்யும் பண்ணை, “இயந்திரம்”, பிள்ளைக் குட்டி சுமக்கும் தோல்பை என்றும்; பெண்ணின் கழுத்தில், காதில், உடலில் ஆங்காங்கே நகையை மாட்டி உள்ளார்கள். நகை மாட்டும் ஸ்டேண்டா? என்றார், பெரியார். பெண்கள் வைரம் காய்க்கும் மரங்களா? பட்டு போர்த்திய, அலங்கார பொம்மைகள் போன்று உள்ளார்கள்.

இது பகுத்தறிவாளர் குரல்

************************** 

நீங்கள் எந்தப் பக்கம்?! 

மூலையில் முடக்கி வைக்கப்பட்டிருந்த, கல்வி, வேலைவாய்ப்பு மறுக்கப்பட்டிருந்த, உரிமை மறுக்கப்பட்டு குரல்வளை நெறிக்கப்பட்டிருந்த மகளிர் இன்று கல்வி, வேலைவாய்ப்பில் சம உரிமை பெற்றிருப்பது சனாதானத்தின் கருணையாலா, அல்லது மக்களை திரட்டி போராடிய, இன்றுவரை மகளிர் முன்னேற்றத்திற்கு கருத்தாலும், கரத்தாலும் நிற்கும் பகுத்தறிவாளர், பொதுவுடமைவாதிகள் இயக்கங்களாலாலா?!


நீங்கள் யார் பக்கம்..... 

யார் உங்கள் பக்கம்... 

Thursday, 13 March 2025

கிராமத்து திருவிழாக்கள்

 எல்லோருக்குமே அவரவர் சிறு வயதில் பார்த்த  திருவிழாக்கள் என்பது பசுமரத்தாணி போல், மனதில் ஒரு மூலையில் பதிந்து தான் இருக்கும் . அதிலும் கிராமப்புறத்தில் பிறந்தவர்கள் என்றால் நிச்சயமாக மறந்து விட முடியாது. நான் வளர்ந்தது மதுரையில் என்றாலும், பிறந்தது வெள்ளலூர் கிராமத்தில் என்பதால், எங்கள் ஊர் திருவிழாக்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எங்கள் வெள்ளலூர் கிராமம் சுற்றியுள்ள கிராமங்களுக்கு தலைநகர் போல இருந்ததால், எங்கள் பகுதியை வெள்ளலூர் நாடு என்றுதான் அழைப்பார்கள், அதில் எங்களுக்கு ஒரு பெருமை, எங்கள் ஊரில் திருவிழாக்களுக்கு பஞ்சம் இல்லை,. ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழா, வல்லடிகாரன் கோவில் திருவிழா, மந்தை கோவில் திருவிழா என்று ஏகப்பட்ட திருவிழாக்கள் வருடத்தில் மூன்று நான்கு மாதங்களுக்கு ஒரு முறை ஏதாவது ஒன்று நடந்து கொண்டுதான் இருக்கும்.

திருவிழா வந்தாலே மதுரையில் இருந்து நான் அக்கா தம்பி தங்கைகள் வெள்ளலூர் வருவோம். எங்களுக்காகவே எங்கள் ஐயா பஸ் ஸ்டாண்டுக்கு வீட்டுக்குமாக நடையாய் நடந்து கொண்டு காத்திருப்பார். எங்கள் அப்பா எங்களை கிராமத்து திருவிழாவுக்கு அழைத்து சென்றதாக ஞாபகம் இல்லை. பஸ்ஸில் அனுப்பி வைப்பார்.

ஏழை காத்த அம்மன் கோவில் திருவிழாவில் ஏழு பெண் பிள்ளைகளை தேர்ந்தெடுத்து அவர்களை அம்மனின் அம்சமாகவே பாவித்து வணங்கி திருவிழா கொண்டாடுவர்.

 மது எடுப்பது, முளைப்பாரி மற்றும் சிலை எடுப்பு என்று பெண்கள்ஏராளமாய் பங்கேற்பார்கள். ஆண்கள் வைக்கோலை உடல் முழுவதும் பிரிசுற்றி முகத்தில் மாறுவேடம் அணிந்து கொண்டும், பூக்கடை எடுத்தல் என்றெல்லாம் ஊர்வலமாக வருவார்கள். சிலை எடுப்பு என்பதும் எனக்கு நினைவுக்கு வருவது எங்கள் சின்னையா தான். அவர் எங்களை கூலிப்பட்டி என்று ஊருக்கு நடையாகவே அழைத்துச் சென்று, மண்ணால் செய்யப்பட்ட சிலை பொம்மைகளை வாங்கி வந்து எங்கள் தெரு பெண்களுக்கு கொடுப்பார். அதை வேண்டுதலுக்காக எடுத்துச் சென்று கோயிலிலே பெண்கள் வைப்பார்கள்.

 வல்லடிக்காரர் கோயில் திருவிழா என்றால், அங்குள்ள பெரிய குதிரை சிலைக்கு மக்கள் பூ மாலைகள், பூச்சரங்கள் வாங்கி சாத்துவது ஞாபகம் இருக்கிறது, அதேபோல இரவு ஆண்கள் கோலாட்டம் ஆடி நிறைய பாடல்கள் எல்லாம் பாடுவார்கள். காலஞ்சென்ற எங்கள் திருநாவுக்கரசு மாமா அந்த பாடல்களை மிகச் சிறப்பாக பாடுவார்.

அந்தக் குதிரையைப் பற்றி நிறைய கதை கதையாக சொல்லுவார்கள். வெள்ளைக்காரன் முன்னால் அந்த குதிரை புல்கட்டை தின்றுவிட்டு கனைத்ததாகவும், அதைக் கேட்டு வெள்ளைக்காரன் அமர்ந்திருந்த குதிரை மிரண்டு போய் ஓடிச் சென்றதில் அந்த வெள்ளைக்காரன் கீழே விழுந்து இறந்து விட்டான் என்று கதை சொல்லுவார்கள்.

நானும் பள்ளிக்குச் சென்று என் சக மாணவர்களிடம் இந்த குதிரை கதையை சொல்லி பீத்தினால், அவர்கள் பங்கிற்கு அவர்களுடைய கிராமத்து கோயில் கதைகளை என்னிடம் பீத்துவார்கள்.

நான் என் அப்பத்தா ஐயாவிடம் இந்த குதிரை ஒரே ஒரு வெள்ளைக்காரனை கொன்றது போல நமக்கு கெடுதல் செய்து, ஆட்சி செய்த எல்லா வெள்ளைக்காரனையும் கொன்று இருந்தால் நன்றாக இருக்குமே என்று கேட்டதற்கு அப்பன் புத்தி அப்படியே இருக்கிறது என்று என்னை திட்டுவார்கள். யாரைக் கேட்டாலும் அவரவர் கிராமத்து தெய்வம் தான் மிகவும் சக்தி வாய்ந்தது என்று சொல்கிறார்கள், எல்லா கிராமத்து சாமிகளும் அவர்கள் ஊரில் இருந்த வெள்ளைக்காரர்களையெல்லாம் வேண்டாம் என்று துரத்தி இருந்தால் இந்த நாட்டிற்கு எளிதில் சுதந்திரம் கிடைத்திருக்குமே என்று எனக்கு எப்பொழுதுமே சந்தேகம் வரும். யாரிடமாவது கேட்டு திட்டி விடுவார்களோ என்று பயந்து யாரிடமும் கேட்பதில்லை. 

என் அப்பாவிடம் மட்டும் இந்த கேள்வி கேட்டதற்கு அவர் சொன்னார். பயப்படுபவர்களை மட்டும் தான் சாமி கொல்லும். இந்த சாமி மீது பயமோ நம்பிக்கை இல்லாதவர்களுக்கு ஒன்றும் செய்யாது. அதனால் சாமி உடைய வேலை எல்லாம் அந்த வெள்ளைக்காரனிடம் செல்லாது என்றார். 

அதுக்கு ஒரு கதையும் சொன்னார். கிராமத்தில் இருந்த காளியம்மன் கோவிலில் சன்னதிக்கு எதிராக ஒரு முஸ்லிம் கால் நீட்டி படுத்திருந்தானாம். அப்போது பூசாரியின் கனவில் காளி தோன்றி அடே பூசாரி, ஒரு துலுக்கன் நான் வருகிற பாதையில் காலை நீட்டி படுத்திருக்கிறான் மரியாதையாக அவனை எந்திரிக்க சொல் இல்லாவிட்டால் உன் கண்ணை தோண்டி விடுவேன் என்று மிரட்டியதாம். அதற்கு, நேரடியாக காலை நீட்டி படுத்திருக்கும் துலுக்கனிடம் காலை மிரட்டி இருக்க வேண்டியதுதானே என்பார் என் அப்பா... 

எங்க ஊரு மந்தை கோவில் திருவிழா என்றால் மூன்று நாட்களுக்கு கூத்து நடைபெறும். நாடகம் பார்ப்பதற்கு பாய் எல்லாம் எடுத்துக் கொண்டு போய் விரித்து நாடகம் ஆரம்பிக்கும் வரை உட்கார்ந்து இருப்போம். ஆரம்பித்தவுடன் உறக்கம் வந்து படுத்து விடுவோம். விடியும் வரை உறங்கி விட்டு நாடகம் பார்க்காமலே வீட்டிற்கு வந்து சேர்வோம். ஒரு முறை கூட முழு நாடகம் பார்த்ததாக நினைவில் இல்லை.  வருடா வருடம் வள்ளி திருமணம் அரிச்சந்திர மயான காண்டம் நாடகம் தான் போடுவார்கள்.

அப்பாவிடம் நீங்கள் ஏன் திருவிழாவிற்கு, கோவிலுக்கு எங்களை கூட்டி செல்வதில்லை என்று கேட்பேன்.

அவர் என்னிடம் கேட்பார் ஆஸ்பத்திரிக்கு யார் போவார்கள்.

நோயாளிகள் தான் என்பேன். அதேபோல கோவிலுக்கு யார் போவார்கள் என்று கேட்டுவிட்டு, பாவம் செய்தவர்கள் தான் போவார்கள் என்பார். நேர்மையாக, ஒழுக்கமாக வாழ்ந்தாலே போதும், கோயில் எல்லாம் போய் சாமியிடம் எதுவும் கேட்க வேண்டியதில்லை என்பார். உழைத்தால் தான் சம்பளம் கிடைக்கும். சாப்பிட முடியும். நீ படித்தால் தான், பரீட்சை எழுத முடியும், பாஸ் பண்ணிவிட்டு வேலைக்கு போக முடியும், சும்மா இருந்துவிட்டு சாமியிடம் போய் கேட்டால் சாமி கொடுத்து விடுவாரா என்ன என்பார்.

அப்பா திருவிழாவை பற்றி ஒரு வேடிக்கையான நிகழ்ச்சியை சொல்லி சிரிப்பார்.இன்றைக்கு சுமார் 75 வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. 

 அப்பா இளமை காலத்தில் எங்கள் ஊரிலேயே சைக்கிள் கடை வைத்திருந்தார். அவரது சைக்கிள் கடை தான் அங்கு உள்ள இளைஞர்களுக்கு சங்கமமாகும் இடம். உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருப்பார்கள். ஒரு வருடம் அந்த ஊர் திருவிழாவின் போது ஊர் பிரமுகர் இவர் கடைக்கு வந்தபோது இந்த வருடம் என்ன நாடகம் என்று கேட்டிருக்கிறார்கள். கிராமத்து பிரமுகர் வருடா வருடம் நாடகமாக போட்டு அலுத்து விட்டது. இந்த வருடம் வித்தியாசமாக ஒரு கச்சேரி வைக்கலாம் என்று இருக்கிறோம் என்றார். யாருடைய கச்சேரி ஆரம்பம் என்று கேட்டதற்கு அப்போதைக்கு பிரபலமாக உள்ள ஒரு பாடகருடைய சங்கீத கச்சேரி என்று சொல்லி இருக்கிறார்கள்.

அவரது சங்கீத நிகழ்ச்சிகள் பெரும்பகுதி நகரங்களில் எடுபடும் கிராமத்தில் அவரது நிகழ்ச்சி எந்த அளவுக்கு எடுபடும் என்று தெரியாது என்று அப்பா கேட்டதற்கு நீ எப்போது பார்த்தாலும் வில்லங்கமாகவே ஏதாவது கூறு இங்கு நன்றாக ரசிப்பார்கள் என்று சொல்லியிருக்கிறார்.

சரி, சரி எதுக்கும் ஒரு பத்து ஐம்பது பேரை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். காபி டீ ஏதாவது போட்டு வைத்துக் கொண்டால் தூங்காமல் அவர்களாவது இருப்பார்கள். யாருமே இல்லாம கச்சேரி நடத்தினால் நன்றாக இருக்காது என்றிருக்கிறார் அப்பா. 

அட போப்பா உன் கிண்டலுக்கு அளவே இல்லை என்று சொல்லிவிட்டு அந்த பிரமுகர் சென்று விட்டார்.

அந்த ஊரில் ஹோட்டல் நடத்துபவர் பலகாரங்கள், இட்லி, தோசை, வடைக்கென்று நிறைய மாவு எல்லாம் அரைத்து தயார் செய்து இருக்கிறார். அப்பா அவர்கள் எதுக்கு இவ்வளவு தயார் செய்கிறீர்கள் கச்சேரிக்கு நடக்கும் போது ஆளே இருக்காது, கொஞ்சம் பார்த்து தயார் செய்யுங்கள் என்று சொல்லி இருக்கிறார்.

அவரும் வருடம் வரும் திருவிழாவின் போது கடை போட்டு அனுபவப்பட்டவர் தான். அந்த காலத்தில் நாடகங்களை ஊரே திரண்டு விடிய விடிய பார்ப்பார்கள். அதனால் நல்ல வியாபாரம் நடக்கும். அந்த அனுபவத்தில் அவர் அந்த வருடம் நிறைய தயார் செய்திருக்கிறார். அந்த வருடம் கச்சேரிக்கென்று நன்றாய் விளம்பரம் எல்லாம் செய்திருக்கிறார்கள். சரியான கூட்டம் வந்து சேர்ந்திருக்கிறது. ஊர் பிரமுகர்களுக்கு எல்லாம் ரொம்ப மகிழ்ச்சி. கச்சேரி ஆரம்பித்தது தான் தாமதம். பாடகர் ஆ வென்று ராகம் எடுத்தவுடன், காக்காய் கூட்டத்தில் கல் எறிந்தார் போல மொத்த கூட்டமும் கலைந்து சென்று விட்டது. மேடைக்கு முன்னால் ஏற்பாடு செய்தவர்களை தவிர யாரையுமே காணோம். அவர்களும் வேறு வழியில்லாமல் அமர்ந்திருக்கிறார்கள். மைக்செட்டுக்காரர் எடுபிடிகள் என இன்னும் சிலர். 

சாப்பாடு கடை வைத்திருந்தவர் நொந்து போனார். அடுத்த நாளைக்கு எல்லா பலகாரத்தையும் உறவினர்கள், தெரிந்தவர்கள் என்று எல்லோருக்கும் கொடுத்து அனுப்பினார். வேறென்ன செய்வது வைத்திருக்கவா முடியும்

 அடுத்த நாளைக்கு அந்த பிரமுகர் அப்பாவிடம் உனக்கு எப்படிப்பா தெரிந்தது என்று கேட்டிருக்கிறார். 

நானே மதுரைக்கு சென்ற இடத்தில் அவரது கச்சேரியை பார்த்திருக்கிறேனே என்று சொல்லியிருக்கிறார் அப்பா 

 ஊர் ரசனை, மக்கள் விருப்பம் என்று என்னவென்று தெரியாமல் நிகழ்ச்சி நடத்தினால் இப்படித்தானே இருக்கும்.... 

Wednesday, 12 March 2025

பாசிசமா... பாயாசமா...

பாசிசமா பாயாசமா

 ஒரு மடத்தில் ஆண்டிகள் கொஞ்சம் பேர் படுத்து தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு உலக கவலை எதுவும் கிடையாது. ஏன் அவர்களைப் பற்றிய கவலை கூட கிடையாது. அப்படி இருக்கும்போது அந்த மடம் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது மூன்று புறமும் நெருப்பு சூழ ஆரம்பித்துவிட்டது.

அப்போது ஒரு ஆண்டி மெல்லமாய் சொன்னார் திரிபுரம் தெரியுதே.... அதாவது மூன்று பக்கமும் தீப்பற்றி எரிகிறது என்றார். பக்கத்தில் இருந்த ஆண்டி சொன்னார். அட வர வர நகருவோம் என்றார்.

அதற்கு அடுத்து படுத்துக் கொண்டிருந்த ஆண்டி சொன்னார்.

இதுவும் தான் சொல்ல வாயுந்தான் நோகலையோ என்றார்.

கடைசியாக படுத்திருந்த ஆண்டி கோபமாய் கத்தினார். என்னையா சந்டைக்கடை இரைச்சலில் குடியிருந்த பாடாப்போச்சு...

இந்த கதையை கீழே உள்ள பத்தியோடு ஒப்பிட்டு பார்த்தால், நீங்கள் சுதாரிப்பாகத்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

பாசிஸம் அதிகாரத்திற்கு வந்தபோது பெரும்பாலானோர் கொள்கைரீதியாகவும் நடைமுறையிலும் அதை எதிர்கொள்ளத் தயாராக இருக்கவில்லை. இவ்வளவு தீங்கு விளைக்கும் தன்மையுடனும், இவ்வளவு பதவி மோகத்துடனும், வலுவற்றவர்களின் உரிமைகளை இவ்வளவு அலட்சியம் செய்பவனாகவும், அல்லது அனைவரும் அடங்கி நடக்க வேண்டுமென்று இவ்வளவு ஏங்குபவனாகவும் மனிதன் இருக்க முடியுமென்பதை அவர்களால் நம்பமுடியவில்லை. ஒரு சிலர் மட்டுமே வெடிக்கப்போகும்எரிமலையின் உறுமலை உணர்ந்திருந்தனர்.

- எரிக் ஃப்ராம் (Escape from Freedom என்கிற நூலில்)...

உண்மையில் பாசிசமா பாயாசமா என்ற தலைப்பே கேலிக்குரிய ஒன்றுதான். ஏனென்றால் பாசிசத்தின் கொடுமை என்பதை இன்னும் புரிந்து கொள்ளாத அல்லது புரிய மறுக்கின்ற மக்களாக தான் நாம் இருக்கிறோம் என்பதையே இத்தலைப்பு காட்டுகிறது.

பாசிசத்தின் அடிப்படை தெரியாத அரசியல் தற்குறிகள், அல்லது திடீர் அரசியல் தலைவர்கள், அல்லது அரசியல் பன்னாடைகள் வேண்டுமானால் அடுக்கு மொழிக்காக பாசிசத்தையும் பாயசத்தையும் ஒன்றாக இணைத்து கூறுவார்கள்.

இன்னும் சிலர் பாசிசத்தை பற்றி சில அறிவு ஜீவிகள் அதீதமாக கற்பனை செய்து கொண்டு இதைப் பற்றி அதிகம் பேசுகிறார்கள் என்று கூட நினைக்கக்கூடும். பாசிசம் என்பதை வெறும் அரசியல் அதிகாரத்திற்காக செய்யக்கூடிய அரசு பயங்கரவாத நடவடிக்கை என்று கூட சிலர் நினைக்கலாம்.

 உதாரணத்திற்கு இந்தியாவில் இந்திரா காந்தி 1975 இல் அவசரநிலை பிரகடனம் செய்து, அரசியல் நடவடிக்கைகளை முடக்கி, அரசியல் கட்சிகளை செயல்பட விடாமல் செய்தது, அரசியல் தலைவர்களை கைது செய்தது, சில அரசியல் படுகொலைகள் செய்தது, போலீஸ் அராஜகம், பத்திரிகை சுதந்திரத்தை பறித்தது, போன்ற விஷயங்களை இணைத்து அரை பாசிச நடவடிக்கைகள் என்று கூறுவார்கள் அது ஓரளவுக்கு உண்மைதான் என்றாலும் கூட அது நூற்றுக்கு நூறு பாசிசத்தின் முழு வடிவமாக கொள்ள முடியாது.

 பொதுவாகவே எல்லா இடங்களிலும் தலைதூக்கத் தொடங்கியிருக்கும் பாசிஸத்தின் அறிகுறிகளை ஒரு பட்டியலிட்டு பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் அறுதியிட்டு கூறியிருப்பார்

ஒன்று: ‘ஒரு கடுமையான சமூக நெருக்கடியை நடைமுறையில் இருக்கும் சமூகப் படிநிலைக்கு அச்சுறுத்தலாகக் காண்பது.’

இரண்டு: மிகவும் பரிசுத்தமான உயர்குடி சூப்பர்மேன் பிம்பம் ஒன்றை கற்பனையில் உருவாக்கி, அதன் வழியே தேசிய எழுச்சியை வீரியமாக்குவதற்காக புராண காலத்திய தொன்மங்களை மீட்டெடுப்பது.

மூன்று: ‘தேசிய ஆளும் வர்க்கத்தின் சில பிரிவினரின் ஆதரவோடு மாபெரும் கூட்டு இயக்கம் ஒன்றை நடத்துவது.’

நான்கு: ‘மேலாதிக்கப் போக்கு கொண்ட அராஜக கட்சி ஒன்றின் எழுச்சி.’

ஐந்து: ‘நாட்டுக்கு உள்நாட்டு, வெளிநாட்டு அச்சுறுத்தல்கள் அதிகரித்திருப்பதாக புனைச்சுருட்டுகளைக் கட்டமைப்பது.’ இவை பெரும்பாலும் வகுப்பு, மதம், இனம் சார்ந்ததாகவே இருக்கும்.

ஆறு: ‘முதலாளி வர்க்கத்துக்கு எதிரான உழைக்கும் வர்க்கத்தின் கிளர்ச்சிகளை மூர்க்கத்தனமாக அடக்கி நசுக்கும் அராஜக அரசாங்கம்.’

ஏழு: ‘சுதந்திரமான ஜனநாயகச் சிந்தனை வெளிப்பாடுகளுக்குத் தடை விதிப்பது.’

எட்டு: ‘எதிர்தரப்பினரைப் பொது இடங்களில் வைத்துத் தாக்குவது, ஆயுதங்களோடு வந்து மிரட்டுவது, சில நேரங்களில் கொல்வது.’

ஒன்பது: ‘ஆணாதிக்க மிரட்டல்கள், பெண்ணிய எதிர்ப்பு, ஜாதி வெறித் தாக்குதல்கள் (ஐரோப்பாவிலும் அமெரிக்காவிலும் இவை நிறவெறித் தாக்குதல்கள்) அந்நியர் வெறுப்பு.’

பத்து: ‘மற்றவர்கள் தனக்கு தீங்கு செய்வதற்கு எப்போது தயாராக இருப்பதைப் போன்ற பிரமையில் இருப்பது.’

உலகத்தில் பல நாடுகளில் பொருளாதார நெருக்கடி, அரசியல் ஸ்திரமற்ற நிலை, அரசில் நிலவும் ஊழல்கள், அரசு தேர்தல் முறைகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இன்மை, போன்ற கட்டங்களில் பெரும் முதலாளிகள் தூண்டுதலினால் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையற்ற பிற்போக்கு சக்திகள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி அராஜகம் செய்கின்ற பல நிகழ்வுகளை நினைவுப்படுத்தி பார்க்க வேண்டும்.

இப்பேர்ப்பட்ட சக்திகள் அதீதமான தேசபக்தி என்ற பெயரில் தேசிய வெறியை தூண்டி, அரசு எந்திரங்களான ராணுவம், போலீஸ், நீதிமன்றங்கள், போன்ற அமைப்புகளுக்குள் ஊடுருவி அரசாங்க அதிகாரத்தை கைப்பற்றி, ஜனநாயகத்தையும் முற்போக்கு சக்திகளையும் அழித்தொழித்த நடவடிக்கைகள் பல உண்டு.

 உதாரணத்திற்கு ஜெர்மனியை எடுத்துக் கொள்வோம். முதலாம் உலகப்போரில் படுதோல்வி அடைந்த ஜெர்மனிய நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடி, வேலையின்மை, விலைவாசி உயர்வு போன்ற சூழ்நிலைகளில் தேசிய வெறியை தூண்டிவிட்டு ஹிட்லர் நாசிசம் என்ற பெயரில் பாசிச ஆட்சியை நிறுவினார் என்பது வரலாறு.

அங்கு நாசிஸ்ட்கள் அதிகமாக பேசியது தேசிய வெறி உலகத்தை ஆளப்பிறந்த ஜெர்மனியர்களான ஆரியர்கள் உயர்ந்த இனமென்றும் அங்கிருந்த யூத மக்களுக்கு எதிராக இனவெறியை தூண்டி அதிகாரத்திற்கு வந்தார்கள்.

 அவர்கள் இனத்தின் பெயரால் யூதர்களை அழித்தது மட்டுமல்லாமல், அரசியல் ரீதியாக தங்களது பிரதான எதிரிகளான கம்யூனிஸ்ட்களை வேட்டையாடினார்கள். அதற்காக அவர்களே ரீஸ்டக் என்றழைக்கப்படும் ஜெர்மனி பாராளுமன்றத்தை தீ வைத்துக் கொளுத்தி விட்டு அந்த பழியை கம்யூனிஸ்டுகள் மீது சாற்றி கம்யூனிஸ்ட் கட்சியை தடை செய்து வேட்டையாடினார்கள்.

அங்கு நிகழ்ந்த ஒரு ஊழலுக்கு எதிரான விசாரணையை உடனடியாக நிறுத்திவிட்டு, குற்றம் செய்தவர்களை சுட்டுக்கொன்று, ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அதிதீவிர நேர்மை பேசிய நாசிஸ்ட்கள் தான் ஆட்சிக்கு வந்தவுடன் அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி மிக அதிகமான ஊழல் செய்து பணத்தை சேர்த்தார்கள் என்பதும் வரலாறு.

அதே முன்னுதாரத்தினை பின்பற்றி இத்தாலியில் முசோலினி பாசிச ஆட்சியை நிறுவி அங்குள்ள ஜனநாயக சக்திகள் அனைத்தையும் முடக்கி சர்வாதிகார ஆட்சி நடத்தினார்.. இவர்களின் பொதுவான மூலதனம் வாய் கூசாமல் பொய் சொல்வது. பொய்யையே திரும்பத் திரும்ப சொல்வது, பொய்யை அலங்காரமாக சொல்வது, திரும்பத் திரும்ப பொய் சொல்வதன் மூலம் அதையே உண்மையென எல்லோரையும் நம்ப வைப்பது கடுமையான திட்டமிட்ட பொய் பிரச்சாரத்தை செய்வது. இன்னும் சொல்வதனால் பைத்தியக்காரத்தனமாக கூட பேசுவார்கள், அதை பற்றி வெட்கப்பட மாட்டார்கள், ஆனாலும் இவர்களுக்கு மிகப்பெரிய ஆதரவாளர்கள் யார் என்றால் மேல் தட்டு அறிஜீகள். இந்த அறிவு ஜீவிகள் இவர்கள் சொல்வதை எல்லாம் உண்மை என்பது போல நியாயப்படுத்தி பேசுவார்கள்.

இந்தோனேசியாவில் கம்யூனிஸ்ட் அபாயம் என்ற பெயரில் சுகர்டாவும், வலதுசாரி முஸ்லிம் தீவிரவாத கும்பலும், ஆட்சியை கைப்பற்றி 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை கொன்று குவித்தனர் என்பது வரலாறு. இத்தனைக்கும் உலகில் மூன்றாவது பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாகவும், நிறைய பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாகவும் இருந்தது. மிகப்பெரிய தொழிற்சங்க அமைப்பும், மகளிர் அமைப்புகளும், வாலிபர் சங்கங்களும் கம்யூனிஸ்ட் கட்சியால் வழிகாட்டப்பட்டு பொதுமக்களிடையே மிகப்பெரிய சக்தியாக இருந்தது. அந்த கட்சி இருந்ததற்கான அடையாளம் கூட இல்லாத அளவிற்கு துடைத்தெரிந்து விட்டனர். இந்த பாசிச தாக்குதலுக்கு வலதுசாரி இஸ்லாமிய தத்துவம் மூளையில் ஏற்றப்பட்ட ராணுவமும் இவர்களுக்கு மறைமுகமாக ஆதரவளித்த அமெரிக்க ஏகாதிபத்தியமும் தான் காரணம். மனித உரிமை பேசும் எந்த சர்வதேச அமைப்பும், ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச நீதிமன்றங்களும் வாய்மூடி மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

சிலி நாட்டில் அலண்டே என்றொரு கம்யூனிஸ்ட் தலைவர் பொதுமக்களால் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக இருந்தார். அவரை ஒரு சிஏஏ ஏஜெண்ட் மூலம் கொலை செய்துவிட்டு, பினோசெட் என்ற சர்வாதிகாரி ராணுவ ஆட்சியை பிரகடனப்படுத்தி, சிலி நாட்டில் ஜனநாயகமே இல்லாத அளவுக்கு அழித்துவிட்டு ஒரு பாசிச ஆட்சியை நடத்தினார், அங்கு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஜனநாயக சக்திகளும் துடைத்தெரியப்பட்டன.

அதைப் பற்றி சிலிநாட்டு மக்கள் கவிஞர் பாபுலோ நெருடா எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது.

"அடடா எங்கள் மண்ணிலே தான் எவ்வளவு ரத்தம்....

எதையெதையோ எழுதுங்கள்.

எப்படியோ எழுதுங்கள்.

இலக்கணத்தை பார்த்திருக்க இப்போது நேரமில்லை.. இருப்பதெல்லாம் ஓர் விதி தான்.

வெற்றுத்தாளெடுத்து விஷயத்தை எழுதுங்கள்..

அடடா எங்கள் மண்ணிலே தான் எவ்வளவு ரத்தம்....

இப்படி உலகில் பல நாடுகளில் பாசிசம் தலையெடுத்து வந்தவை பற்றி பார்த்தோம் இந்தியா மட்டும் விதிவிலக்காக இருந்து விடாது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் உடைய ஸ்தாபக தலைவர்களாக இருந்த தாதாபாய் நௌரோஜி, பாலகங்காதர திலகர் போன்றவர்கள் மிகப்பெரிய இந்து வகுப்புவாத சனாதனவாதிகளாக இருந்தார்கள். அவருடைய லட்சியம் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதை விட, இங்குள்ள வர்ணாசிர சனாதன முறை, ஜாதியை கட்டமைப்பு முறை, வலுவாக இருக்க வேண்டும் என்பதே அதிகமாக வலியுறுத்தி வந்தனர்.

உதாரணமாக மராட்டிய பகுதிகளில் பிளேக் நோய் தாண்டவம் ஆடியபோது, பிளேக் நோய்க்கு காரணமான எலிகளை கொள்ள வேண்டும் என்று அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரி கூறிய போது விநாயகரின் வாகனம் மூஞ்சூறு. அதை கொல்லக்கூடாது, இது எங்களுடைய மத நம்பிக்கையில் தலையிடுவதாகும் என்று கடுமையாக எதிர்த்தவர் திலகர். இன்னும் சொல்லப்போனால் விநாயகர் சதுர்த்தி போது பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்து தெருத்தெருவாக ஊர்வலம் நடத்தி இந்து மத வெறியை தூண்டியவர் அவர்தான். அதுவரை இந்தியாவில் இல்லாத விநாயகர் ஊர்வலம் என்பது அப்போதுதான் ஆரம்பித்து, இன்று இந்தியா முழுக்க தெருத்தெருவாக நடந்து கொண்டிருக்கிறது.காங்கிரஸ் கட்சியில் காந்தி, நேதாஜி, நேரு போன்ற படித்தவர்கள் வந்த பிறகு வெகுஜன இயக்கமாக காங்கிரஸ் மாற ஆரம்பித்த பின்னர், சனாதனவாதிகளின் கைப்பிடி காங்கிரஸில் குறைய ஆரம்பித்தது. கம்யூனிஸ்டுகள் நேதாஜி போன்றவர்கள் தீவிரமான மக்கள் இயக்கம் நடத்திய போது அதற்கு எதிராக பிரிட்டிஷார் ரோடு இணக்கம் காட்டியது தான் ஆர்எஸ்எஸ் இயக்கம். ஆர் எஸ் எஸ் இயக்கம் ஆரம்பிக்கும் போது தொண்டர் படை குண்டாந்தடிகள், ராணுவ பயிற்சி, கடுமையான சனாதன சித்தாந்த பயிற்சி இவற்றோடு துவங்கியது தற்செயலான நிகழ்ச்சி அல்ல.

காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த ராஜேந்திர பிரசாத் வல்லபாய் பட்டேல் போன்ற தீவிரமான சனாதனவாதிகள் செல்வாக்கோடு இருந்த நேரம், காங்கிரஸுக்குள்ளும் ஆர்எஸ்எஸ் தனது செல்வாக்கை செலுத்திக்கொண்டிருந்தது என்ற போதிலும், மகாத்மா காந்தி ஹிந்து சனாதனவாதிகளால் கொலை செய்யப்பட்டதால் மக்களிடம் இருந்து வெகுவாக சனாதனவாதிகள் தனிமைப்பட நேர்ந்தது. காங்கிரஸ் கட்சிக்குள்ளும் சனாதன வாதிகளின் செல்வாக்கு குறைந்து, நேரு போன்ற மதசார்பற்ற தலைவர்கள் செல்வாக்கு பெற நேர்ந்தது. ஒருவேளை காந்தி கொல்லப்படாமல் இருந்திருந்தால் சனாதனவாதிகளின் கைப்பிடி எப்பொழுதோ மேலோங்கி கதை தலைகீழாக மாறி இருந்திருக்கும்.

1857 ல் சிப்பாய் கலகம் என்று அழைக்கப்பட்ட முதல் சுதந்திரப் போரின் போது, இந்துக்களும், முஸ்லிம்களும், சீக்கியர்களும் ஒன்று சேர்ந்து முகலாய பேரரசரை இந்தியாவின் பேரரசராக அறிவித்துக் கொண்டு ஒற்றுமையோடு ஆங்கிலேயரை எதிர்த்து போராடினார்கள், இதில் ஏராளமான இந்து ராஜாக்கள் முஸ்லிம் சுல்தான்கள் அடக்கம், அந்த ஒற்றுமையை உடைப்பதற்காக பைராகிகள் என்று அழைக்கப்பட்ட இந்து சாமியார்கள் மூலமாக கிளப்பி விடப்பட்டது தான் பாபர் மசூதி பிரச்சனை, ராமர் பிறந்த இடத்தில் கோயிலை இடித்து விட்டு பாபருக்கு மசூதி கட்டினார்கள் என்று புரளியை கிளப்பி விட்டு பார்த்தார்கள், அது மக்களிடம் எடுபடவில்லை. கிட்டத்தட்ட 90 ஆண்டுகளுக்குப் பிறகு சுதந்திரம் கிடைத்த நேரத்தில் சனாதனவாதிகள் கை மேலோங்கியதால் பாபர் மசூதி பிரச்சனை மீண்டும் தலைக்கு ஆரம்பித்தது. அதுபோல இந்தியா முழுக்க இருக்கக்கூடிய பல மசூதிகள் பல வழிபாட்டுத் தலங்கள் மீது பிரச்சினை கிளப்பி விட்டு இந்து முஸ்லீம் மத பூசல்களை உருவாக்க சனாதனவாதிகளால் முடிந்தது.

1905 இல் நிர்வாக வசதிக்கு என்று கர்சன் பிரபு இந்துக்கள் மிகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளை மேற்கு வங்கம் என்றும், முஸ்லிம்கள்மிகுதிகளாக இருக்கக்கூடிய பகுதிகளை கிழக்கு வங்கம் என்று பிரித்தபோது மக்களை மத ரீதியாக பிரிக்காதீர்கள் என்று கடுமையாக மக்கள் போராட்டமாக நடத்தியதனுடைய விளைவு வங்கப் பிரிவினை கைவிடப்பட்டது. அன்றிருந்த ஒற்றுமை, சுதந்திரம் கிடைக்கக்கூடிய காலத்தில் சிதைந்து போனது என்றால் அதற்கு ஆங்கிலேயருடைய நரித்தந்திரமும் இந்து, முஸ்லிம் சனாதன மத அடிப்படைவாதிகளுடைய பேராசை தான் காரணம்.

ஆக இந்தியா மத ரீதியாக பிளவு பட்ட பின் இந்து அடிப்படை சனாதனவாதிகளான ஆர்எஸ்எஸ்னுடைய திட்டம் செயல்பட ஆரம்பித்தது. ஆர் எஸ் எஸ் என்ற பாசிஸ அமைப்பானது நேரடியாக அரசியலுக்குள் போகாமல் சித்தாந்த அமைப்பாக கடுமையாக தன்னை வளர்த்திக் கொண்டது. அதற்கு மக்களிடையே செயல்பட பல முகமூடிகளைக் கொண்ட அமைப்புகளை உருவாக்கினார்கள். அரசியல் கட்சியாக ஜன சங்கம் செயல்பட்ட போதிலும், அவர்கள் விரும்பிய அளவுக்கு ஆட்சியை கைப்பற்றும் அளவிற்கு வளர முடியவில்லை. காங்கிரஸ் கட்சி நேருவின் தலைமையில் பலமாக இருந்ததும், காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த செல்வாக்கு பெற்று இருந்த இந்து அடிப்படைவாதிகளான ராஜேந்திர பிரசாத், வல்லபாய் பட்டேல் போன்றோர் மறைவுக்கு பின்னர் அவர்களால் அந்த அளவிற்கு ஒரு சக்தி பெற்ற ஒரு மத அடிப்படை வாத தலைவரை காங்கிரஸ் கட்சிக்குள் உருவாக்க முடியவில்லை. எனவே ராஜாஜி போன்ற மத அடிப்படைவாதிகள், வலதுசாரிகள் சுதந்திரக் கட்சி என்ற பெயரில் வெளியேறி விட்டார்கள்.

ஒரு பக்கம் காங்கிரஸ் கட்சிக்குள் தனது செல்வாக்கை ஆழமாக ஊடுருவிக் கொண்டே, பிற கட்சிகளுக்குள்ளும் ஊடுருவக் கூடிய வேலையை அவர்கள் செய்து கொண்டே இருந்தார்கள். வெளியிலே ஜனசங்கம், சுதந்திரக் கட்சி போன்ற வலதுசாரி கட்சிகள் எல்லாம் ஒரு பக்கம் ஒன்றிணைந்து தேர்தலில் சந்தித்துக் கொண்டிருந்தார்கள். 1975 இல் இந்திரா காந்தி இந்தியாவில் நெருக்கடி நிலை பிரகடனம் செய்து சகல அரசியல் நடவடிக்கைகளையும் ஒடுக்கிய போது அரசியல் சூழல் மாறியது. எளிதில் தேர்தலில் வென்று விடலாம் என்று கருதி, அவசரநிலை பிரகடகத்தினை தளர்த்திவிட்டு இந்திரா காந்தி 77 இல் தேர்தலை சந்தித்தது, பழைய காங்கிரஸ், பல்வேறு பிரிவுகளாக பிளவுபட்டு கிடந்த சோசியலிஸ்ட் கட்சியினர், ஜன சங்கம், சுதந்திரக் கட்சி போன்றவர்கள் ஒருங்கிணைந்து ஒரே கட்சியாக ஜனதா கட்சி என்ற பெயரில் தேர்தலை சந்தித்தது.

மக்களின் வெறுப்பை சம்பாதித்த காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்து, ஜனதா கட்சி எளிதில் ஆட்சி அமைத்தது. அதன் பின்னர் தான் ஆர்எஸ்எஸ் தனது சித்து வேலைகளை பிரமாதமாக தொடங்கியது. ஜனதா கட்சி ஆட்சியில் இருந்த பல மாநிலங்களில் தனது ஆர்எஸ்எஸ் ஆட்களை முதலமைச்சராகவும் அதிகாரத்திற்குள்ளும் செல்வாக்கு செலுத்தும் வேலையை செய்தது. உதாரணமாக கற்பூர தாகூர் போன்றவர்கள் தூக்கி எறியப்பட்டு பனாரஸ் தாஸ் குப்தா போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் உத்தரப்பிரதேசத்திலும் இன்னும் சில மாநிலங்களிலும் முதலமைச்சர்களாக மாறினார்கள். அப்போது இவருடைய உள்நோக்கத்தை புரிந்து கொண்ட சரண்சிங் போன்ற முன்னாள் சோசியலிஷ்கள் ஜனதா கட்சிக்குள் இரட்டை உறுப்பினர் பதவி இருக்கக் கூடாது. அதாவது ஆர் எஸ் எஸ் சிலும் உறுப்பினராக இருந்து கொண்டு ஜனதா கட்சியிலும் உறுப்பினராக இருக்கக் கூடாது என்ற பிரச்சினையை கொண்டு வந்தார்கள். ஆர் எஸ் எஸ் காரர்கள் மிகத் தெளிவாக அதை மறுத்து நாங்கள் இரண்டிலும் இருப்போம் என்று வாஜ்பாயி அத்வானி போன்ற ஆர்எஸ்எஸ் காரர்கள் தங்கள் கொள்கையில் விடாப்பிடியாக நின்றார்கள். விளைவு ஜனதா கட்சி பிளவுபட்டு ஆட்சி கவிழ்ந்தது. இரண்டே ஆண்டுகளில் ஆட்சி கவிழ்ந்து, என்பதில் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் இந்திரா காந்தி ஆட்சியை கைப்பற்றி செல்வாக்கோடு இருந்தார். ஆர் எஸ் எஸ் காரர்கள் தாங்கள் போதிய அளவு பலம் பெற்று விட்டோம் என்ற நம்பிக்கையோடு, பாரதிய ஜனதா கட்சி என்ற புதிய கட்சியினை துவக்கினார்கள். விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள் போன்ற பல்வேறு துணை அமைப்புகளை பெரிய அளவிற்கு விரிவுபடுத்திக் கொண்டு சென்றார்கள்.

இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் தத்துவ ரீதியாக மதசார்பற்று கொள்கையில் பெரிய அளவிற்கு நம்பிக்கை கொண்ட தலைவர்கள் காங்கிரஸில் இல்லாமல் போனதினுடைய விளைவு மீண்டும் பாபர் மசூதி பிரச்சனை பெரிதாக கிளம்பியது.

மண்டல் கமிஷன் அறிக்கை வெளிவந்தவுடன் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு வந்துவிடுமோவென்ற அச்சம் தலையெடுக்கிறது. உடனே புதிய ஜாதி கட்சிகள் முளைக்கத் தொடங்குகின்றன: மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, லாலு யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள், முலாயம் யாதவின் சமாஜ்வாடி கட்சி. தெளிவாக காய் நகர்த்திய ஆர்எஸ்எஸ் அத்வானி மூலமாக பாபர் மசூதியை அகற்றிவிட்டு, ராமர் கோவில் கட்ட வேண்டும் இந்தியா முழுக்க ரத யாத்திரையை துவக்கி நடத்தியது. ஆர் எஸ் எஸ் திட்டம் புரியாத, அரசியல் அனுபவம் அற்ற ராஜீவ் காந்தி சீலிடப்பட்டிருந்த பாபர் மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த அனுமதி கொடுத்தார்.

ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட பின் பெரிய அளவுக்கு மக்களை திரட்ட கூடிய அளவுக்கு செல்வாக்கு பெற்ற தலைவர் இல்லாத மிகப்பெரிய வெற்றிடம் காங்கிரசுக்கு ஏற்பட்டது. இதுவரை காங்கிரசிற்குள்ளிருந்து, சகல சுகங்களையும், அனுபவித்துக் கொண்டு செல்வாக்கு பெற்றிருந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் மெல்ல மெல்ல தங்கள் சுயரூபத்தை காட்டிக் கொண்டு வெளிவர ஆரம்பித்தார்கள்.

உதாரணமாக உத்தரப்பிரதேசத்தில் பிஜேபி முதலமைச்சராக இருந்த கல்யாண் சிங் அரசு கவிழ்க்கப்பட்டவுடன் வேக வேகமாக பறந்தோடி சென்ற மிக பழுத்த காங்கிரஸ்காரரான ஆர் வெங்கட்ராமன் பிஜேபிக்கு ஆதரவாக சாகும் வரை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

காங்கிரஸாலேயே வளர்ந்து ஜனாதிபதி பதவி வரை உயர்ந்த பிரணாப் முகர்ஜி ஆர்எஸ்எஸ் மாநாட்டிற்கு வேக வேகமாக ஓடினார். இதுவரை இழுபறியாகவே இருந்த பாபர் மசூதி பிரச்சனையில் ஆர் எஸ் எஸ் காரர்களுக்கு ரகசியமாக உதவி செய்து, அந்த மசூதியே தரைமட்டமாக்குகிற வேலையை காங்கிரஸ் பிரதமராக இருந்த பிவி. நரசிம்மராவ் செய்தார்.

நேற்று வரை காங்கிரஸ்காரர்களாக தங்களை பிரகடனப்படுத்திக் கொண்ட பலர்,இன்று பிஜேபியின் மேலிருந்து கீழ் வரை சகல பதவிகளிலும் ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள்.பல மாநில கட்சிகள், தங்களை மிகப் பெரிய சோசியலிஸ்ட் களாக, முற்போக்கு வாதிகளாக, மதசார்பற்ற சக்திகளாக பீற்றிக் கொண்டிருந்த பல கட்சிகள் பிஜேபி உடன் தேர்தல் உடன் பாடு கண்டு ஆட்சி அமைப்பதில் பங்கேற்று மெல்ல மெல்ல கரைந்து காணாமல் போய்க் கொண்டிருக்கிறார்கள். பிஜேபி எல்லா மாநிலங்களிலும் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றிக் கொண்டே இருக்கிறது.

35 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்து 100 ஆண்டுகளாக செல்வாக்கு பெற்றிருந்த கம்யூனிஸ்டுகள் மேற்கு வங்கத்தில் துடைத்தெறியப்பட்டிருக்கிறார்கள். பல ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த திரிபுரா வில் கம்யூனிஸ்ட் கட்சி கானாமல் போயிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு இருக்கக்கூடிய கம்யூனிஸ்டுகள் பலர் பிஜேபியில் ஐக்கியமாய் இருக்கிறார்கள் என்றால் தத்துவார்த்த பயிற்சி அந்த கட்சியினர் மத்தியில் எந்த லட்சணத்தில் இருந்து இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது

நாட்டில் நிலவும் ஊழலை ஒழிக்க திடீர் காந்தியவாதி அன்னா ஹசாரே, கிரண்பேடி, அரவிந்த் கெஜ்ரிவால், மற்றும் யோகா சாமியார்கள் மற்றும் அறிவுஜீவிகள் மக்கள் இயக்கங்கள் நடத்தி, அதற்கு மீடியாக்கள் அதிக விளம்பரம் கொடுத்து, கார்பரேட்களும் ஆதரவளத்திட அமோகமாய் பிஜேபி ஆட்சியை கைப்பற்றியது. அன்னிய நாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள அனைத்து கறுப்புப் பணத்தையும் கைப்பற்றி ஆளுக்கு பதினைந்து லட்சம் கொடுப்போம் என்று அளந்து விட்டனர். ஆனால் பதவியை கைப்பற்றிய பின்னர் வரலாறு காணாத அளவுக்கு ஊழல் செய்து பணத்தை சேர்த்தார்கள் என்பதும் வரலாறு.

அரசாங்க எந்திரங்களான வருமான வரித்துறை, அமலாக்கத்துறை, நிதித்துறை, நீதித்துறை உள்ளிட்ட அத்தனை அரசு எந்திரங்களையும் பயன்படுத்தி அதிகபட்ச ஊழல் செய்து பணம் சம்பாதித்தது பாசிஸ்ட்களின் சாதனைதான்.

இந்த வேடிக்கையும் நாம் ஏற்கனவே ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சியில் பார்த்தது தான்.

இதனை எதிர்த்து கட்சிகள் உறுதியாகப் போராட முடியாததற்கு காரணம், கிட்டத்தட்ட அனைவருமே ஊழலில் திளைத்திருப்பதும் அரசு எந்திரத்தின் பிடியில் சிக்குவோம் என்ற பயம் தான் காரணம்.

சில கட்சிகள் பிஜேபிக்கு எதிராக அரசியல் செய்யும் போது, அவர்கள் மீது வருமானவரித்துறை, ஊழல் தடுப்பு துறை, அமலாக்கத்துறை பாய்ந்து நடவடிக்கை எடுத்தவுடன் அவர்கள் பிஜேபி பக்கம் சாய்ந்து விடுவதும், அந்த வழக்குகள் அப்படியே நீர்த்துப்போவது அல்லது விடுவிக்கப்படுவது என்பது கிட்டத்தட்ட அன்றாட நிகழ்ச்சிகள் ஆகிவிட்டன.

ஆர் எஸ் எஸ் அகண்ட பாரதம் என்ற தனது லட்சியத்தை வலுவாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இலங்கை வரை, பாகிஸ்தானில் இருந்து பர்மா வரை எல்லா பகுதிகளையும் ஒன்றிணைத்த ஒரே இந்துராஷ்டம் அமைப்பது தனது லட்சியம் என்று தனது கொள்கையை வலுவாக கொண்டு சென்று கொண்டிருக்கிறது. அவர்கள் ராணுவத்திலும் போலீசிலும் அரசு நிர்வாகங்களிலும் நீதிமன்றங்களிலும் சகலவிதமான அரசு அமைப்புகளிலும் முழுமையாக ஊடுருவி தங்களது செல்வாக்கை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஒரே நாடு, ஒரே மதம், ஒரே மொழி, ஒரே தேர்தல் என்று ஏக லட்சியத்தின் கீழ் இந்த நாட்டை கொண்டு வர திட்டமிட்டு செயல்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா என்பது பல்வேறு தேசிய இனங்களைக் கொண்ட, பல்வேறு மொழிகளை கொண்ட, பல்வேறு பல்வேறு கலாச்சாரங்களை கொண்ட, வேற்றுமையில் ஒற்றுமை என்ற வகையில் செயல்படக்கூடிய ஒரு ஒன்றிய அரசு என்பதை மறந்து ஒரே நாடு என்று தேசியவெறியை தூண்டி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த வெறிக்கு அவர்கள் எளிதாய் தூபமிட்டு கொண்டிருப்பது ஹிந்து வெறி. முஸ்லிம்கள் மொகலாயர்கள் ஆங்கிலேயர்கள் இந்தியாவை வந்து ஆட்சி செய்து நாசம் செய்து விட்டார்கள். இங்குள்ள சனாதான அமைப்பை சீரழித்து விட்டார்கள் என்று கடவுள் நம்பிக்கையை வைத்துக்கொண்டு எல்லாரிடமும் விஷ விதையை விதைத்து அறுவடை செய்யக்கூடிய அளவிற்கு வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். ஒரு சிறிய சந்தர்ப்பத்தை கூட அவர்கள் விட்டுவிடுவதில்லை.

முழுக்க இருக்கக்கூடிய பல்லாயிரக்கணக்கான மசூதிகளை இடித்துவிட்டு கோயில் கட்ட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள் இதற்கு அரசு நிறுவனங்கள் ஏன் நீதித்துறை கூட துணை போய்க்கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடக்கூடாது

இந்தியா முழுக்க இதுவரை மத கலவரங்களால் கொல்லப்பட்ட முஸ்லிம்கள் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இடிக்கப்பட்ட கட்டிடங்களும் நாசப்படுத்தப்பட்ட சொத்துகளுக்கும் கணக்கு கிடையாது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது இந்தியா முழுக்க நடைபெற்ற கலவரங்களில் ஏராளமான முஸ்லிம்கள் கொல்லப்பட்டது ம், பாதிக்கப்பட்டுருக்கு காவல்துறையும் நீதிமன்றங்களும் பாதுகாப்பளிக்க தவறியதை நாம் கண்கூடாக காண்கிறோம்.

கோத்ரா ரயில் நிலையத்தில் ரயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தை காரணமாக கொண்டு மாநில முழுக்க இந்து மத வெறியர்கள் நடத்திய நரவேட்டை அக்கிரமங்களை நாடு அறியும். மணிப்பூர் மாநிலத்தில் அரசு நிர்வாக இயந்திரமே கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக, அங்குள்ள ஒரு பிரிவு மக்களுக்கு எதிராக நடத்திய மனிதவேட்டை, அக்கிரமங்கள் இன்று வரை ரத்த சாட்சியாகவே உள்ளன.

மாட்டுக்கறி வைத்திருந்தார்கள் என்று சொல்லி முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுவதும் அதை அரசு வேடிக்கை பார்ப்பதும் சகஜமான விஷயம் ஆனால் பார்ப்பன முதலாளிகள் பெரிய அளவில் உலக அளவில் மாட்டு கறியை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வார்கள் இதுதான் இங்குள்ள முரண்.

உச்சநீதிமன்றமே தலையிட்டும் கூட புல்டேசர்களைக் கொண்டு முஸ்லிம்களுடைய வீடுகளை, ஆக்கிரமிப்புகள் என்று உபி முதல்வர் இடித்து தள்ளுவதும், நாங்களும் அதை செய்வோம் என்று மராட்டிய முதல்வர் கூறுவதும் அன்றாட நடைபெறக்கூடிய செயல்களாக மாறிவிட்டன.

ஒரு ராணுவத்தில் பணியாற்ற கூடிய ஒரு நபர் சொந்த காரணங்களினால் கொலை செய்யப்பட்டால் கூட உடனே முன்னாள் ராணுவத்தினர் ஆர் எஸ் எஸ் அல்லது பிஜேபி என்ற பெயரோடு நாங்கள் நினைத்தால் எத்தனை இடத்தில் வேண்டுமானாலும் குண்டு வைப்போம் என்று பகிரங்கமாக தமிழகத்தில் மிரட்டி கொண்டிருக்கிறார்கள் என்றால் அது ஒன்றும் விளையாட்டு கதை அல்ல...

மத நல்லிணக்கம், திராவிட மண் என்று பேசிக் கொண்டிருக்க கூடிய இதே தமிழகத்தில், திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தர்காவில் உள்ள உணவு வழிபாட்டு முறையை வைத்துக்கொண்டு மதுரையிலேயே பிஜேபி /ஆர் எஸ் எஸ் ஒரு கலகம் செய்ய முடிகிறது என்றால் இது எளிதில் விட்டு விட்டுப் போகிற விஷயம் இல்லை.

அவர்களுக்கு ஆதரவாக அரசு நிர்வாகத்தில் உள்ளோர் நிலை எடுப்பதும் , மதசார்பற்ற சக்திகள் போராட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பதும் இங்கு நடைபெறுகிறது என்றால், தமிழக அரசு நிர்வாகத்தில் காவல்துறையில் ஆர்எஸ்எஸினுடைய பங்கு செல்வாக்கு எந்த அளவிற்கு இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

பூண்டியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் ஒரு மாணவி சொந்த பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டால் அதையே வைத்துக் கொண்டு கிறிஸ்தவ மதத்திற்கு எதிராக திட்டமிட்டு பொய் பிரச்சாரம் செய்ய பிஜேபி காரர்களால் முடிகிறது என்றால் நாம் எந்த இடத்தில் இருக்கிறோம் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்

ஒரு ஆர் எஸ் எஸ் காரன் பள்ளியில் மாணவர்களை திரட்டி வைத்துக் கொண்டு ஆசிரியர்கள் துறை இயக்குனர்கள் அரசு நிர்வாக உதவியோடு கேவலமாக மதப் பிரச்சாரம் செய்ய முடிகிறது என்றால் அரசு எந்திரம் மதச்சார்பற்ற தன்மையை உதிர்த்துக் கொண்டிருக்கிறது அல்லது ஆர் எஸ் எஸ் காரர்கள் நன்றாக ஊடுருவி இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

இவை யாவும் இங்கொன்றும் அங்கொன்றுமாக நடந்து கொள்ளுகிறது விஷயம் இல்லை. இந்தியா முழுக்க மதத்தின் பெயரால், ஜாதியின் பெயரால் கலவரங்களை நடத்தி ஒரு பாசிச ஆட்சியை நிறுவுகிற லட்சியத்தில் ஆர்எஸ்எஸ் விடாப்பிடியாக முன்னேறி வருகிறது. அவர்கள் அத்தனை துறைகளிலும் ஊடுருவி செல்வாக்கு பெற்று வருகிறார்கள் என்பதை நாம் கண்டு கொள்ளவில்லை என்றால் நம் தலையில் நாமே கொள்ளி வைத்துக் கொள்கிறோம் என்று தான் அர்த்தம்.

ஒரு ஜெர்மானிய கவிஞன் கூறினான்

 அவர்கள் என் எதிர்த்த வீட்டுக்காரனை யூதன் என்று அழைத்துச் சென்றார்கள். நான் ஏன் என்று கேட்கவில்லை ஏனென்றால் நான் யூதன் இல்லை

....

அவர்கள் என் பக்கத்து வீட்டுக்காரனை தொழிற்சங்க வாதி என்று இழுத்துச் சென்றார்கள்.

நான் ஏன் என்று கேட்கவில்லை.

ஏனென்றால் நான் தொழிற்சங்கவாதி இல்லை.... அவர்கள் எதிர்த்த விட்டு காரனை கம்யூனிஸ்ட் என்று கழுத்தைப் பிடித்து கொண்டு சென்றார்கள்.

நான் ஏன் என்று கேட்கவில்லை.

ஏனென்றால் நான் கம்யூனிஸ்ட் இல்லை.... ஐயகோ இன்றைக்கு என்னை பிடித்து செல்கிறார்கள். எனக்காக கேட்க யாருமே இல்லையே........ 

ஆயுசுக்கும் கூட வரவா....

  ஆத்தோரம் போற புள்ள ஆயுசுக்கும் கூட வரவா....  வேலையில்லா வெட்டி பசங்க வெரட்டி வருவாங்க.. குடிக்க காசுக்காக கொலைகூடசெய்வாங்க...  குரங்கு...